POST: 2023-10-17T10:12:53+05:30

தினசெய்தி – 15 10 2023
பக்கம் எண் : 4

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 183

ஷேக்ஸ்பியர் மொழியாக்கப் பன்முகப் பார்வை

முனைவர் ஔவை அருள்

தில்லிப் பல்கலைக்கழகத்தில் யான் 28 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய
முனைவர் பட்ட ஆய்வின் முப்பத்து மூன்றாம் பகுதி வருமாறு:

Since Ekambaranathan resorts to condensing, as well as expanding, his translations have omissions, as well as additions, without missing the spirit of the original.

Hence, he called them adapted translations. This method gives larger latitude for the translator.

He has resorted to localization of names that almost sound identical with the original names or have a semantic similarity.

For example, ‘Caliban’ is Kaliyan’ and ‘Toby’ is ‘Malayappan’ (indication of size) and ‘Ariel’ is ‘Kathavaryan’ (of the Air).

Likewise characters and places also have been identified with their Indian context, as for example, ‘Dido’ with ‘Sakuntala’ (in their desertion of their lovers) and ‘Tunis’ is ‘Singapore’ (in their remoteness).

The winter’s Tale has been translated as Marikkathai and full justice has been rendered to the story part.

But the play reads more or less like a Tamil Play with Chera, Chola and Pandiya kings.

The renderings are good, even though the version looks indigenous.

It is again interesting to note that a few other eminent professors of English have also attempted translating Shakespeare in Tamil.

C.R.Myleru’s Othello and Prof. K.R.Srinivasa Iyengar’s Macbeth are noteworthy contributions.

Vaduvoor Duraiswamy Iyengar, a very, if not the most, popular writer of detective fiction, has adapted King Lear in poetic form as Mangayar Pattu (1916), the hypocrisy of woman, a reference to the treachery of Goneril and Regan.

It has been translated in ‘Akaval’ metre which approximates to English blank verse.

It is a play meant not for the stage, but for closer reading, and has a happy ending like Nahum Tate’s version of King Lear.

SHAKESPEARE PANORAMA:
(A COMPARATIVE SPECTRUM OF DIFFERENT
TAMIL TRANSLATIONS)

To have a better and wholesome view of Shakespeare’s translations in Tamil, a comparative juxtaposition of translation pieces, and some famous lines from the various plays of Shakespeareare necessary.

Some of the translations also show how what could be achieved verbally could have been achieved through actor, in the plays.

For example, in some of Pammal Sambanda Mudaliar’s works, action provides for the visual language, while the verbal suffers from shrinkage.

Perhaps this may also have been an excuse for Aru. Somasundaram’s who has substantial number of translations to his credit.

His work has omissions that may glare and dismay a researcher, who seeks for optimum fidelity, but may pass for a normal citizen.

The objective is to pool in one place the wide range of translations/translators as they encountered and appropriated Shakespeare and this needs to be more expository and less critical.

ரோமியோ (ம) ஜீலியட்

நெஞ்சே! பொறுபொறு, நீள்குண திசையில்
அஞ்செஞ்சோதி அலர்கதிர் பரப்பிப்
பேரொளியொன்று நன்னீர்மையி யெழுந்தது.
அதுவே,
ஆரெழிற் பரிதி பேரோசு சீலை !
இகல்நின்ற மதிதரு மின்னலை யொழிக்கப்
பகலவன் வந்த பான்மையை யுணர்ந்தேன்.
வாராய் நிறையெழில் வயங்கிய சுடரே!
நேரார் இயல்பின் என் நெஞ்சினை வாட்டிய
விண்மதி நின்னெழில் விளக்கங்கண்டு,
தன்னொளி மழுங்கித் தாழ்ந்து நின்றனனால்
நீயே,
இந்துவை வென்ற சுந்தரவதனச்
செந்திரு வாயினை சிறை செயுங்கன்னி
மாடத் திருத்தல் மரபோவுரையாய்?
காதல் மடந்தாய்! ஆ! என்னன்பே !
சிறியேன் உளநிறை கழிபெருங் காதலை
அறியாய் ஐயே ! பொறுபொறு மனனே !
அணியெழிற் பாவை மணியிதழ் விரிந்து
மொழிசொல முன்னியும் மொழியாது அமர்ந்தனன்
வாக்கெழு மாற்றம் நோக்கால் உணர்ந்தனன்
பேதையேற்கு அன்றம் மாதர் கண்ணோக்கம்
விண்மீன் ஒளியென மெல்லொளி பரப்பும்
நோக்கினை மருவினர் ஆக்கமெய் தினரே
செம்மலர் முகத்திற் சேர்ந்தன மெல்விரல்
மெல்விரல் மேலதோர் வியன்பூம் பட்டுடை
பட்டுடை செய்தவம் யான் செய்திலனே. 1 (I காட்சி II)

Subject material for fateful issues is ready in the longstanding feud between the Montagues and the Capulets.

The handsome hero, Romeo, of sprightly wit, trained in all manly accomplishments, brave, yet gentle, but without a sufficient purpose in life, a slave of emotion, his soul quests for love and fancies that it has found its desire in Juliet, the heroine of ‘fourteen summers’, who is impulsive, incomparably lovely with boundless devotion and delicate mind.

There premise ensured that there was a blend of their romance and passion, in the famous balcony scene, an everlasting sculpture in words, with Romeo on the rope ladder and Juliet at the balcony opening the window, making the sun pale into insignificance.

She opens her eyes to eclipse the day. The outpourings of Romeo, expressed with such poetic beauty, could rarely find a parallel in world literature.

However, this has been rendered beautifully in Tamil with such poetic excellance by Swami Vibulanandha, that the original author would feel proud.

Though an ascetic, Swami Vibulanandha with deep interest in the stirring Sangam literature, has effectively communicated the intense amorous passion binding the young lovers.

The opening exclamation ‘Nenjay Poru, Poru’ – sums up the expectancy of a lover, anxious to catcha glimpse of one who stands at the window, like sunrise at midnight.

The translation is superb and ‘Indhuvai Venra Sundaravadhani’ has a unique charm.

The translation seems to be ‘unpremeditated’ and has all the splendour of a spontaneous outburst.

The sample translation whets one’s appetite and makes lovers of literature wish that Swami Vibulanandha had rendered the full play in Tamil.

பலகணிக்காட்சி

ரோமியோ : தவிப்பதுபோதும் ! மனமே தாங்கிடு!
மெல்லப் புலரும் கிழக்குத் திசையில்
மின்சுடர் வெள்ளம் மெருகொடு பாய்ந்தது.
பலகணி வழியாய் என்பார்வையில் தெரிந்தது.
பட்டொளிச் சுடரிடும் சூரியப் பேரொளி,
எழுக செங்கதிர்! இறைப்பாய் ஒளியலை!
வெளுத்த உடலொடும் வெறுப்பு மனத்தொடும்
மங்கை எழிலுக்கு மங்கிப் பசலையாய்
அடங்கிய நிலவோடு நீதோழியாய் அமைவதா!
அம்புலி புனைந்திடும் முகில் துகிலான
முகத்திரை யதனை முழுவதும் விலக்குக!
பொன்னான காதலி! புலம்புகின்றேன் யான்
என்னுடை அன்பை இன்னுமா அறிந்திலை!
உதடுகள் திறந்து உரைத்திட நினைத்தும்
ஊமையாய் நின்றாய் ஒன்றும் பேசிலை!
பண்மொழி ஏதும் பகராய் எனினும்
உன்கண் மொழியுரையைக் காதலால் உணர்ந்தேன்!
இந்த மொழியை இவனே அறிவான்!
விண்ணொளிர் கன்னம் வெண்மலர்க்கையால் துடைத்தனை
பொன்னுறையாகிய கையுறையாக யான் பொருந்தியிருந்தால்
கன்னம் தொட்டுக் களிப்படை வேனே!

பன்னிரண்டு இரவு
வயேலா : உங்கள் வாசலில் இழந்த காதலின் சின்னமாக என்னை
நிறுத்துங்கள்! என் ஆன்மாவை ஒலிவியாவை வீட்டிற்குள்
அழையுங்கள்! புறக்கணிக்கப்பட்ட காதலைப் பற்றிக் கவிதை
எழுதுங்கள். அவற்றை நள்ளிரவில் உரக்கப் பாடுங்கள்.
எதிரொலிக்கும் மலையடி வாரங்கள் ‘ஒலிவியா‘ என்ற
உங்கள் பெயர் விண்ணுக்கும் மண்ணுக்கும் எதிரொலிக்கட்டும்.
நீங்கள் ஓய்வு கொள்ளக் கூடாது. ஆனால் என்மீது நீங்கள்
இரக்கப்பட வேண்டும். !
(அரு. சோமசுந்தரம்)

நான் தங்கள் வீட்டையே என் கடிசையாக்கிக் கொள்வேன்.

இரவும்
பகலும் தங்களைப் பற்றிய முகமன் பாடலை மூன்று காலங்களிலும்
பாடுவேன்!

உங்கள் பெயரையும் அன்பின் பெருக்கையும் பலப்பல
சந்தங்களில் வைத்துப் பல பாடல்களைப் பக்கமேளமின்றிப் பாடிக் கொண்டிருப்பேன்.

அவ்வொலி அருகிலுள்ள மலைகளில் தாக்கி
எதிரொலியாக வந்துகொண்டிருப்பதாலும். அவ்வொலி காற்றில் மிதந்து
நாலா பக்கங்களிலும் சென்று பலசுதிகளில் ஒலித்துக் கொண்டிருப்பதால் தங்கள் தூக்கம் கெட்டுவிடும்படிச் செய்வேன்

இன்னும் எனது செயல்களால் கடைசியில் தங்களுக்கு என்மீது இரக்கம் உண்டாகும்படிச் செய்வேன். !
(இரா. ஏகாம்பரநாதன்).

– முனைவர் ஔவை அருள்
தொடர்புக்கு dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *