POST: 2022-06-10T09:56:51+05:30

தின ஓசை – நாளிதழ் – பக்கம் எண் : 2

பெருவாயல் – டி ஜெ எஸ் பொறியியல் கல்லூரியின் ஆண்டு விழா

திருவள்ளூர், ஜூன் 6

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெருவாயல் கிராமத்தில் உள்ள டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியின் 13 வது ஆண்டுவிழா மற்றும் விளையாட்டு விழா நடைபெற்றது.

கல்லூரி வளாகத்தில் நடந்த விழாவிற்கு டிஜெஎஸ் குழுமத்தின் சேர்மனும் கும்மிடிப்பூண்டி தொகுதி எம்எல்ஏவுமான டிஜே கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அவ்வை அருள் நடராஜன்,
எச் சி எல் டெக்னாலஜிக் இயக்குனரும் மற்றும் எச் ஆர்ருமான கஞ்சன் கேட்கர், ஆகியோர் கலந்து கொண்டனர் .

மேலும் நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் மற்றும் செயலாளருமானடி.ஜே.ஆறுமுகம், துணைச் சேர்மன் டிஜே தேசமுத்து, இயக்குனர்கள் டாக்டர் பழனி, விஜயகுமார், கபிலன், தினேஷ், தமிழரசன், உறுப்பினர்கள் சண்முகசுந்தரம், ஜெயக்குமார், ராஜேஷ், நிர்வாக அலுவலர் ஏழுமலை,கல்லூரி முதல்வர் டாக்டர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

விழாவில் கல்லூரியில் படித்து கல்லூரி மூலம் நடந்த வேலை வாய்ப்புகளில் பங்கேற்று தேர்வான மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

பின்னர் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

முடிவில் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் பல்வேறு நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *