சென்னைக் கிறித்தவக் கல்லூரி (தன்னாட்சி)
தமிழியல் ஆய்வு மன்றம்
உரையரங்கு -4
பொருள்
மொழிபெயர்ப்பின் பயனும் பங்கும்
பொழிஞர்
முனைவர் ந.அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை
நாள்: 15/12/2022 வியாழக்கிழமை
முற்பகல் 11.40 மணி
இடம் : ஆண்டர்சன் அரங்கம்
தினசெய்தி – 16 12 2022
பக்கம் எண் : 2
தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தமிழியல் ஆய்வு மன்றக் கூட்டம்
தமிழ் வளர்ச்சித்துறையின் இயக்குநர் ந அருள் பங்கேற்பு
சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லுரியில் இயங் கும் தமிழ்த் துறை விழுமியப்பெருமையும் புலமை முற்றிய மரபும் கொண்டது. தமிழ்த்துறையானது தனித்துறையாக இக் கல்லூரியில் கடந்த 52 ஆண்டுகளாகப் பெருவளர்ச்சி பெற்று வருகிறது.
தமிழ்த் துறை வாயிலாக மொழிபெயர்ப்பின் பயனும் பங்கும் என்ற தலைப்பில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநர் முனைவர் ந. அருள் சிறப்புப் பொழிவாற்றினார்.
அப்பொழிவில், தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தலைசிறந்த எதிர்காலம் காத்துக் கொண்டிருக்கிறது எனவும் தமிழ்நாடு அரசின் வாயிலாக நடைபெறுகின்ற மொழிபெய்ர்ப்புப் பணிகளைப் பட்டியலிட்டும் கூறினார்.
தமிழ் படிக்கும் மாணவர்களுடைய நலங்களையும், வளங்களையும் எடுத்தியம்பினார்.
மொழிபெயர்ப்பில்
வெற்றி பெற்று தலைசிறந்த பேராசிரியர்களாக விளங்கும் அமெரிக்காவின் ஏ.கே. இராமானுஜம், ஜார்ஜ் ஹார்ட், ஜான் மார், கபில் சுவலபில் போன்றோரின் மொழிபெயர்ப்புப் பணிகளையும் சுட்டிக் காட்டினார்.
சென்னை கிருத்துவக்கல்லூரியில் பெருமைமிகு பேராசிரியராக விளங்கிய தனித்தமிழ் தந்தை மறைமலைய
டிகளாரின் பெரும்புகழையும் அவரின் தனித்தமிழ்க் கட்டுரைகள் குறித்தும் அவருடைய ஆழ்ந்த ஆங்கில கட்டுரைகள் பற்றியும் மாணவர்களிடையே கோடிட்டுப் பேசினார்.
தமிழோடு ஆங்கிலத்திலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்று ஆர்வமூட்டி மொழிபெயர்ப்பின் பயனும் பங்கும் என்ற தலைப்பில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த் துறை தலைவர் முனைவர்
ப. டேவிட் பிரபாகர்,
தமிழியல் ஆய்வு மன்றத்தின் நெறியாளர் முனைவர் ஏ. பால் பிரபு சாந்த ராஜ்,
முனைர் சு. சதாசிவம்
உள்ளிட்ட பேராசிரியர்கள்
மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Add a Comment