1.தினமணி – 30. 7. 2022
பக்கம் எண் : 4
படக் குறிப்பு :
சென்னை அண்ணா நினைவு நூலகத்தில் 29.7.2022, வெள்ளிக்கிழமை நடைபெற்ற படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ( இடமிருந்து ) தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள் . இராசேந்திரன், சுந்தரமூர்த்தி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நூலாசிரியர் இராசரத்தினம்,
தோல் ஏற்றுமதி குழுமத்தின் செயல் இயக்குநர் இரா.செல்வம்,
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஒளவை அருள்,
ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை உறுப்பினர் மு.ஆறுமுகம்.
2.தினசெய்தி – 31 7 2022
பக்கம் எண் : 8
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சார்பில் படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் நூல்
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்
சென்னை ஜூலை 31
சென்னை, அண்ணா நினைவு நூலக வளாகம், கோட்டூர்புரத்தில், கனடா நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் சித்தம் அழகியான் சு. இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் என்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டு நூலினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
முதல் நூலினை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் மா.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
முன்னிலை உரையாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் பேசியதாவது:
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பேராசிரியர் இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பண்பாடும் என்ற நுணுக்கமான நூல் 388 பக்கங்களுடன் 25 இயல்களுடன் பல பட விளக்கங்களுடன் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வாயிலாக வெளியிடப்படுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூல் எல்லா வகையிலும் பாராட்டுக்குரியதாகும்
அருமையான ஒரு பாராட்டு பெயரை சித்தம் அழகியான் என்று அவர் பெயரோடு சேர்த்திருக்கிறார்கள் அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இதைப் பற்றிச் சொல்வதென்றால் ஒரு அருமையான கருத்தை அவர் சொல்லியிருக்கிறார்.
13 கோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழ்கிறார்கள் ,அதில் ஐந்து கோடி தமிழர்களுக்கு தமிழ் மொழியைப் பேச வராது அவர்கள் தாய்மொழியாகிய தமிழை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் குறித்திருக்கிறார்.
எனக்கு நன்றாக ஒரு நிகழ்ச்சி நினைவிருக்கிறது.
என்னுடைய தந்தையார் அடிக்கடி என்னைப் பற்றிச் சொல்லும் போது வேடிக்கையாக ஒரு கருத்தை சொல்வார்.
ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தேவாரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார் உடனே நான் தேவாரம் எனக்குத் தெரியாது என்னுடைய தந்தையாருக்குத் தெரியும்.
போன வாரம் கூட அண்ணாநகரில் ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார் என்று குறிப்பிட்டார்.
அவர் ஆச்சரியப்பட்டுத் தேவாரம் என்றால் என்ன என்று கேட்டார் காவல்துறையில் தலைவராக இருந்த ஐஜி பெயர் தேவாரம். அதைத் தானே கேட்கிறீர்கள் என்று நான் கேட்டேன்.
தமிழ்நாட்டிலேயே தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தேவாரம் என்பது ஞானசம்பந்தர் வழங்கிய அருள் நூல் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டிலேயே நடைபெறுகிற ஒரு செய்தியாகும்.
மேலும் இந்த நூலில் ஒலிகள் எப்படிப் பிறக்கின்றன என்பதைப் படங்களாகவே நாற்பது ஐம்பது படங்களையும் வரைந்து காட்டி இருக்கிறார்.
உலகமெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிற நேரத்தில் அவர்களுடைய தாய்மொழி அவர்களுடைய கலைப் பண்பாட்டுக் கூறுகளை எப்படி எல்லாம் வளர்க்கவேண்டும் என்பதற்கு இந்த நூலில் பல்வேறு விதமான
கருத்துக்களைச் சொல்கின்றனர்.
எவ்வளவு இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதைக்
கூட 14 வகையான குறைபாடுகள் இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்.
இந்த நூல் மொழி நுட்பம் வாய்ந்தது .
உலகில் தமிழர் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களுக்குப் பெரிதும் பயன்ப டும் !
சித்தம் அழகியராக விளங்கும் இந்நூலாசிரியர் முயற்சி வெல்க !
தமிழ் வாழ்க.
இவ்வாறு அருள் பேசினார்.
இவ்விழாவில், பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி தலைமை தாங்க, நூலைப் பற்றி. இரா. செல்வம், பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் கு. அரசேந்திரன், முனைவர் மு. ஆறுமுகம், மாணவர் நகலகம் சா.அ. சவுரிராசன், கருத்துரை வழங்கினர்.
3.மக்கள்குரல் – 31 7 2022
பக்கம் எண் : 7
‘‘ படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் ’’
கனடா ராசரத்தினம் எழுதிய நூல் :
அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்
சென்னை, ஜூலை 31
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் கனடா ராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் என்ற நூலை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நினைவு நூலக வளாகத்தில் கனடா நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் சித்தம் அழகியான் சு. இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் என்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டு நூலினை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்.
முதல் நூலினை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மா.இராசேந்திரன் பெற்றுக்கொண்டார்.
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் பேசியதாவது:
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பேராசிரியர் இராசரத்தினம் எழுதிய ‘‘ படிமுறைத் தமிழ் மொழியியலும் பண்பாடும் ’’ என்ற நுணுக்கமான நூல் 388 பக்கங்களுடன் 25 இயல்களுடன் பல பட விளக்கங்களுடன் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வாயிலாக வெளியிடப்படுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
உலகமெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிற நேரத்தில் அவர்களுடைய தாய்மொழி அவர்களுடைய கலைப் பண்பாட்டுக் கூறுகளை எப்படி எல்லாம் வளர்க்கவேண்டும் என்பதற்கு இந்த நூலில் பல்வேறு விதமான கருத்துக்களைச் சொல்கிறார் ஆசிரியர்.
இந்நூல் உலகில் தமிழர் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் இ. சுந்தரமூர்த்தி தலைமை தாங்க, நூலைப் பற்றி இரா. செல்வம், சுப. வீரபாண்டியன், கு. அரசேந்திரன், மு. ஆறுமுகம், மாணவர் நகலகம் சா.அ. சவுரிராசன் ஆகியோர் கருதபயன்படுத்துகிறார்கள்.ப்
செய்திக்குறிப்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக வெளியிடப்பட்ட படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் நூல் வெளியீட்டு விழா !
செய்தி வெளியீடு
சென்னை, அண்ணா நினைவு நூலக வளாகம், கோட்டூர்புரத்தில் 29.07.2022 வெள்ளிக் கிழமை மாலை 6.00 மணியளவில் கனடா நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் சித்தம் அழகியான் சு. இராசரத்தினம் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பயன்பாடும் என்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வெளியீட்டு நூலினை மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அவர்கள் வெளியிட்டு, சிறப்புரையாற்றினார்கள்.
முதல் நூலினை, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் மா.இராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
முன்னிலை உரையாக தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ஔவை அருள் பேசியதாவது
கனடா நாட்டில் வாழ்ந்து வரும் பேராசிரியர் இராசரத்தினம் அவர்கள் எழுதிய படிமுறைத் தமிழ் மொழியியலும் பண்பாடும் என்ற நுணுக்கமான நூல் 322 பக்கங்களுடன் 25 இயல்களுடன் பல பட விளக்கங்களுடன் உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் வாயிலாக வெளியிடப்படுவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
இந்நூல் எல்லா வகையிலும் பாராட்டுக்குரியதாகும்
அருமையான ஒரு பாராட்டு பெயரை சித்தம் அழகியான் என்று அவர் பெயரோடு சேர்த்திருக்கிறார்கள் அது மகிழ்ச்சியாக இருக்கிறது.
காரணம் திருவாசகத்தில் திருவெம்பாவையில் சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை என்ற தொடர் வருகிறது .
சித்தம் அழகியார் என்றால் மனம் அழகுடையவன் அவருக்குப் பொருத்தமாக அமைந்திருக்கிறது.
தமிழ் மொழியைப் பற்றி ஒரு பத்தாண்டுகளுக்கு மேல் அவர் உலக நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் எல்லாம் அவர்கள் தம் தாய் மொழியைக் கற்பதற்கும் எல்லாம் எப்படி முயன்று பயன்படுத்துகிறார்கள் மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் எழுதுதல் பேசுதல் ஒலித்தல் என்று எல்லாவகையான மொழிக்கூறுகள் எல்லாம் இந்த நூலில் மிக அருமையாகப் படங்களோடு எடுத்துக் காட்டியிருக்கிறார்.
