POST: 2023-06-19T10:29:16+05:30

மொழி ஆய்வுக்கூடத் திறப்பு விழா

வாரணாசி, ஜூன் 10 (என்ஐஎஸ்):

காசி இந்து பல்கலைக்கழகத்தில் உள்ள இந்திய மொழிகள் துறையில் தமிழ் மொழி ஆய்வுக்கூடம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில், தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன், மொழி ஆய்வுக்கூடம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையிலிருந்து வருகை புரிந்த தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் ஆர்.செல்வராஜ், இ.ஆ.ப.,

மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் ஆகியோர் ஆய்வுக்கூடத்தைத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் இந்திய மொழித்துறை தலைவர் பாபாவி மற்றும் பிற துறைகளின் தமிழ் தலைவர்கள் முன்னிலையில் மராத்தி பேராசிரியர் முனைவர். பிரமோத் பட்வால், இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த விஷால் சேத்ரி, சம்பூர்ணானந்த் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் அமித் தாபா மற்றும் பாபவி ஆகியோருடன் ஆய்வு மாணவர்களும் கலந்து கொண்டனர்.

காசிக்கு வருகை புரிந்திருந்த செயலாளரும், இயக்குநரும், மறைந்த மகாகவி பாரதியின் இல்லத்திற்குச் சென்று, 97 வயதான பாரதியின் உறவினரையும், பேத்தியையும் சந்தித்தனர்.

இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள மொழி ஆய்வுக்கூடம், தமிழ் பேசாத மக்களுக்கு தமிழ் மொழியைக் கற்பிக்க உறுதுணையாய்த் திகழும்.

மேலும் இந்தியாவின் வளர்ச்சியடைந்த மொழிகளைப் போல, இந்தியாவின் தொன்மை வாய்ந்த மொழியான தமிழ் மீது மாநில அரசு ஆர்வம் காட்டி வருகிறது.

இதைப் போன்றே, நேபாளி மொழியை ஊக்குவிக்க நேபாள மொழி பேசும் அரசு நிர்வாகத்துக்கும் உரிய எண்ணம் ஏற்பட்டிருந்தால் சிறப்பானதாக அமைந்திருக்கும் என்பதைப் பார்வையாளர்கள் நன்குணர்ந்துள்ளனர்.

இது தொடர்பாக டார்ஜிலிங் மக்களவை உறுப்பினர் திரு. இராஜு பிஸ்டாவைத் தொடர்பு கொள்ள முயற்சி மஆனால், தொடர்பு கொள்ள இயலவில்லை.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *