POST: 2023-08-25T10:42:58+05:30

ஐ நா சபை வாழ்த்துப் பெற்ற மக்கள் சந்திப்பு நாளிதழ் – 24 8 2023 பக்கம் எண் : 1

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் பகுதியில் தமிழக அமைச்சரை வரவேற்ற நாசிக் தமிழ்ச் சங்கத் தலைவர்

நாசிக் 2023,ஆகஸ்ட் 24,

கடந்த ஆகஸ்ட் 22 – ம் தேதி மாலை நாசிக் தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.சாமிநாதன் அவர்களையும், இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை முனைவர் திரு.அருள் அவர்களையும், நாசிக் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.பா. ராமமூர்த்தி அவர்கள் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்கள்.

மேலும் அமைச்சர் அவர்களுக்கு தமிழ்ச்சங்கம் சார்பில் நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

தமிழ்ச்சங்கத்தின் வளர்ச்சிப் பணிகள் மேலும் பொலிவு பெற வாழ்த்துக்களை தெரிவித்தார் தமிழக அமைச்சர்.

தமிழ்ச்சங்கம் வளர்ச்சி அடைய உதவிகள் செய்யப்படும் என்பதையும் அமைச்சர் நாசிக் தமிழ்ச்சங்கத்திடம் உறுதி அளித்தார்.

மேலும் அமைச்சர் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம் நினைவு பரிசாக வழங்கி பெருமை பாராட்டியது நாசிக் தமிழ்ச்சங்கம்.

பிரதிநிதிகள் ஏராளமானோர் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.

– ஸ்ரீதர்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *