தமிழ்நாடு அரசு சார்பில் 11.01.2024, 12.01.2024 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அயலகத் தமிழர் தினம் 2024 கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் 12.01.2024 வெள்ளிக்கிழமை அன்று 2021, 2022ஆம் ஆண்டுகளுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகளை இலக்கியம், இலக்கணம், மொழியியல் ஆகிய பிரிவுகளில் கனடா பாலசுந்தரம் இளையதம்பி, மலேசியா மனோன்மணி தேவி, கொரியா ஆரோக்கியராஜ், சிங்கப்பூர் மா.அன்பழகன், கனடா சு. தீனதயாளன்,புதிய வேல்ஸ் மதன் எஸ். ராஜா ஆகியோருக்கு மாண்புமிகு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களும் வழங்கிச் சிறப்பித்தனர்.
உடன் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ஒளவை அருள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்திக்குறிப்பு
தமிழ்நாடு அரசு சார்பில் 2024ஆம் ஆண்டுக்கான ‘அயலகத் தமிழர் தினம்’ 11.01.2024, 12.01.2024 ஆகிய இரண்டு நாள்கள் சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அயலகத் தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் 2021, 2022ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழ்ச் சங்க விருதுகள் 12.01.2024 அன்று வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மாண்புமிகு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்களும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களும் கலந்து கொண்டு விருதாளர்களுக்கு ரூ.2இலட்சம் மதிப்பிலான காசோலையையும் தகுதியுரையையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
2021ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது கனடாவைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் பாலசுந்தரம் இளையதம்பி அவர்களுக்கும்
இலக்கண விருது மலேசியாவைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் மனோன்மணி தேவி அவர்களுக்கும்
மொழியியல் விருது கொரியாவைச் சேர்ந்த தமிழறிஞர் முனைவர் செ.ஆரோக்கியராஜ் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
2022ஆம் ஆண்டுக்கான இலக்கிய விருது சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழறிஞர் மாசிலாமணி அன்பழகன் அவர்களுக்கும்
இலக்கண விருது கனடாவைச் சேர்ந்த தமிழறிஞர் சு.தீனதயாளன் (எ) சொல்லாக்கியன் அவர்களுக்கும்
மொழியியல் விருது வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த தமிழறிஞர் மதன் எஸ்.ராஜா அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் ஒளவை ந.அருள் மற்றும் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment