POST: 2023-07-18T08:53:24+05:30

தமிழ் வளர்ச்சி மற்றும்
செய்தித் துறை

தமிழ்நாடு நாள் – ஜூலை-18

நிகழ்ச்சி நிரல்

நாள்: 18.07.2023, செவ்வாய்க்கிழமை,

காலை 10.30 மணி

இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்28), மாநிலக் கல்லூரி, சென்னை-05.

தமிழிசை
(தமிழ்நாடுஇயல், இசை, நாடக மன்றம்) :

தமிழ்த்தாய் வாழ்த்து

வரவேற்புரை: முனைவர் இரா.இராமன்
முதல்வர், மாநிலக் கல்லூரி (தன்னாட்சி), சென்னை – 05.

முன்னிலை:
மரு. இரா.செல்வராஜ், இ.ஆ.ப.,
அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி (ம) செய்தித் துறை

திரு.த.மோகன், இ.ஆ.ப.,
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை

கருத்துரை:

திரு. ஆழி செந்தில்நாதன் – “
எழுக தமிழ்நாடு”

முனைவர் ம.இராசேந்திரன் –

“வாழ்க தமிழ்நாடு’

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்.

திரு. சுப.வீரபாண்டியன் –

“வளர்க தமிழ்நாடு”

சமூக நீதிக் கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர்.

சிறப்புரை:
திரு.பி.கே.சேகர்பாபு. அவர்கள்
மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்

திரு. மா.சுப்பிரமணியன். அவர்கள்

மாண்புமிகு மருத்துவம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
மற்றும் கட்டுரை, பேச்சுப் போட்டிகளில்
வெற்றி பெற்ற மாணவர்களுக்குப்
பரிசுகள் வழங்கி விழாப் பேருரை :

திரு. மு.பெ.சாமிநாதன். அவர்கள்
மாண்புமிகு தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர்

நன்றியுரை: முனைவர் ந.அருள்
இயக்குநர்,
தமிழ் வளர்ச்சித் துறை

நாட்டுப்பண்

செய்தி வெளியீடு எண்:1409
நாள்: 17.07.2023

“தமிழ்நாடு நாள்” விழாவை முன்னிட்டு 18.07.2023 அன்று அனைத்து மாவட்டங்களிலும் பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சி நடைபெறும்

தமிழ்நாடு நாள் ஜூலை 18 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. கடந்த
ஆண்டு (2022) சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற
நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
அவர்கள் கலந்து கொண்டார்.

விழாவில் தமிழ்வளர்ச்சித் துறையின்
சார்பில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டது.

நடப்பு ஆண்டில் எதிர்வரும் ஜுலை 18ஆம் தேதி அனைத்து
மாவட்டங்களில் “தமிழ்நாடு நாள்” குறித்து பள்ளி, கல்லூரி மாணவ,
மாணவியர்கள் பங்குபெறும் மாபெரும் பேரணி நடைபெறவுள்ளது.

இப்பேரணியில் மாணவ, மாணவியர்கள் தமிழ்நாடு குறித்த சிறப்பை
எடுத்துரைக்கும் விதமாக பதாகைகளை ஏந்திச் செல்வார்கள்.

அதேபோன்று “தமிழ்நாடு நாள்” முக்கியத்துவத்தை இளைய
தலைமுறையினரும் அறியும் வகையில், அனைத்து மாவட்டத்
தலைநகரங்களிலும் சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

18.07.2023 முதல் 23.07.2023 வரை அனைத்து மாவட்ட
தலைநகரங்களில், இச்சிறப்பு புகைப்படக் கண்காட்சி நடைபெறும்.

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்கள்
இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பு செய்வார்கள்.

சென்னை, மாநிலக் கல்லூரியில் 18.07.2023 அன்று நடைபெறும்
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், மாண்புமிகு அமைச்சர்
பெருமக்கள் கலந்து கொண்டு தமிழ்த்தாய் சிலைக்கு மாலை அணிவித்து
மரியாதை செலுத்தவுள்ளனர்.

மேலும், தமிழ்நாடு நாள் கருத்தரங்கில் “வளர்க தமிழ்நாடு” எனும்
தலைப்பில் திரு. சுப.வீரபாண்டியன் அவர்களும், “வாழ்க தமிழ்நாடு”
எனும் தலைப்பில் முனைவர் மா.ராசேந்திரன் அவர்களும், “எழுக
தமிழ்நாடு” எனும் தலைப்பில் திரு. ஆழி செந்தில்நாதன்
அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு நாள் உருவான வரலாறு குறித்த
சிறப்புகளை பொதுமக்கள் அறியும் வண்ணம், சிறப்பு புகைப்படக்
கண்காட்சி நடைபெற உள்ளது.

எனவே, மாணவ / மாணவியர்கள், பொதுமக்கள் அனைவரும்
“தமிழ்நாடு நாள்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *