மொழிபெயர்ப்பு நாள் விழா – செய்திப்பரல்கள்
தினமணி 1 10 2022
பக்கம் எண் : 14
உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் விழா
சென்னை, செப். 30 :
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பு நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தலைமை வகித்துப் பேசியதாவது :
இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில்தான் கிறிஸ்தவர்களின் புனித நூலான ‘ விவிலியம் ‘ மொழி
பெயர்க்கப்பட்டது.
இந்த மொழி பெயர்ப்பை 1774 – இல் ஜே.பி.பெப்ரிஷியஸ் வெளியிட்டார்.
1874 இல் அன்றைய தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர் வி.விசுவநாதப் பிள்ளை , ஷேக்ஸ்பியரின் வெனீஸ் வர்த்தகன் நூலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தார்.
பொதுவாக மூலநூலின் உணர்வையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும்
சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்க வேண்டும்.
உடனடி மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும்.
சில நேரங்களில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயர்க்க வேண்டிய தேவை ஏற்படும்.
அப்போது, மொழிபெயர்ப்பாளர் இருமொழிகளிலும் திறமையானவராக இருப்பது அவசியம்.
மூலமொழியை கூட்டியோ குறைத்தோ, மாற்றியோ மொழிபெயர்க்கக்கூடாது.
மூலமொழியின் கருத்தை முழுமையாக உள் வாங்காமல் மொழிபெயர்க்கும்போது, அதன் உண்மையான உள் அர்த்தம் மாறி விடும்.
வேற்றுமொழியாளரின் கருத்தை மற்றொருவர் தெரிந்துகொள்வதற்கு மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு
மிகவும் அவசியம் என்றார் அவர்.
முன்னதாக சென்னையில் உள்ள மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் உறுப்பினர் மு.முத்துவேலு,
” மொழி வளத்துக்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்பு ” என்ற தலைப்பில் மொழிபெயர்ப்பு நாள்
உரையாற்றினார்.
விழாவில் நிறுவனத்தின் பேராசிரியர்கள் ஆ.மணவழகன், நா.சுலோசனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினசெய்தி – 1 10 2022
பக்கம் எண் : 8
உலக மொழிபெயர்ப்பு நாள் நிகழ்ச்சி
சென்னையில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்றது
சென்னை அக் 1
செப். 30-ந் தேதி உலக மொழிபெயர்ப்பு நாளாக கடைபிடிக்கப்படுகிறது.
சென்னையில் இந்த நிகழ்ச்சி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்தது.
இணைப் பேராசிரியர். சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். முனைவர் ஆ.மணவழகன் – வரவேற்புரை ஆற்றினார்
முனைவர் ந. அருள் இயக்குநர் ( கூ.பொ .),
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். அவர்கள் தலைமையுரை ஆற்றினார் ,
பேராசிரியர் முனைவர் மு. முத்துவேலு உறுப்பினர், மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையம், மொழி வளத்திற்கு மொழிபெயர்ப்பின் பங்களிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்
முனைவர் நா. சுலோசனா அவர்கள் நன்றியுரை ஆற்றினார் முதுநிலை ஆராய்ச்சியாளர்
( உதவிப்பேராசிரியர் ), தமிழ்மொழி ( ம ) மொழியியற் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
முனைவர் ந. அருள்
இயக்குநர் (கூ.பொ .), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தலைமையுரை ஆற்றினார்
தன்னுடைய தலைமை உரையில் பேசியதாவது :
” மொழி – ” பெயர்ப்பு ‘ எனும் இருசொற்களின் இணைவில் தோன்றுவது மொழிபெயர்ப்பு.
பொது நிலையில் மூலநூலின் உணர்வினையும், கருத்துகளையும், நிகழ்வுகளையும், உரையாடல்களையும் சிறிதும் விடுபடாமலும், அதிகப்படுத்தாமலும், மாற்றாமலும் ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழிக்கு மாற்றுதலை உண்மையான மொழிபெயர்ப்பாகக் கொள்ளலாம்
உடனடி மொழிபெயர்ப்பு என்பது ஒரு நுணுக்கமான கலையாகும்.
சில வேளைகளில் சிந்திப்பதற்கு நேரமின்றி மிக விரைவாக மொழிபெயர்க்க வேண்டுவதனால் மொழி பெயர்ப்பாளர் இருமொழிகளிலும் திறமையானவராக இருப்பது தேவையானதாகும்.
இங்கு மூல மொழியினைக் கூட்டியோ குறைத்தோ மாற்றியோ மொழிதற்கு வாய்ப்பில்லை.
மூலமொழியின் கருத்தினின்று மொழிபெயர்ப்பாளர் மாறுபடின் மொழிபெயர்ப்பாளர் ஒன்றை முழுமையாக உள்வாங்காமையை உணர்த்தும்.
ஒருவர் கருத்தை மற்றொருவர் தெரிந்துகொள்ள வேண்டும்.
அதற்கு இடையிலுள்ள மொழிபெயர்ப்பாளர் மொழிபெயர்த்து உதவ வேண்டும் என்பதுதான் உடனடி மொழிபெயர்ப்பின் நோக்கமாகும்.
மராத்திய எழுத்தாளர் காண்டேகரின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. பெற்ற வெற்றியை வேறு எவரும் பெற்றதில்லை .
இந்திய மொழிகளிலேயே முதன்முதலில் தமிழில் தான் ” விவிலியம் ‘ மொழிபெயர்க் கப்பட்டது.
1774 இல் ஜே.பி. பெப்ப்ரிஷியஸ் மொழிபெயர்ப்பினை வெளியிட்டார்.
1874 இல் தலைமைச் செயலக மொழிபெயர்ப்பாளர் வி. விசுவநாதப் பிள்ளை ஷேக்ஸ்பியரின் ‘ வெனீஸ் வர்த்தகன் நூலை முதலில் தமிழில் மொழி பெயர்த்தவராவார்.
மொழிபெயர்த்து அதர்ப் பட யாத்தல் என்பது தொல்காப்பியம் காட்டும் நோக்கமாகும் .
அரியது எது என்று கேட்டால் ஔவையாருக்கும் முருகனுக்கும் நடந்த உரையாடலைக் கூறுவார்கள் ,
நாம் வேண்டுமானால் அரிது அரிது ஆங்கிலம் அறிதல் அரிது அதனினும் அரிது அருந்தமிழ் அறிதல் , ஏனை இரண்டும் அறிந்தது போதும் ஒன்றை மற்றொன்றாக மொழிபெயர்த்து எழுதல் அரிதினும் அரிது அளவிடற்கு அரிதே – எனலாம் .
மார்க்சின மூலதனத்தை மலையாளத்தில் 40 பேரும்
தமிழில் ஏறத்தாழ 20 பேரும் மொழிபெயர்த்த போது முழு நிறைவை எந்த மொழியாக்கத்திலும் காண முடியவில்லை என்பார்கள்.
இவ்வாறு அருள் பேசினார்.

Add a Comment