POST: 2023-12-11T08:05:44+05:30

வழிகாட்டும் கலங்கரை விளக்கம்

தேசியக் கவிஞர் பாரதியாரின் பெரும்பணிகள் இமயம் போன்றவை.

புதிய உண்மைகளை உணர்ந்து, புதிய பாதையைத் தேர்ந்து, முற்றிலும் புதிய அணுகுமுறைகளைக் கைக்கொள்ளுமாறு மக்களை விழிப்படையச் செய்வதே அவருடைய தலையாய கடமை.

தேசியக் கவி பாரதி அளப்பரிய நெஞ்சுரத்துடன் போரிட்டார்.

சமூக நீதிக்கு எதிரான போர் இன்னமும் நிறைவடையவில்லை என்ற போதிலும், பாரதியும் நம்முடன் இல்லை என்ற போதிலும், அவர் நமக்களித்த சிந்தனைப் போர்க்கலன்கள் அவர் தொடுத்த போரினை வெற்றிகரமாக முடித்து வைப்பதற்குப் போதிய அளவில் கூர்மழுங்காமல் ஒளிர்கின்றன.

அத்தகைய போரில் வாகை சூடுவது ஒன்றுதான் நமக்கெல்லாம் பாரதியின் 142 ஆம் பிறந்தநாள் வழிகாட்டும் ஒளியாகத் திகழும்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *