POST: 2023-04-29T07:35:14+05:30

தமிழ் வளர்ச்சித் துறை

தமிழ்க் கவிஞர் நாள்-
2023

பாவேந்தர் பாரதிதாசன்
132ஆவது பிறந்தநாள்

பெருந்தகையீர்,

வணக்கம்.

கத்துகடல் பாடும் முத்து நகரத்தில் சித்தம் இனிக்கும் செந்தமிழ்த் திருவிழா!

நாவலரும் பாவலரும் நயந்தேத்தும் நயனுடையார், பொன்னை விடப்
பொலிவுடையார், பொதியம்போல் வலிவுடையார். புத்துலகச் சிற்பி
புரட்சிக்கவிஞரின் புகழ்போற்றிப் பரவும் பூரிப்புப் பெருவிழா!

பாவாண்ட பாவேந்தர் பன்முகமும் பளிச்சிடவே, நாவாண்ட நல்லறிஞர்
நல்விருந்து படைக்கின்ற நற்றமிழ்க் கலைவிழா!

பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவோ வேறெதுவோ எனமயங்கும்
கங்குகரையற்ற கவிதைகளின் மூலவரை – முப்பொறியும் இனிக்க முத்தமிழால்
முத்தமிடும் முக்கனிச் சுவைவிழா!

‘தமிழ்க் கவிஞர்கள் திருநாள்” என்று தமிழ்நாட்டரசு உச்சிமேல் வைத்து மெச்சிப்
பாராட்டும் தன்மானத் தமிழ் விழா!

அழகழகுச் சிப்பிகளால் முத்தளித்து, ஆடி வரும் அலைகளால் உப்பளித்து, தூய
பெயர்பெற்றுத் துலங்கும் தொன்மைமிகு தூத்துக்குடி நகரில் நிகழ்கிறது இந்த
வண்ணமயமான வசந்த விழா!

பூங்காவில் புகுந்துவரும் தென்றல் அல்ல நாங்கள்: புயலென்று புரிந்திடுவீர்”
என்று பூவுலகை அதிர்வித்துப் புதுமை படைக்கின்ற பெண்ணுலகைப்
பெருமைசெய்யும் வண்ணம், இவ்வாண்டுப் பாவேந்தர் பிறந்தநாள் விழா
தூத்துக்குடி மகளிர் கல்லூரியில் மாண்புற மலர்கிறது.

இயல் நடக்கிறது: இசை மணக்கிறது; ஆடகச் செம்பொன்னாய் நாடகத் தமிழ்
வந்து நற்புலவர் நாவரங்கத்தில் ஒளிர்கிறது!

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறிந்து ஒருநாள் முழுவதும் உவகைக் கடலாட
உணர்வாளர் வாருங்கள்!

ஆயிரம் பூக்களை அன்பளாவிய அகத்தில் சுமந்தபடி-
பாயிரம் போலே பார்வைகள்தோறும் பரவசம் கமழ்ந்தபடி-
காத்துக் கிடப்போம்- தூத்துக்குடியில் தங்களை வரவேற்க!

தேனரங்கம்

முற்பகல் 9.30-11.00

: ‘பத்மஸ்ரீ‘கலைமாமணி டாக்டர் சீர்காழி
கோ.சிவசிதம்பரம் குழுவினர்

தொடக்கவிழா

: முற்பகல் 11.00 11.30

தலைமை
மருத்துவர் கி. செந்தில் ராஜ் இ.ஆ.ப.,
மாவட்ட ஆட்சியர். தூத்துக்குடி மாவட்டம்

முன்னிலை
: திரு. ஏ.பி.சி.வீ. சொக்கலிங்கம்
தாளாளர். ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரி, தூத்துக்குடி

வாழ்த்துரை

: திருமதி விஜயா தாயன்பன்
உறுப்பினர் – செயலாளர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம்.

வரவேற்புரை

: திரு.மு.சம்சுதீன்
இயக்குநர் (பொ), மதுரை உலகத் தமிழ்ச் சங்கம்

நோக்கவுரை

: ஒளவை அருள்
இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை

கருத்தரங்கம்

: முற்பகல் 11.30 – 1.30

தலைமை

: திரு.பே. சங்கரலிங்கம்

தலைப்பு
புதுவையில் புறப்பட்ட புதியதோர் தீப்பிழம்பு

புதுவை போற்றும் இளசை
திரு.க. சிவகுருநாதன்

தமிழியக்கம்-
முனைவர் இரா. குணசேகரன்

புரட்சிக் கவியின் புரட்சிக் கவி
முனைவர் சி. ஜாக்சன்

பாட்டரங்கம்

பிற்பகல் 2.00-3.00

தலைமை

கவிஞர் நெல்லை ஜெயந்தா

தலைப்பு
பாவேந்தர் பார்வையில்

அன்னை மொழி நேசி
கவிஞர் கங்கை மணிமாறன்

ஆசையாய்க் காதலி
கவிஞர் சேரை.ப. பாலகிருஷ்ணன்

இல்லறம் பேணு
முனைவர் க. சுப்புலட்சுமி

ஈட்டி போல் செல்
கவிஞர் தஞ்சை இனியன்

நன்றியுரை

: திருமதி செ. கனகலட்சுமி
தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர். திருவாரூர் மாவட்டம்

தொகுப்புரை
: திருமதி மு. செண்பககாசி

நாட்டுப்பண்

கன்னற் பொருள் தரும் தமிழே
நீ ஓர் பூக்காடு; நானோர் தும்பி !

– பாவேந்தர் பாரதிதாசன்

செய்தி வெளியீடு எண் : 788

தமிழ் வளர்ச்சித் துறை
நாள் : 27.04.2023

கத்துகடல் பாடும் முத்து நகரத்தில்
சித்தம் இனிக்கும் செந்தமிழ்த் திருவிழா !

நாவலரும் பாவலரும் நயந்தேத்தும் நயனுடையார்,
பொன்னை விடப் பொதியம்போல் வலிவுடையார்,
பொலிவுடையார்,

புரட்சிக்கவிஞரின் புகழ்போற்றிப் பரவும் பூரிப்புப் பெருவிழா !
புத்துலகச் சிற்பி

பாவாண்ட பாவேந்தர் பன்முகமும் பளிச்சிடவே, நாவாண்ட நல்லறிஞர்
நல்விருந்து படைக்கின்ற நற்றமிழ்க் கலைவிழா !

பொங்குமலர்க் கமலத்தின் புதுமதுவோ வேறெதுவோ எனமயங்கும்
கங்குகரையற்ற கவிதைகளின் மூலவரை முப்பொறியும் இனிக்க
முத்தமிழால் முத்தமிடும்
முக்கனிச் சுவைவிழா !

“ தமிழ்க் கவிஞர்கள் திருநாள் ‘ என்று தமிழ்நாட்டரசு உச்சிமேல் வைத்து மெச்சிப் பாராட்டும் தன்மானத் தமிழ் விழா !

அழகழகுச் சிப்பிகளால் முத்தளித்து, ஆடி வரும் அலைகளால் உப்பளித்து, தூய பெயர்பெற்றுத் துலங்கும் தொன்மைமிகு தூத்துக்குடி நகரில் நிகழ்கிறது இந்த வண்ணமயமான வசந்தவிழா !

‘ பூங்காவில் புகுந்துவரும் தென்றல் அல்ல நாங்கள்; புயலென்று புரிந்திடுவீர் ‘ என்று பூவுலகை அதிர்வித்துப் புதுமை படைக்கின்ற பெண்ணுலகைப் பெருமைசெய்யும் வண்ணம், இவ்வாண்டுப் பாவேந்தர் பிறந்தநாள் விழா தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கலைக் கல்லூரியில் மாண்புற மலர்கிறது.

29.04.2023 சனிக்கிழமையன்று முற்பகல் 9.30 மணிமுதல் 11.00 வரை பத்மஸ்ரீ கலைமாமணி டாக்டர் சீர்காழி கோ.சிவசிதம்பரம் குழுவினரின் இசையரங்கம் நிகழ்ச்சி நடைபெறும்.

முற்பகல் 11.10 மணிமுதல் 11.30 வரை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்ற உறுப்பினர் செயலாளர் திருமதி விஜயா தாயன்பன் முன்னிலையில் நடைபெறவிருக்கும் தொடக்க விழாவிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க உள்ளார்கள், மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் (பொ) திரு.சம்சுதீன் அவர்கள் வரவேற்புரையும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர்.ந.அருள் அவர்கள் நோக்க உரையும் ஆற்ற உள்ளார்கள்.

முற்பகல் 11.30 மணிமுதல் பிற்பகல் 1.30 மணிவரை “ புதுவையில் புறப்பட்ட புதியதோர் தீப்பிழம்பு ” எனும் தலைப்பில் நடைபெறவிருக்கும் கருத்தரங்கத்தில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு.பே.சங்கரலிங்கம் அவர்கள் தலைமை உரையாற்ற உள்ளார், “ புதுவை போற்றும் இளசை ” எனும் தலைப்பில் சோழ மண்டலத் தமிழ் இலக்கிய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் திரு.க.சிவகுருநாதன் அவர்களும், “ தமிழியக்கம் ” எனும் தலைப்பில் கலைப் பண்பாட்டுத் துறை மேனாள் இணை இயக்குநர் முனைவர். இரா.குணசேகரன் அவர்களும், “ புரட்சிக் கவியின் புரட்சிக் கவி ” எனும் தலைப்பில் வ.உ.சி கல்லூரி உதவிப் பேராசிரியர் முனைவர் சி.ஜாக்சன் அவர்களும் உரையாற்ற உள்ளனர்.

பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை நடைபெறவிருக்கும் கவியரங்கத்தில் திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா அவர்கள் தலைமையில் “ பாவேந்தர் பார்வையில் ” எனும் தலைப்பில் கவியரங்கம் நடைபெறவுள்ளது.

” அன்னை மொழி நேசி ” எனும் தலைப்பில் கவிஞர் கங்கை மணிமாறன் அவர்களும்,” ஆசையாய்க் காதலி ”எனும் தலைப்பில் சேரன்மாதேவி தமிழ்ப் பேரவைத் துணைத் தலைவர் கவிஞர் சேரை.ப.பாலகிருஷ்ணன் அவர்களும்,” இல்லறம் பேணு ” எனும் தலைப்பில் தூத்துக்குடி எ.பி.சி மகாலட்சுமி மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் க.சுப்புலட்சுமி அவர்களும்,” ஈட்டிப் போல் செல் ” எனும் தலைப்பில் கவிஞர் தஞ்சை இனியன் அவர்களும் கவிப்பாட உள்ளார்கள்.

திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி நன்றியுரை ஆற்றவுள்ளார், ஊடகவியாளர் மு.செண்பககாசி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவுள்ளார்.

இயல் நடக்கிறது; இசை மணக்கிறது; ஆடகச் செம்பொன்னாய் நாடகத் தமிழ் வந்து நற்புலவர் நாவரங்கத்தில் ஒளிர்கிறது !

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறிந்து ஒருநாள் முழுவதும் உவகைக் கடலாட உணர்வாளர் வாருங்கள் !

ஆயிரம் பூக்களை அன்பளாவிய அகத்தில் சுமந்தபடி-
பாயிரம் போலே பார்வைகள்தோறும் பரவசம் கமழ்ந்தபடி-
காத்துக் கிடப்போம்-

தூத்துக்குடியில் தங்களை வரவேற்க !
பாவேந்தர் புகழ் பாட !

– தமிழ் வளர்ச்சி இயக்குநர்

வெளியீடு :

இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை – 600 009

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *