செய்திப்பரல்கள்
1.தினமலர் – 30 8 2022 – பக்கம் எண் : 4
பதிப்பு துறைக்கு பேராசிரியர் நியமனம்
சென்னை , ஆக. 30
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயங்கி வரும் பதிப்புத் துறைக்கு, புதிய பொறுப்பாளர்
நியமிக்கப்பட்டு உள்ளார்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தமிழ் சார்ந்த கல்வி மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபடுகிறது. இங்கு, 60 க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகள் உள்ளன.
பேராசிரியர், மாணவர்களின் ஆய்வுக்கட்டுரைகள், ஓலைச்சுவடிகளை பதிப்பித்து வெளியிட வேண்டியுள்ளது.
ஏற்கனவே பதிப்பிக்கப் பட்ட 500 க்கும் மேற்பட்ட நுால்களில் சிறந்தவற்றை மறுபதிப்பு செய்யவும் வேண்டியுள்ளது.
ஏழாண்டுகளுக்கும் மேல், இந்த பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாததால், பதிப்புத் துறை முடங்கியது.
இந்நிலையில், நிறுவனத்தின் சமூகவியல், கலை மற்றும் பண்பாட்டுப் புலத்தின் பேராசிரியர் மணவழகன், பதிப்புத் துறையின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
பதிப்புத்துறைக்கு தனி பேராசிரியர் நியமிக்கப்படுவது இதுவே முதன்முறை.
2.தினமணி – 28 8 2022 – பக்கம் எண் : 5
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்: பதிப்புத் துறைக்கு பொறுப்பாளர் நியமனம்
சென்னை , ஆக. 27 :
சென்னை தரமணியில் செயல்பட்டு வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக பேராசிரியர் ஆ.மணவழகன் நியமனம் செய்யப்பட்டார்.
தனிநாயகம் அடிகள், மறைந்த முதல்வர் அண்ணா போன்றோரின் அரிய முயற்சியால் 1968 – இல்
தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ்க்கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு,
மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண் பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல் உள்ளிட்ட நோக்கங்களோடு இந்த நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத்துறையை மேலும் செழுமைப்படுத்தி, பல அரிய நூல்களை நிறுவனப்பதிப்புத்துறை மூலமாக வெளிக்கொண்டுவரும் நோக்கிலும், அதன் வெளியீடுகள் மக்களை எளிதில் அடையும் நோக்கிலும் பதிப்புத்துறைக்கென முதன்முதலாக பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, பதிப்புத் துறையின் முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகனுக்கு நியமன ஆணையைத் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் ந.அருள் சனிக்கிழமை வழங்கினார்.
3.தினசெய்தி – 28 8 2022 – பக்கம் எண் : 8
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத் துறைக்குப் பொறுப்பாளர் நியமனம்
சென்னை ஆக 28 உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப் பதிப்புத் துறைக்குப் பொறுப்பாளர் நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
தவத்திரு தனிநாயகம் அடிகளார், பேரறிஞர் அண்ணா போன்றோரின் அரிய முயற்சியால் 1968 இல் தோற்றுவிக்கப்பட்டது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல், தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞரிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொள்ளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் ஆகிய நோக்கங்களோடு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
நிறுவனத்தில் ஆய்வு, கல்வி, வெளியீடு என்ற முதன்மைச் செயல்பாடுகளில் ஒன்றான வெளியீட்டுப் பணியில் ஈடுபட்டு, 500 க்கும் மேலான ஆய்வு நூல்களை இந்நிறுவனம் பதிப்பித்துள்ளது. அந்தவகையில் தமிழ் இலக்கியத்தில் எதிர்காலவியல், மேலை நோக்கில் தமிழ்க் கவிதை, தமிழக மகளிரியல், தமிழியல் ஆய்வுச் சிந்தனைகள், இலக்கிய இதழ்கள், மொழிபெயர்ப்புத் தமிழ், தொல்காப்பிய உரைவளம், தமிழ் மொழி வரலாறு, தமிழக வரலாறும் மக்களும் பண்பாடும் போன்ற பல அரிய சிறந்த நூல்கள் நிறுவனத்தின்வழி வெளிவந்துள்ளன.
இந்நிலையில், நிறுவனப் பதிப்புத் துறையை மேலும் செழுமைப்படுத்தி, பல அரிய நூல்களை நிறுவனப்
பதிப்புத்துறைவழி வெளிக் கொண்டு வரும் நோக்கிலும், அதன் வெளியீடுகள் மக்களை எளிதில் அடையும் நோக்கிலும் பதிப்புத்துறைக்கென முதன்முதலில் பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, பதிப்புத்துறையின் முதல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள
நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணவழகனிடம் , நியமன ஆணையைத் தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் ந.அருள் நேற்று வழங்கினார்.
4 Radio FM 31st Aug 2022
நேரம் சரியாக 7:00 மணி 52 நிமிடம் ஆயிடுச்சிங்க.
வணக்கம்
சென்னையோட நிறைவு பகுதிக்கு நாம வந்துட்டோம்.
இன்னைக்கு நிகழ்ச்சியில் நான் கேட்டிருந்த கேள்வி.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் தரமணியில் அமைந்துள்ளது.
சென்னையில் தான் அமைந்துள்ளது. இந்தக் கேள்விக்கு சரியான பதிலை சொன்ன அனைத்து நேயர்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.
நேரம் சரியா 7 மணி 31 நிமிடம் ஆகிறது.
உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பற்றிய கேள்விதான் இன்னிக்கு நான் கேட்டிருந்தேன்.
தமிழ் கல்வியில் உயர் ஆய்வினை வளப்படுத்துதலும், தமிழ் ஆய்வாளருக்கு தேவையான ஆவணங்களை உருவாக்குவதற்கும், தமிழ், தமிழர் இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் என துறைதோறும் தமிழை மேம்படுத்துவதற்கு இது ஒரு அற்புதமான நிறுவனமாக அமைக்கப்பட்டுள்ளது.

Add a Comment