POST: 2023-06-23T12:11:59+05:30

தினசெய்தி – 23 6 2023
பக்கம் எண் : 4

கலைஞர் நூற்றாண்டு விழா

தமிழ் வளர்ச்சித்துறை அலுவலகத்தில் எல் ஈ டி திரையில் தினம் ஒரு திருக்குறள்
இயக்குனர் அருள் தொடங்கி வைத்தார்

சென்னை
ஜூன் 23 –

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

எனும் குறள்நெறிக்கேற்ப எழும்பூரில் உள்ள தமிழ்ச் சாலையில் அமைந்துள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் நாள்தோறும் ஒரு திருக்குறளை முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உரையுடன் எண்மியத் திரை வாயிலாக காட்சிப்படுத்திட எல் ஈ டி திரை ஒன்று 22.06.2023 வியாழக்கிழமை அன்று பொருத்தப்பட்டது.

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் தொடங்கி வைக்க தமிழ் வளர்ச்சி இயக்கக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

சிறப்பு விருந்தினராக தென்காசி திருவள்ளுவர் கழகத்தின் மூத்த உறுப்பினர் டாக்டர் பத்மானந்தன் அவர்கள் கலந்து கொண்டார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *