POST: 2022-10-01T10:00:32+05:30

தென்குமரித்திலகம் வாழ்க!

இலக்கியச்செல்வர் அன்பு நிறைந்த குமரி அனந்தனை யான் பார்த்தவுடன் அவர் சொன்ன அமுத வரி

ஒளவைக்கிழவி நம் கிழவி
அமிழ்து என்னும் சொல் கிழவி.

27.9.2022. செய்திக்குறிப்பு

குமரி அனந்தனுக்கு அரசு வீடு: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, செப்.27

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், Marks (27 ந் தேதி) தலைமைச் செயலகத்தில், பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர், இலக்கியச் செல்வர் குமரி அனந்தனுக்கு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் உயர் வருவாய் குடியிருப்பில் வீடு வழங்கி, அதற்கான ஆணையினை வழங்கினார்.

குமரி அனந்தன், கன்னியாகுமரி மாவட்டம், குமரிமங்கலம் என்ற அகத்தீச்வரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகி அரிகிருட்டிணன் -தங்கம்மாள் தம்பதிக்கு முதல் மகனாக 1933 மார்ச் 19 ம் நாளன்று பிறந்தவர்.

பெருந்தலைவர் காமராசரின் அருமந்த சீடர் -காங்கிரசுப் பேரியக்கத்தின் மேனாள் மாநிலத் தலைவர், ஓய்வறியாத உயரியத் தொண்டர், மக்கள் நலனுக்காகப் 17 முறை தமிழ்நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டதோடு, இலக்கியச் செல்வராகவும், மேடை மன்னராகவும், இலக்கியக் கடலாகவும், எவரோடும் பகை கொள்ளாத பண்பாட்டுச் செம்மலாகவும் மிளிர்பவர் அன்பில் சிறந்த குமரி அனந்தன்.

4 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் அரும் பணியாற்றியவர்.

தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் தன் வாழ்நாளெல்லாம் பெருமை சேர்த்து வரும் அவர், தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில், அவரது கோரிக்கையினைக் கனிவுடன் ஏற்று, அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இலக்கியச் செல்வர் குமரி அனந்தனிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி,

தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி எஸ்.முருகன்,

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு,

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா,

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் மகேசன் காசிராஜன்,

தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந.அருள், மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *