சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
சென்னை
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம்
இணைந்து நடத்தும்
31ஆம் ஆண்டு
தெய்வச் சேக்கிழார் விழா அழைப்பிதழ்
2023, ஜூலை 27,28,29 மற்றும் 30
வியாழன், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு
ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர்,
எண்.24/13A, தெற்கு நிழற்சாலை, வாசுதேவ நகர் விரிவு,
திருவான்மியூர், ( திருவான்மியூர் பேருந்து நிலையம் அருகில் )
தெய்வச் சேக்கிழார் விழா
முப்பத்தியோராம் ஆண்டு
பேரன்பில் நிறைந்த பெரியீர்.
வணக்கம்,
அமைதி, ஆனந்தம், உயர்ந்த குறிக்கோள் இவற்றோடு உலக மாந்தர் அனைவரும் குறிப்பாக தமிழர்கள், நல்லன எல்லாம் பெற்று வாழ்வாங்கு வாழ. உதவும் இலக்கியங்களுள் தெய்வச் சேக்கிழார் அருளிச் செய்த பெரியபுராணம் முதன்மையானது.
நம் மக்களைப் பிணித்துள்ள சாதி, சமயப் பிணக்கு, சுயநலம், நம்பிக்கையின்மை, பிறர்நலம் பேணாமை இவைகளை முற்றிலுமாகக் களைந்து நாட்டின் ஒருமைப்பாடு. உலக சகோதரத்துவம் காட்ட வல்லது பெரியபுராணம்.
இத்தகைய மாபெரும் இலக்கியச் செல்வத்தை நமக்கு அளித்த சேக்கிழார் பெருமானுக்கு, சென்னைச் சேக்கிழார் ஆராய்ச்சி மையம் ஆண்டுதோறும் கவின்மிகு விழா எடுத்து வருகிறது.
இவ்வாண்டு இவண் அமையப் பெற்றுள்ள நிகழச்சி நிரல் வண்ணம் தெய்வச் சேக்கிழார் விழா
சென்னை. திருவான்மியூர். ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெறும்.
தாங்கள் சுற்றமும், நட்பும் சூழ வந்திருந்து செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் கொள்க என அன்புடன் அழைக்கிறோம்.
நீதியரசர் எஸ்.ஜெகதீசன்
தலைவர்
சேக்கிழார் ஆராய்ச்சி மையம்.
28 7 2023 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 – 7.30
விருதளிப்பு விழா
இறைவணக்கம் :
குடந்தை V.இலட்சுமணன் ஓதுவார்
வரவேற்புரை : நீதியரசர் திரு. எஸ். ஜெகதீசன் தலைவர், சேக்கிழார் ஆராய்ச்சி மையம்
விழாத் தலைமை : :
வேந்தர்
முனைவர் கோ. விசுவநாதன் நிறுவனர் – தலைவர் VIT மற்றும் தமிழியக்கம்
மகிழ்வுரை :
முனைவர் ஒளவை ந.அருள்
இயக்குநர்.
தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்நாடு அரசு
விருது வழங்குதல்
திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள் பெருமன்றம்
தமிழவேள் பி.டி.இராஜன் நினைவு அறக்கட்டளை மற்றும் நீதியரசர் எஸ். நடராசன் அறக்கட்டளை
கோவை திரு.சஞ்சய் ஜெயவர்த்தனவேல் நிறுவியுள்ள செவாலியர் டாக்டர் ஜி.கே.தேவராஜூலு அறக்கட்டளை
அமெரிக்கா – டாக்டர் அன்புச்செல்வி அப்புலிங்கம் நிறுவியுள்ள பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன், இராசம்மாள் அறக்கட்டளை
தி.தி. செந்தில்குமார் ( அமெரிக்கா ) நர்மதா பதிப்பகம் சென்னை, நிறுவியுள்ள திருக்குவளை
வை. இராம. சீநிவாசன் மங்கையர்க்கரசி நினைவு அறக்கட்டளை
சீர்காழி நா. லட்சுமி நாராயணன் அவர்கள் நிறுவியுள்ள சீர்காழி நாகலிங்கம் மரகதம் சுவேதா நினைவு அறக்கட்டளை இணைந்து வழங்கும்
சிறந்த பேராசிரியருக்கான சேக்கிழார் விருதும் பொற்கிழியும் பெறுபவர்:
முனைவர் தெ.முருகசாமி
சிறந்த சமய அறிஞருக்கான சேக்கிழார் விருதும் பொற்கிழியும் பெறுபவர்:
முனைவர் மு.சிவச்சந்திரன்
சிறந்த சமய சமூகத்தொண்டருக்கான சேக்கிழார் விருதும் பொற்கிழியும் பெறுபவர்:
மனிதநேய மாமணி திரு.G.வரதராஜன்
சிறந்த ஓதுவாருக்கான சேக்கிழார் விருதும் பொற்கிழியும் பெறுபவர் :
குடந்தை V.இலட்சுமணன் ஓதுவார்
வாரந்தோறும் சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் 4.00 மணி வரை தேவார இசைப் பயிற்சி வகுப்பு சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தில் நடைபெறுகிறது.
எல்லோரையும் அன்புடன் அழைக்கிறோம்.
ஊன டைந்த வுடம்பின் பிறவியே
தான டைந்த வுறுதியைச் சாருமால்
தேன டைந்த மலர்ப்பொழில் தில்லையுள்
மாந டஞ்செய் வரதர்பொற் றாள்தொழ.
குறிப்பு:
திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து விழா மண்டபத்திற்கு அன்பர்கள் வந்துசெல்ல வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Add a Comment