உலக நாடுகளில் ஏறத்தாழ 60 நாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள் வாழும் தமிழர்களை நான்கு வகையாக பிரித்து தமிழ் ஈழம் மலேசியா சிங்கப்பூர் மொரீசியஸ் தென்னாபிரிக்கா ஐரோப்பிய நாடுகளில் கனடா பிரான்சு கரிபியன் பிஜி முதலிய நாடுகளில் வாழுகின்ற தமிழ் கற்க ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை நுணுக்கமாக ஆராய்ந்த நூல் இது என்று குறிப்பிடலாம் இதைப் பற்றிச் சொல்வதென்றால் ஒரு அருமையான கருத்தை அவர் சொல்லியிருக்கிறார் 13 கோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழ்கிறார்கள் ,அதில் ஐந்து கோடி தமிழர்களுக்கு தமிழ் மொழியைப் பேச வராது அவர்கள் தாய்மொழியாகிய தமிழை அறியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் குறித்திருக்கிறார்
அதுமட்டுமில்லாமல் தமிழைக் கற்றுக் கொடுப்பது என்று சொல்லி அயல் நாடுகளில் வாழ்பவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு முயன்று கற்றுக் கொடுத்தாலும் கூட பல்லாண்டுகள் கழித்து புள்ளிவிபரத்தின் படி பார்த்தால் தமிழ் கற்றுக் கொண்ட மாணவர்கள் ஐந்தாம் வகுப்புக்குத் தரத்துக்கு மேல் தமிழ்க் கல்வியைத் தொடரமுடியாமல் நிறுத்தி விடுகிறார்கள் என்றும் குறித்து இருக்கிறார் அது இயல்புதான் ஒரு நாட்டில் வாழ்கிறவர்கள் அந்த நாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்ப தங்கள் மொழியை பின்பற்றுவார்கள்.
எனக்கு நன்றாக ஒரு நிகழ்ச்சி நினைவிருக்கிறது .என்னுடைய தந்தையார் அடிக்கடி என்னைப் பற்றிச் சொல்லும் போது வேடிக்கையாக ஒரு கருத்தை சொல்வார் ஒருமுறை தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த நண்பர் ஒருவர் என்னைப் பார்த்து தேவாரம் உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டிருக்கிறார் .உடனே நான் தேவாரம் எனக்குத் தெரியாது என்னுடைய தந்தையாருக்குத் தெரியும் போன வாரம் கூட அண்ணாநகரில் ஒரு நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார் என்று குறிப்பிட்டார் அவர் ஆச்சரியப்பட்டுத் தேவாரம் என்றால் என்ன என்று கேட்டார் காவல்துறையில் தலைவராக இருந்த ஐஜி பெயர் தேவாரம் அதைத் தானே கேட்கிறீர்கள் என்று நான் கேட்டேன்.
தமிழ்நாட்டிலேயே தமிழ் பயிலும் மாணவர்களுக்குத் தேவாரம் என்பது ஞானசம்பந்தர் வழங்கிய அருள் நூல் என்று கூடத் தெரிந்து கொள்ளாமல் தமிழர்கள் இருக்கிறார்கள் என்பது தமிழ்நாட்டிலேயே நடைபெறுகிற ஒரு செய்தியாகும் மேலும் இந்த நூலில் ஒலிகள் எப்படிப் பிறக்கின்றன என்பதைப் படங்களாகவே நாற்பது ஐம்பது படங்களையும் வரைந்து காட்டி இருக்கிறார்.
உலகமெல்லாம் தமிழர்கள் பரவி வாழ்கிற நேரத்தில் அவர்களுடைய தாய்மொழி அவர்களுடைய கலை பண்பாட்டுக் கூறுகளை எப்படி எல்லாம் வளர்க்கவேண்டும் என்பதற்கு இந்த நூலில் பல்வேறு விதமான கருத்துக்களைச் சொல்கின்றனர் எவ்வளவு இடர்ப்பாடுகள் இருக்கின்றன என்பதைக் கூட 14 வகையான குறைபாடுகள் இருக்கின்றன என்று எழுதியிருக்கிறார்.
இந்த நூல் மொழி நுட்பம் வாய்ந்தது .உலகில் தமிழர் வாழும் நாடுகளுக்குத் தமிழர்களுக்குப் பெரிதும் பயன்படும் !
சித்தம் அழகியராக விளங்கும் இந்நூலாசிரியர் முயற்சி வெல்க ! தமிழ் வாழ்க !!
இவ்விழாவில், பேராசிரியர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி தலைமை தாங்க, நூலைப் பற்றி திரு. இரா. செல்வம், இ.ஆ.ப., பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பேராசிரியர் கு. அரசேந்திரன், முனைவர் மு. ஆறுமுகம், மாணவர் நகலகம் சா.அ. சவுரிராசன், கருத்துரை வழங்கினர்.

Add a Comment