தினமணி , செவ்வாய்க்கிழமை
21 6 2022
பக்கம் எண் : 3
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் பயிற்சி
சென்னை,
ஜூன் 20 :
சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழக அரசின் நிதியுதவியுடன் கல்வெட்டியல் குறித்து 20 நாள்கள் நடைபெறவுள்ள கோடைகாலப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை (20.6.22)
தொடங்கியது.
தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பில் நடைபெறவுள்ள இந்தப் பயிற்சியை தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள் தொடக்கி வைத்துப் பேசியது:
ஊர், நாடுகளுக்கு பழங்காலத்தில் வழங்கிய பெயர்களையெல்லாம் அறிந்து கொள்வதற்குப் பயன்படுகிற பெரிய தகவல் ஏடுகளாக கல்வெட்டுகளும், செப்பேடுகளும், தொன்மையான இலக்கியங்களும் விளங்குகின்றன.
பூந்தமல்லி என்பது பூந்தண்மல்லி என்ற பெயருடையது.
பிறகு அது பூந்தமல்லி என்றானது.
அதுபோலத்தான் கல்வெட்டுகள் பழமையான பெயர்களை எடுத்துக்காட்டுவதிலும் நமக்குப் பெரும் துணை செய்கின்றன.
தமிழகத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிய இலக்கியங்கள் போலக் கோயில்களிலும், அரண்மனைகளிலும், கோட்டைகளிலும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
கல்வெட்டுகள், கல்லெழுத்து, சிலாசாசனம், செப்பேடுகள் எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்டன.
கல்வெட்டு எழுத்துக்கள் காலத்தால் பழமையுடையவை.
இதனைப் படிப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும்.
தமிழக அரசின் நிதியுதவியால் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான 20 நாள்கள் கோடை காலப் பயிற்சி வகுப்புகள், நிறுவன முதுநிலை, முதுநிலை ஆய்வு, ஆய்வு மாணவ, மாணவிகள் என மொத்தம் 40 பேருக்கு நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில் தொல்லியல் துறை அறிஞர்கள் பங்கேற்று பயிற்சி அளிக்கவுள்ளனர் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலத்தின் உதவிப் பேராசிரியர்
சு.தாமரைப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினசெய்தி
பக்கம் எண் : 3
21.6.2022
தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலம் சார்பாக
கல்வெட்டியல் , சுவடியியல்
கோடைக்காலப் பயிற்சி பயிலரங்கம்
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் ந அருள் தலைமையில் நடந்தது
சென்னை
ஜூன் 21
கல்வெட்டியலில் கோடைக் காலப் பயிற்சி முகாம், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடக்க விழா நடந்தது.
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் – உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் ந. அருள் தலைமையில் விழா நடந்தது.
விழாவில் ந. அருள் பேசியதாவது –
” நான் இன்று காலை வீட்டிலிருந்து புறப்படும்போது என்னை ஒருவர் எவ்வளவு தூரம் செல்கிறீர்கள் என்று கேட்டார்.
தரமணியில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நிகழ்ச்சியில் பங்கு கொள்ளப் போகிறேன் என்றேன் .
தரைமணியா – திரைமணியா – துறைமணியா என்று கேட்டார்.
சென்னை கடற்கரையைச் சூழ்ந்த பகுதிகள் என்பதால் – அடையாறு, பெரும்பாக்கம், கேளம்பாக்கம், கோவளம் ,ஈஞ்சம்பாக்கம், சிறுசேரி, செம்மனஞ்சேரி, சிறுகுடி, பெருங்குடி துறைப்பாக்கம், இவைகளைப்போல தரமணி என்ற ஊரும் உள்ளது.
தரமணி என்பது திரைமணி அல்லது துறைமணி என்று இருந்திருக்குமா என்று எண்ணிப்பார்க்கலாம்.
இப்படியெல்லாம் ஊரின் பெயர்களை – நாட்டின் பெயர்களையெல்லாம் பழங்காலத்தில் வழங்கிய பெயர்களையெல்லாம் அறிந்து கொள்வதற்குப் பயன்படுகிற தகவல் ஏடுகளாகத்தான் – செப்பேடுகளும் – பழைய இலக்கியங்களும் விளங்குகின்றன.
நமக்கு நன்றாகத் தெரியும் பூந்தமல்லி என்பது பூந்தண்மல்லி என்ற பெயருடையது.
பிறகு அது பூந்தமல்லி என்றாயிற்று.
அதுபோலத்தான் கல்வெட்டுக்கள் பழம் பெயர்களை எடுத்துக்காட்டுவதிலும் நமக்குப் பெரும் துணை செய்கின்றன .
தமிழ்நாடு அரசின் நிதியுதவியால் சென்னை , தரமணி, உலகத் தமிழாராயச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் மற்றும் சுவடியியல் தொடர்பான 20 நாள்கள் கோடைக் காலப் பயிற்சி வகுப்புகள், நிறுவன முதுகலை, முதுநிலை ஆய்வு, ஆய்வு மாணவ மாணவியர் என மொத்தம் 40 பேருக்கு நடைபெற உள்ளது.
” தமிழகத்தின் வரலாற்றை ஆராய்ந்து கண்டறிய இலக்கியங்கள் போலக் கோயில்களிலும், அரண்மனைகளிலும், கோட்டைகளிலும் கல்வெட்டுகள் அமைந்துள்ளன ” எனவும். ” கல்வெட்டுகள், கல்லெழுத்து, சிலாசாசனம், செப்பேடுகள் எனப் பல பெயர்களில் அழைக்கப் பட்டன.
கல்வெட்டு எழுத்துக்கள் காலத்தால் பழமையுடையன, இதனைப் படிப்பது ஒரு சிறந்த பயிற்சியாகும் எனவும் எடுத்துரைத்தார்.
இம்முயற்சியில் தொல்லியல் துறையில் அறிஞர்கள் கல்வெட்டுப் பயிற்சி வகுப்புக்கள் நடத்துவது சிறந்த முயற்சி எனவும் முதுகலை படிப்பிற்குக் கல்வெட்டுப் பாடமாகவே அமைந்தது.
தமிழறிஞர் என்றால் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு , முதலியன அறிந்தவராக விளங்க வேண்டும்.
கல்வெட்டுச்
சொற்கள் அனைத்தையும் ஓர் அகராதியாகவும் வெளியிட்டுள்ளார்கள்.
ஆயிரக்கணக்கான கல்வெட்டுகள் அச்சிடப்படாமல் இன்னும் உள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில்
1995 ஆம் ஆண்டு தினமலர் நாளிதழ் மூலமாக இராமசுப்பையர் அறக்கட்டளை ரூ .25,000/- வைப்புத் தொகையைக் கொண்டு தொடங்கப்பட்டது.
இதுவரை இந்த அறக்கட்டளை மூலம் அறக்கட்டளைச் சொற்பொழிவுகள் நடத்தப்பட்டுள்ளன.
அறக்கட்டளைச் சொற்பொழிவுகளைத் தமிழ்ச் சான்றோர்களான முனைவர் அறிஞர் வ.அய். சுப்பிரமணியம், டாக்டர் இரா. கலைக்கோவன், முனைவர். ப.சண்முகம் உள்ளிட்டோர் நிகழ்த்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்த அறக்கட்டளைத் தொடங்குவதற்கு முழுமுதற்காரணமாக அமைந்த கௌரவ ஆசிரியர் டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி இயற்கையெய்திய போது இவருக்காக நினைவேந்தல் கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 15.03.2021 அன்று நடைபெற்றது.
இதில் இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நாணயவியலில் செய்த ஆய்வுகள், செய்தி உலகிற்குச் செய்த
தொண்டினை நினைவு கூரும் வகையில் தமிழ்ச் சான்றோர்கள் பலர் தம் நினைவுகளைப் பகிர்ந்துக் கொண்டனர்.
இக்கல்வெட்டுப் பயிற்சி தொடக்க விழாவில், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலத்தின் உதவிப் பேராசிரி
யர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன், நிறுவனத்தின் பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.சதீஷ், தமிழிலக்கியம் மற்றும் சுவடியியல் புலத்தின் உதவிப் பேராசிரியர், முனைவர் கோ.பன்னீர்செல்வம் உடன் பேராசிரியர் ப. சண்முகம், தலைவர் ( பணி நிறைவு ) ,சென்னைப் பல்கலைக்கழகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Add a Comment