POST: 2022-09-03T09:42:43+05:30

வாகையர் திறனறித் தமிழ்த் தேர்வு – 01.10.2022

பள்ளி மாணவர்கள் தங்களின் தமிழ்மொழி இலக்கியத் திறனை பதினொன்றாம் வகுப்பு மேம்படுத்திக் கொள்ளும் வகையில், வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் தமிழில் முதன்முறையாக நடத்தப்பெறும் திறனறித் தேர்வில் (தமிழ் ஒலிம்பியாட்) வெற்றி பெறும் 1500 மாணவர்களுக்கு திங்கள் தோறும் ரூபாய் 1,500/- வீதம் 22 திங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இதன் தொடர்பாக, 29.08.2022 அன்று திங்கட்கிழமையன்று காலை 11.00 மணியளவில் அரசு தேர்வுகள் துறை இயக்ககத்தில் தேர்வுகள் துறை இயக்குநர் திரு. சேதுராம வர்மா அவர்களின் முன்னிலையில்

தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள்,

தேர்வுகள் துறை இணை இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் திருமதி அமுதவள்ளி, தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் மற்றும் அலுவலர்களின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில்

50 விழுக்காடு அரசு பள்ளி; 50 விழுக்காடு பிற பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பெறலாம் எனவும்

தேர்வுக்கான விண்ணப்பங்கள், பள்ளி தலைமை ஆசிரியர் வழியே, 28.08.2022 முதல் பெறப்பட்டு வரும் நிலையில் 09.09.2022–க்குள் விண்ணப்பங்களைப் பெற்று, தேர்வுத் துறைக்கு அனுப்ப வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு அறிவிக்கலாம் எனவும் முடிவாற்றப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *