POST: 2022-06-19T11:36:09+05:30

அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 114

தென்னாப்பிரிக்க மியர்பேங்க் தமிழ்ச் சங்கத்தின் முன்னேற்றமும் வெற்றியும்

முனைவர் ஔவை அருள்,

1936-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் தொடங்கப்பட்ட மியர்பேங்க் தமிழ்ப் பாடசாலையின் பொன்விழா எழிலேட்டில் இடம்பெற்ற பகுதிகள் வருமாறு:-

முன்னேற்றம், வெற்றி

(Development and Fruition)

From April 1978 the Hall was ready and let out for weddings and social and cultural functions.

But the constant need to generate funds for proper maintenance, staff, the Tamil School and other planned projects was obvious.

The Society attempted to present films but the response unfortunately, was not encouraging and therefore abandoned.

Overhead expenditure for electricity, water supply, telephone and administration were mounting.

A signwriter who was approached to erect the “MTSS” sign on the roof saw the premises and was impressed enough to hire it for his wedding.

So his was the very first wedding in the hall undertaken by the Society.

This wedding provided the cue to the officials who then undertook to organise and conduct them on behalf of the contracting parties.

Initially catering proved a major problem because of lack of proper facilities.

But with the building of a proper dining hall and kitchen this was well attended to.

The officials of the Society undertake to be present at weddings and help, purely from the point of view of service to the community.”

Through experience gained at these weddings the Society has been able to streamline all its facilities and services.

A “package deal” is offered where all the main overall arrangements are made.

Meals are prepared and served.

A band of dedicated men and women sacrifice their weekends to serve the community by helping at the weddings.

This is appreciated very much.
.

Numerous families are making use of the facilities offered.

It must be emphasised that weddings are under taken, on the basis of helping the community’s needs.

Officials are prepared to help and advise parties concerned as far as possible.

The dignity of the function, and the satisfaction of all the guests and the happiness of the marrying couples and their families concern the Society very much.

The Society on the other hand is happy to record that it enjoys maximum co-operation from members of the community.

The Hall is also a popular venue for cultural projects, shows, dramas, meetings and social welfare projects.

A Shining Example of Self-Help:

It must be recalled that during the protracted negotiations with the Durban Corporation the moving spirits and chief spokesmen for the Society were Messrs M.R. Moodley and Athie Nadasen, who were mainly responsible for settling on the Burdwan Road property.

In order to commence building operations within the prescribed two years, application for a loan was made to a local building Society.

Since this was not successful the Society faced the dilemma of finding the money to build.

A number of ideas were discussed but all of them were rejected for various reasons.

One member, Mr C.R. Moodaliyar suggested an interest-free loan scheme.

This seemed feasible but difficult to implement in practical terms.

However with faith and determination this formidable plan was accepted.

Chairman Mr M.R. Moodley set the lead with a loan of R10 000,00.

The touching story behind this spontaneous gesture was that since he did not have ready cash he borrowed the money on interest.

But the loan to the Society was free of interest.

He said that as head of the organisation he had the moral duty to lead by example.

This certainly was an admirable and noble gesture.

Treasurer, Mr Athie Nadasen followed with R10 000,00 and Mr A.M.

Govender came in with a third sum of
R10 000,00. In this way twenty four persons including new members offered loans of amounts ranging from R500,00 to R40 000,00 until R106 500,00 was realised in a short time.

It is gratifying to mention that most of those who were approached, readily and willingly accepted to help.

One member Mr. Balan Govender who having been inspired by the magnanimous gestures of the initial donors came forward on his own accord with a sum of
R6 000,00.

——————————-

பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (38)

“கவிர்ததை சிலம்பில் துஞ்சும் சுவரி
பரந்து இலங்கு அருவியொடு நரந்தம்
கனவும் ஆரியர் துவன்றிய பேரிசை இமயம்”
– (பதிற்றுப்பத்து 11, 21-23 )

என்னும் பாடலைப் பாடிய குமட்டூர் கண்ணனார் கருத்துக்குப் பொருந்தாத ஓர் உரையாக மேற்குறித்த உரை அமைந்துள்ளது.

முருக்க மரங்கள் செறிந்த மலையிடத்தே இரவில் உறங்கும் கவரிமான்கள் பகற்பொழுதில் தாம் மேய்ந்த நரந்தம் புற்களையும், அவை வளர்தற்குக் காரணமாகப் பரந்து விளங்கும் அருவிகளையும் கண்டுமகிழ்வதற்கு இடனாய் விளங்கும் ஆரியர் நிறைத்து வாழும் இமயம்” என்பதே பொருளாகும்.

என்பதை ஔவை மேற்கோளுடன் விளக்கியுள்ளனர்.

கவரி மானும், நரந்தம் புல்லும் இமயமலைச் சாரலில் மிகுதியாக உண்மையின் இவற்றை விதந்தோதினார். ‘

நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி குவளைப் பைஞ்சுனை பருகி யயல, தகரத் தண்ணிழல் பிணையொடு வதியும் வடதிசை யதுவே வான்றோய் இமயம்’ என்று ஏணிச்சேரி முடமோசியார் பாடிய புறப்பாடல் 132-ஐ மேற்கோள்காட்டி பழைய உரையை மறுத்துள்ளார்.

சொற்பொருள் விளக்கம்

‘கண்ணும் அல்குலும் மேனியுமுடையமடவோள் எம்மைத் துயரம் செய்தனள்; யார்மகள் கொல்லோ அறியேன், ஆயினும் இவள் தந்தை வாழியர், ஈன்ற நாய் பொறையன் தொண்டியின் திறமெலாம் பெறுக’ என்னும் கருத்தமைந்த பாட்டைக் கண்ணகனார் பாடியுள்ளார்.

இப்பாட்டில் “பல் பூம் பகைத் தழைநுடங்கும் அல்குல்” (நற்றிணை 8). என்ற அடி பயின்றுள்ளது.
இதில் அல்குல் என்னும் சொல்லுக்கு ஔவையவர்கள் அளிக்கும் விளக்கம் சிந்தித்தற்குரியது:

அல்குல் இடைக்கும் துடைக்கும் இடைப்பட்டப்பட்ட உடற்கூறு.

இது பற்றியே அல்குல் என்னும் சொல் மகளிர் ஆடவர் என்ற இரு பாலருக்கும் நூல்களில் வழங்கப்படுகிறது. ‘

கொள்வீர் அல்குல் ஓர் கோவணம்” என்பது ஞானசம்பந்தர் திருப்பதிகம் (தே. 54,3)

“பலவேறு நூல்களையும் ஒப்பவைத்து நோக்க வாய்ப்பில்லாமையால் இதனை இடக்கர்ப்பொருளாக்கி இடர்ப்பட்டனர்.

குஃறொடர்ந்த அன்மொழியென ஒதுக்கினோரும், நீக்கினோரும், அறியாமை புலப்பட நாணினோரும் உண்டு, இஃது அவையல் கிளவி, இது மங்கலமொழி, இது தகுதி வழக்கு என்றெல்லாம் சொற்களைப் பகுத்துக் காட்டிய செந்தமிழ்ச் சான்றோர், அல்குல் என்பது இவர்கள் கருதுமாறு அவையல் கிளவியாயின் நூல்களிற் பயில வழங்கார்.

என்பது தானும், இப்பிற்கால மக்கட்குப் புலப்படாதொழிந்தது தமிழர் தவக்குறை.

இவ்வாறே புதுமை வெறி கொண்டு பழைமைச் செல்வங்களைச் சிதைக்கும் புல்லியோர், நண்பர், அன்பர் என்ற போர்வையில் தோன்றித் தமிழுக்குக் கேடு செய்கின்றனர்.

‘உள்ளது சிதைப்போர் உளர் எனப்படார்’ (குறுந்தொகை-282) என்ற அறவுரையைத் தமிழ் நன்மக்கள் மனம் கொளல் வேண்டும்”.

அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பாடியது. (பாட்டு 88, புறம்)

‘யாராயினும் பெற்றிருக்கும்’ என்ற சொல்லுக்கு ஒளவை விளக்கம்:

அறிவு ஆண்மை பொருள், படை முதலியவற்றால் மிகச்சிறந்து இருக்கின்றோம் என்பதற்கு யாராயினும் என்றார்;

முடிவேந்தாராயினும், குறுநில மன்னராயினும், ஒருவராயினும் பலராயினும் இவ்வாறு கூறினார் எனினும் அமையும். (ப.334)

தத்துவ விளக்கம்

காலமாவது…. இமயம் கடலாக இருந்த காலமும் உண்டு.

மண்ணுலகம் விண்ணுலகம் என்பன தலைகீழாக மாறும் காலத்தைப் பேரூழிக்காலம் எனச் சமய நூல்கள் கூறும்.

இக்காலத்தில் வினைகள் மூலப் பகுதியில் ஒடுங்கும் எனச் சாங்கிய நூல்களும், மாயையில் ஒடுங்கும் எனச் சைவ நூல்களும் கூறலால், ‘ஊழிபெயரும் காலத்து வினை நீங்குதலின்’ என்று உரைகாரர் கூறுகின்றார். (ப.125).

அறிவியல் விளக்கம்

ஆண்குருவி ஒன்று வேறு ஒரு பெண் குருவி வாழுமிடத்தில் தங்கியிருந்து பின்னர்த் தன் கூட்டுக்குத் திரும்பி வரவே, அதன் வேறுபாட்டைக் கண்ட பெண்குருவியானது அதைக் கூட்டினுள் புகாதபடி தடுத்தது.

அதனால் அந்த ஆண் குருவி மழையில் நனைந்து குளிரில் நடுங்கி அயலிடத்தே இருந்தது.

அதனைக் கண்ட பெண்குருவி மனமிரங்கி தன்பால் வருமாறு அந்த ஆண்குருவியை அழைத்தது.

இக்காட்சியை உம்பற்காட்டு இளங்கண்ணனார் பாடியுள்ளார். (நற்றிணை 181)

இப் பாட்டுக்கு உரை வரைந்த ஔவையவர்கள்.

“ஊர்க்குருவி முதலிய புள்ளினம் ஒருகால் ஆணும் பெண்ணுமாய்க் கூடியவை வாழ்நாள் முழுதும் பிரியாதுறையும்” எனச் சார்லஸ் டிக்சன், ஊரகப்பறவை (Rural Birds) எனும் நூலில் கூறிய கருத்தை மேற்கோள் காட்டியுள்ளனர்.

பெண்குருவி ஆண்குருவியைத் தன்பால் அழைத்தது பறவைகளுக்கிடையே நிலவும் மொழி என்பதை பறவையியலார் கூற்றைச் சான்றுகாட்டி விளக்குகின்றனர்.”‘

மொழி எனப்படுவது உள்ளக்குறிப்பைப் பிறர்க்குத் தெரிவித்துப் பிறர் கருத்தைத் தெரிந்து கொள்வதென்பதாயின், புள்ளினங்களிடையேயும் மொழி உண்டு என்பதற்குத் தடையில்லை என்றும், மக்களைப்போலச் சொற்களால் தெரிவித்தல் இல்லையாயினும் இன்பம், துன்பம், அச்சம், அவலம், அழைப்பு முதலிய குறிப்புக்களைப் புள்ளினம் தம் ஒலியாலும் செயல் வகைகளாலும் தம்முள் தெரிவித்துக் கொள்கின்றன” என்றும் புள்ளுயிர் அறிஞர் புகல்வதை எடுத்துரைக்கின்றனர்.

“அறுகாற்பறவை” என்பதற்கு நுட்பமாகப் பொருளுரைக்கின்றனர், அறுகாற்பறவை தேன்வண்டு; வண்டுக்கும் கால் நான்கேயாயினும், முகத்தில் முந்தி நீண்டிருக்கும் உணரிகள் இரண்டையும் கூட்டி அறுகால் என்பது பண்டையோர் வழக்கு.

“அறுகால் யாழிசைப் பறவை யிமிர” எனக் கபிலர் கூறுவது காண்க என மேற்கோள் காட்டுகின்றனர்.

இலக்கண விளக்கம்

வேணவா நலிய – வேட்கை மிகுதியால் எழுந்த ஆர்வம் உள்ளத்தை வருத்த என்று உரை கூறும் ஒளவை அதற்கு விளக்கமும் தருகிறார்.

“வேட்கை என்ற இரு சொற்புணர்ச்சி; செய்யுள் மருங்கின் வேட்கை யென்னும் ஐ யென் இறுதி அவா முன் வரினே மெய்யொடும் கெடுதல் என்மனார் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும்” என்பது தொல்காப்பியம் (எழுத்து:288),

வரலாற்றுவிளக்கம்

திருப்போர்ப்புறம் சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதலும் சோழன் வேல்பஃறடக்கை பெருவிறற்கிள்ளியும் யாது காரணத்தாலோ பெரும்பகை கொண்டு திருப்போர்ப்புறம் என்னுமிடத்தில் பெரும்போர் உடற்றினர்.

திருப்போர்ப்புறம் என்பது இப்போது தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி என வழங்குகிறது.

இதனைக் கல்வெட்டுக்கள் திருப்போர்த் திருப்புறம் என வழங்கும்.

வளரும்…

– முனைவர் ஔவை அருள்,

தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *