POST: 2023-05-27T09:35:21+05:30

கவின்மிகு காட்சியரங்கம்

19.04.2023, புதன்கிழமை அன்று மதியம் சென்னையிலுள்ள போயசு தோட்டத்தில் வனப்பாக எழுப்பப்பட்டு சிகரமாயத் திகழ்ந்த அண்ணல் சிவந்தி ஆதித்தனாரின் நினைவகத்திற்கு பொன்னேரி பிரதாப்புடன் சென்று வணங்கி வந்தேன்.

நினைவகத்தில் அரிய ஒளிப்படங்களையும், நினைவுப்பரிசுகளையும், பாராட்டுத்தகுதிகளையும் அலங்காரமாக அணி செய்வது அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளது.

எல்லா வெற்றிகளுக்கும் முத்தாய்ப்பு வைத்தார் போல் சிவந்தி ஐயாவை
இரண்டாம் பராக்கிரமன் என்ற திருப்பெயரை அப்பகுதி மக்கள் அவருக்குச் சூட்டியதற்கொப்ப தென்காசி ஆலயத்தின் திருக்கோபுரத்தைப் புதுப்பித்து வரலாற்றில் வைர எழுத்தாக நம் அனைவரின் நெஞ்சில் பொறிக்கப்பட்டுள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *