மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு க ஸ்டாலின் அவர்கள், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் தமிழறிஞருமான ஔவை நடராசன் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
செ.கு.எண் : 91
நாள்: 22.11.2022
தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு
காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணை
மூத்த தமிழறிஞர் ஒளவை நடராசன் ( 87 ) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் .
பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.
வெளியீடு :
இயக்குநர்,
செய்தி மக்கள் தொடர்புத்துறை,
சென்னை – 600 009

Add a Comment