POST: 2025-04-21T09:49:36+05:30

தினத் தந்தி
19.2.25
பக்கம் 7

அவ்வையின் தமிழமுது

தஞ்சைத் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன், பல்வேறு நூல்க ளுக்கு எழுதிய முன்னுரைகளை அவரது மகனான அவ்வை அருள், தொகுத்து நூலாக்கி இருக்கிறார்.

அவ்வை நடராசன் எழுதிய முன்னுரைகள், அவர் தமிழ் மொழி யில் ஆழங்கால்பட்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன.

பிறரைப் பற்றிப் புகழ்ந்து எழுதினாலும், தனது கருத்துகளில் அவ்வை நடராசன் உறுதியாக இருந்தார் என்பதையும்,

முன்னுரைக்கான நூல்களில் தான் ஏற்றுக் கொள்ளாத கருத்துகள் இருந்தால் அதனை மென்மையான முறையிலும், அனைவரும் காணும் வகையிலும் எடுத்துரைத்தார்
என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

கி.ஆ.பெ.விசுவநாதம், பாவலர் பாரதிதாசன், கலைஞர் கருணாநிதி, டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன், வைரமுத்து போன்ற ஆளுமைகள் குறித்து அவ்வை நடராசன் எழுதிய குறிப்புகளும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

பொன்னேரி பிரதாப் தேர்ந்தெடுத்து வழங்கிய புகைப்படங்கள் இந்தநூலுக்கு கூடுதல் சிறப்பைத் தருகின்றன.

அவ்வை நடராசன் எழுதிய குறிப்புகளைக் கொண்ட இந்நூல், தமிழ் இலக்கிய கலைக்களஞ்சியம் போலத் திகழ்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *