தமிழ் வளர்ச்சித் துறை
தேனி மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின்
நூற்றாண்டு விழா
ஆட்சிமொழிக் கருத்தரங்கம்
அழைப்பிதழ்
நாள் : திருவள்ளுவராண்டு 2054, ஆடி-05,
21.07.2023, வெள்ளிக்கிழமை
இடம் : தேனி, கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லூரி,
கொடுவிலார்பட்டி, தேனி.
பெருந்தகையீர், வணக்கம்.
அங்கமெல்லாம் தமிழ் சுமந்த அறிஞருக்கு
இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாநகரில்
நடக்கும் வண்ணமிகுந்த திருவிழா!
மைல் கணக்கில் நடந்து வரும் நைல் நதி போல்
வருடக் கணக்கைக் கடந்து வரும் வன்மொழியாம்
செம்மொழித் தமிழை உயர்த்திப் பிடிக்கும் உரையரங்கத் தனி விழா !
பனி உறைந்த பூவாக, கனி மறைந்த விதையாக
தமிழ் நிறைந்த இதயங்களைத் தட்டி எழுப்பும் தமிழ் ஒலி விழா !
வண்ணப் பறவைகளாய்
வந்துசேரும் அலுவலர்களுக்கு
எண்ணக் கனவுகளாய்
அன்னைத் தமிழை நிறைக்கும்
ஆட்சிமொழிப் பெருவிழா!
ஏரோடும் மண்ணில் வேரோடும் விழுதோடும் பிறந்து –
தமிழைச் சீரோடும் சிறப்போடும் வளர்த்து மகிழ்ந்த
முத்தமிழறிஞர் கலைஞரின் முதல் நூற்றாண்டு எழில் விழா !
தமிழ்நாட்டிலுள்ள நூறு கல்லூரிகளில்
தழைக்கவுள்ள ஆட்சிமொழிக் கருத்தரங்கின் அணி விழா !
கண்டு, கேட்டு, உண்டுயிர்த்து, உற்றறிந்து ஒருநாள் முழுவதும்
ஆட்சித் தமிழை உணர்வோடு கேட்க வாருங்கள் !
ஒளவை அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை.
நிகழ்ச்சி நிரல்
மு.ப
10.00 வருகைப்பதிவு
மு.ப
10.00-11.00 தமிழ்த்தாய் வாழ்த்து
வரவேற்புரை திரு. பெ.இளங்கோ
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர், தேனி மாவட்டம்
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு
விழா ஆட்சிமொழிக் கருத்தரங்க
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து
விழாப் பேருரை
திருமதி ஆர்.வி.ஷஜீவனா இ.ஆ.ப., அவர்கள்
மாவட்ட ஆட்சியர், தேனி மாவட்டம்.
சிறப்புரை
முனைவர் ந.அருள் அவர்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநர், சென்னை.
வாழ்த்துரை
தமிழ்ச்செம்மல் தேனி சீருடையான் அவர்கள்
எழுத்தாளர், தேனி
நன்றியுரை
திரு. இரா.நல்லதம்பி அவர்கள்
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தேனி
மு.ப
11.00-11.45 முத்தமிழறிஞர் கலைஞர்
நிகழ்த்திய செம்மொழிச்
செயற்பாடுகள்
கவிஞர் பாரதன் அவர்கள்
செயலாளர், தேனி மாவட்டத் தமிழியக்கம்
மு.ப
11.45-12.00 தேநீர் இடைவேளை
மு.ப
12.00-12.45 காலந்தோறும் தமிழ்
ஆட்சிமொழி வரலாறு
முனைவர் இரா.தமிழ்ச்செல்வி அவர்கள்
உதவிப் பேராசிரியர்
ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரி, கம்பம்
பி.ப
12.45-1.30 குறிப்புகள் வரைவுகள்
எழுதுதல் தொடர்பில்
தீர்வுகள்
முனைவர் பெ. சந்திரா அவர்கள்
மேனாள் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்
(ம) மதுரை உலகத் தமிழ்ச்சங்க இயக்குநர்
பி.ப
1.30-2.00 உணவு இடைவேளை
பி.ப
2.00-2.45 அரசுப் பணியாளர்களும்
ஆட்சி மொழிச் சட்டமும்
திரு. ஆ.முத்துக்குமார் அவர்கள்
முதுகலைத் தமிழாசிரியர்,
அரசு மாதிரி மேனிலைப்பள்ளி, உத்தமபாளையம்.
பி.ப
2.45-3.30 கணினித் தமிழ்
பொறிஞர் எ. மகேந்திரன் அவர்கள்
வலைத்தள அமைப்பாளர், தேனி
பி.ப
3.30-3.45 தேநீர் இடைவேளை
பி.ப
3.45-4.30 மொழிப்பயிற்சி
புலவர் ச.ந. இளங்குமரன் அவர்கள்
நிறுவுநர், வையைத் தமிழ்ச்சங்கம், தேனி
பி.ப
4.30-5.15 பங்கேற்பாளர்கள் கலந்துரையாடல்
அளப்பறியா கோபுரமே!
மருதப் பூக்கள் வனப்புடைய மனத்தோனே!
கலைஞர் கோவே!
களைப்பறியா பொதியமலைக் காற்றே!
காலமெல்லாம் உம்மைக் கைதொழுது வாழ்த்துவோமே!
எங்கும் தமிழ் !

Add a Comment