தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110இன் கீழ் அறிவித்த அறிவிப்பிற்கிணங்க,
(01.08.2023) தலைமைச் செயலகத்தில்,
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்
மு.பெ. சாமிநாதன் தலைமையில், தமிழரசு அச்சகத்தின் மூலமாக “வைக்கம் போராட்ட நூற்றாண்டு மலர் வெளியிடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ்,
செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் த.மோகன்.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள்.
தமிழ் இணையக் கல்விக் கழக இணை இயக்குநர் ரெ.கோமகன், மூத்த பத்திரிக்கையாளர் ப.திருமாவேலன்,
தமிழறிஞர் பழ.அதியமான்
மற்றும் செய்தித்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment