POST: 2023-04-24T08:32:59+05:30

பிறந்த நாள் புகழ் வணக்கம்
24.04.1936

தில்லை நடவரசர் நட அசைவே நானிலத்தின் இயக்கமென்பார்
ஔவை நடராசர் நாவசைத்தால் நற்றமிழும் நடனமிடும்
முல்லை மலர்ச் சிரிப்பால் எமை ஆளும் முத்தமிழின் வேந்தே
என்றும் நும் நினைவில்

கண்ணன்
அருள்
பரதன்.

தினமலர் பக்கம்
24.4.2023
இதே நாளில் அன்று

ஏப்ரல், 24, 1936

திருவண்ணாமலை மாவட்டம்,

செய்யாறில், அவ்வை துரைசாமி லோகம்மாள் தம்பதிக்கு மகனாக, 1936ல், இதே நாளில் பிறந்தவர் நடராசன்.

இவரின் தந்தை நற்றிணை, சிலப்பதி காரம், திருவருட்பா உள்ளிட்டவற்றுக்கு உரை எழுதிய தமிழறிஞர்

. தந்தையின் வழியில் இவரும் தமிழ், ஆங்கில இலக்கி யங்களில் ஆர்வமாக இருந்தார்.

மதுரை தியாகராஜர் கல்லுாரியில், எம்.ஏ., தமிழ்; சென்னை பச்சையப்பன் கல்லுாரியில் முனைவர் பட்டம் பெற்றார்.

பல கல்லுாரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றிய இவர், டில்லி வானொலி நிலையத்தில், அறிவிப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றினார்.

தமிழக செய்தி மக்கள் தொடர்புத் துறையின் துணை இயக்குநர், தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் பண்பாட்டுத் துறை செயலர், தமிழ்ப் பல்கலை துணை வேந்தர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

வள்ளலார், தமிழர் கலைகள் உள்ளிட்ட தலைப்பு களில் ஆய்வு நுால்களை எழுதினார்.

பன்னாட்டு கருத்தரங்குகளில் பங்கேற்ற இவர், ‘

பத்மஸ்ரீ, கலை மாமணி உள்ளிட்ட விருதுகளை பெற்றவர்.

தமிழறிஞர்களால் பாராட்டப்பட்ட இவர், தன், 87வது வயதில், 2022, நவ., 21ல் மறைந்தார்.

பேச்சாலும், எழுத்தாலும், தமிழுக்கு பெருமை சேர்த்த தமிழறிஞர் பிறந்த தினம் இன்று.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *