அருந்தமிழும் அன்றாட வழக்கும் – 103
முக்கடல் வாழ்த்திய தமிழ்க்கடல்
முனைவர் ஔவை அருள்,
இயக்குநர், மொழிபெயர்ப்புத் துறை,
தமிழ்நாடு அரசு
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகவும்,
மேதகு தமிழக ஆளுநர் உயர்திரு. கே.கே.ஷா. அவர்களின் தமிழாசிரியருமான
முனைவர் சி. பாலசுப்பிரமணியன், 13.08.1974 அன்று,
முனைவர் ஔவை நடராசனைப் பற்றி எழுதிய பாராட்டிதழ் பின்வருமாறு:-
“Dr. Avvai D. Natarajan is known to me for the past seventeen years (since 1957) as my student, Assistant Professor in colleges and the Secretary of the Ramalingar Mission at Madras.
I have known his academic abilities even as a student, and he has proved to mark his own impression in Tamil Research arena.
His affable manners and behaviour have won the appreciation of scholars and public alike.
He has been a popular lecturer and a finished speaker.
His deep knowledge and research acumen are praiseworthy.
He has an additional qualification of expressing his ideas in good English and he is a fit man to represent the Tamil culture abroad.
I can say without any reservation on my part that he will be an asset to any institution that may employ him.
I wish him success in all walks of life.”
முதுபெரும் தமிழறிஞர் பள்ளியகரம் நீ. கந்தசாமிப் பிள்ளை 17.08.1974 அன்று முனைவர் ஔவை நடராசனைப் பற்றி எழுதிய பாராட்டிதழ் பின்வருமாறு:-
“Dr. D. Natarajan is known to me from his childhood; he comes of a family of great scholars of deep erudition of Tamil and allied subjects of south Indian culture.
Dr. Natarajan, besides having the modern scholarship on the most modern lines, is a gigantic scholar on traditional lines also.
If opportunities are given, he will raise to the pinnacle of International Scholarship in Tamil through his sweet speeches, sound teachings, sincere devotion and sublime qualities of head and heart which makes him endearing to one and all who comes in contact with him.
I wish this raising scholar all success in his life.”
அருட்செல்வர் பொள்ளாச்சி ந. மகாலிங்கம் 06.10.1976 அன்று தன்னுடைய போயஸ் தோட்ட அலுவலகத்திலிருந்து வரைந்த பாராட்டிதழ் பின்வருமாறு:-
“Dr. Avvai D. Natarajan, M.A., M.Litt., Ph.D., is known to me for many years.
He was working as a lecturer in Tamil in Thiyagarajar college, Madurai for over six years and was serving in the Ramalinga Mission as its Secretary.
The Ramalinga Mission is engaged in bringing out critical editions of the
‘THIRU ARUTPA’, addition to propagating the teaching of saint Vallalar.
His services are remarkable in that field.
He is an eloquent speaker and his knowledge of Tamil language and literature has elicited praise from savants of the Tamil language such as
Dr. Mu. Varadarajan and Thirukkural Peedam Sri Alagar Adigal.
He is an orator of high repute coming as he does from the family of the well known Professor Avvai S. Doraisamy Pillai.
Dr. Natarajan in addition to his duties as Secretary, Ramalinga Mission, was able to complete his Doctorate Thesis and was awarded Doctorate by the Madras University in 1974.
Later, his services were called by the Government of Tamil Nadu and I released him from the work of the mission.
Dr. Natarajan in addition to being a good Tamil scholar, is also a good organizer.
I am sure he is capable of any higher responsible work.
He bears an excellent character and conduct and deserves all encouragements”
தமிழ்நாடு அரசின் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தின் இயக்குநராகப் பணியாற்றிக் கொண்டிருந்த, தமிழுலகமே பெரிதும் போற்றி மகிழும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர், மொழிபெயர்ப்புத் துறை இயக்குநரான முனைவர் ஔவை நடராசனுக்கு 08.10.1976 அன்று ஆங்கிலத்தில் வரைந்த பின்வரும் பாராட்டிதழ் கல்வெட்டு வரிகளாகும்.
“Dr. Avvai Natarajan is well known to me from his childhood.
His father, Prof. Avvai Doraisamy Pillai is a reputed ripe Tamil research-scholar, an unrivalled classical commentator and a literary historian, whose services to Tamil are of a high order and have obtained academic recognition.
Avvai Natarajan, his father’s son, is a smart, stalwart, intelligent, enthusiastic and ardent young man, richly endowed with the necessary insight, to bring out the deeply-hidden treasures of Tamil, the unique and oldest living classical language of the world.
Besides his academic attainments of M.A.. M.Litt., and Ph.D., he is an able scholar, whose zeal for research in Tamil is instinctive.
He is one of the outstanding public speakers among the youths of the day.
He is presently engaged in compiling a dictionary of academic and administrative terms.
It is highly desirable, that Tamil scholars of his type should go abroad to counter the mischief done by misfits, who have unfortunately gone to the western countries and grossly misrepresented the Tamil language, literature and culture, which are undoubtedly original and genuine.
He bears an excellent character and is, as a rule, simple and straight forward.
I wish him every success.”
——————————-
பேராசிரியர் கு. சிவமணியின் ‘ஔவையும் புலமையும்’ – (27)
இவ் ஒப்புநோக்கு பதிப்பாளர் இருவரின் நோக்கையும் போக்கையும், ஆய்வையும், அணுகு முறையையும் புலப்படுத்துகின்றது.
அவ்வகையில் பாடினோர் வரலாற்றுக்கு மட்டும் பின்வரும் விவரங்கள் அமைகின்றன:
முன்னைப் பதிப்பிலுள்ளதை ஒளவை ஒப்புதல் 16; தழுவுதல் 56; மறுத்தல் – புலவர் 22 + ஊர் 7; விளக்குதல் 22; கூடுதல் விளக்கம்-10; சிறப்பு விளக்கம் 24.
இது போன்று, ஒளவையவர்கள் உரையெழுதிய சங்கநூல் ஒவ்வொன்றிலும் பாடினோர், பாடப்பட்டோர், பாடவேறுபாடு, சொற்பொருள், பொருள்கோள், இலக்கணக்குறிப்பு, உரை வேற்றுமை, முதலாய பல தலைப்புகளில் தனித்தனியே முனைவர் பட்டத்திற்காக ஆய்வுசெய்யும் வாய்ப்பு உண்டு.
நூலிலுள்ள வரலாற்று குறிப்புகள் பற்றி…
“இன்னும் எத்தனையோ கல்வெட்டுகளும் ,பழைய கல்வெட்டுகளும், செப்பேடுகளும் பழந்தமிழ் நூல்களும் வெளிவராமல் தெளிவின்மை, பற்றின்மை, பொருளின்மை; உள்ளமின்மை முதலிய மையிருட்பிழம்பில் புதைந்து மறைந்து கிடத்தலால் இந்நூற்கண் காணப்பட்ட வரலாற்று குறிப்புகளை முடிந்த முடிவாகக் கோடற்கு இடம் இல்லை.
ஆயினும், அவை முழுவதும் வெளியாகுங்காறும் இக்குறிப்புகளை மேற்கொள்வது அறிஞர்களுக்குத் தவறாகாது.’ (ஒளவை)
கல்வெட்டுப் பேரறிஞர் தி.வே.சதாசிவப் பண்டாரத்தார், திருமுறைச்செல்வர் க.வெள்ளைவாரணர் ஆகியோர், உரைவேந்தரின் புறநானூற்று உரைக்கு உசாத்துணைவராகப் பெரிதும் உதவியிருக்கிறார்கள்.
பேராசிரியர் அ.சிதம்பரநாதச் செட்டியார் அணிந்துரையில்…
சங்கக் காலத் தமிழகத்தின் வரலாற்று நூலாகவும் திகழ்வது புறநானூறு.
அரும்பெறல் நூலாகிய இதனை மாணவர் முதல் முதியோர் வரை அனைவரும் பயிலுதல் விரும்பத் தக்கது.
இந்நிலையில் புறநானூறு முழுவதும் யாவரும் எளிதாக உணரும் வகையில் தெளிவான விளக்க உரை ஒன்று வெளிவருதல் தக்கதே.
இவ்வுரை தொண்டினைச் சித்தாந்தக் கலாநிதி ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் தமிழ் ஆர்வத்துடன் நிறைவேற்ற முன்வந்து இந்நூல் முழுவதும் தெளிவான விளக்க உரை ஒன்றை எழுதி முடித்துள்ளார்.
இத்தொண்டு தமிழ்நாட்டின் பழைய வரலாற்றை ஆராய்ந்து காண விரும்புவோர்க்கு மேலும் ஊக்கமளிக்கும் என நம்புகின்றேன்.
ஓரளவு தமிழ்ப்பயிற்சி உடையாரும் புறநானூற்றின் பொருள் நலன்களைத் தெளிவாக உணர்ந்து இன்புறும்படி இனிய எளிய தமிழ் நடையில் இவ்வுரை அமைந்துள்ளது.
இக்காலத்து அரசியல் சீர்திருத்தங்களில் கருத்துடைய தமிழ்ச்செல்வர்கள், தமிழ் மாணவர்கள் தமிழ்நாட்டு வரலாற்று கருத்துடையோர், ஆகிய அனைவருக்கும் இந்நூல் நன்கு பயன்படும் என்னும் துணிபுடையேன்.”
ஒளவையின் பரந்துபட்ட நூற்புலமையும், ஓலைச்சுவடி, கல்வெட்டுகளில் தேர்திறனும், ‘மடுத்த வாயெல்லாம் பகடு’ போன்ற அவர்தம் அயரா உழைப்பும் புறநானூற்றை வரலாற்று களஞ்சியமாக / பெட்டகமாக ஆக்கியுள்ளன..
“புறத்தின் உரைகள் புலமைத் திறமை
வரலாறு பேசும் மகிழ – உறவாடும்
பாட்டின் குறிப்பெல்லாம் பண்பாட்டு சங்கத்தேன்
கூட்டில் விளையும் கொடை!”
பாவேந்தர் பாரதிதாசன்
பதிற்றுப் பத்து
பதிற்றுப் பத்து மூலமும் பழைய உரையும், 1904
டாக்டர் உ.வே. சாமிநாதையர் அவர்கள் பதிற்றுப்பத்து மூலமும் பழைய உரையும் முதற்கண் வெளியிட்டனர்….
எட்டுத்தொகையுள் நான்காவதாகிய பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பத்திலும் பத்துப் பாடல்கள் என நூறு பாடல்கள் இருக்க வேண்டும்;
ஆனால் முதற்பத்தும், பத்தாம் பத்தும் கிடைக்கவில்லை.
இரண்டாம் பத்து முதல் ஒன்பதாம் பத்து வரை உள்ள எட்டுப் பத்துக்களே (எண்பது பாடல்களே) இப்பொழுது உள்ளன.
நூற்செய்தி
“இந்நூலிலே தமிழ்நாட்டின் பண்டைக்கால நிலைமையும் சில சேரர்கள், சில குறுநில மன்னர்கள் முதலியோருடைய வரலாறுகளும் அவர்களுடைய அரசாட்சி, வீரம், கொடை, புலவர்களை ஆதரித்து வந்த அருமை முதலியனவும் சேர நாட்டின் பழைய வழக்கங்கள் சிலவும் இக்காலத்து வழங்காத சில அரும்பதங்களும் வேறுசில அரிய விஷயங்களும் காணலாம்.
கிடைத்த இந்நூற் கையெழுத்துப் பிரதிகளுள் ஒன்றிலேனும் கடவுள் வாழ்த்தும், முதற்பத்தும், பத்தாம் பத்தும் அவற்றின் உரையும் காணப்படவில்லை.
உள்ள எட்டுப் பத்திலும் கூடச் சிலச்சிலவிடத்து மூலங்கள் குறைந்தும், உரைகள் சிதைந்தும் பிறழ்ந்தும் இருக்கின்றன.
அந்த விஷயத்தில் நான் செய்யக்கூடியது யாதொன்றும் இல்லாமையால் அவை இருந்தவாறே பதிப்பிக்கப் பெற்றன.” (உ.வே.சா., பதிற்றுப்பத்து, முகவுரை).
முதற்பத்தையோ, பத்தாம்பத்தையோ சார்ந்த இந்நூற் பாடல்களுள் சில, தொல்காப்பிய உரைகளாலும் புறத்திரட்டாலும் தெரியவந்தன.
இப்பதிப்புக்கு ஆறு சுவடிகள் பயன்பட்டன.
நூல் அமைப்பு
ஒவ்வொரு செய்யுளின் பின்னும் துறை, வண்ணம், தூக்கு, பெயர், ஆகியவை அமைந்துள்ளன.
அவை உரையில்லாத மூலப் படியங்களில் மட்டும் இருக்கின்றன;
உரையாசிரியரால் எழுதப்பட்டவை அல்ல, நூலாசிரியர்களாலோ தொகுத்தாராலோ எழுதப்பட்டவை, பதிகங்கள் உரையாசிரியர்களின் படியங்களில் மட்டும் காணப்படுகின்றன.
அவற்றை நூலாசிரியரோ தொகுத்தோரோ இயற்றவில்லை என்பர்.
பத்துப்பாட்டில், பாட்டுள் பயின்ற மலைபடுகடாம் எனும் தொடர் தலைப்பானதைப் போல, பதிற்றுப்பத்துப் பாட்டு ஒவ்வொன்றுக்கும் அவ்வப் பாட்டுத் தொடரே தலைப்பாக அமைந்துள்ளது.
எ-டு: சுடர் வீ வேங்கை, அருவியாம்பல், சான்றோர் மெய்ம்மறை முதலியன.
பாட்டும் பரிசிலும்
2-ஆம் பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைப் பாடிய குமட்டூர் கண்ணனார், உம்பற்காடு நாட்டில் பிரமதேயமாக ஐந்நூறு ஊர்களையும், 38 ஆண்டு அவளது நாட்டு வருவாயில் பாகத்தையும்;
3-ஆம் பத்தில் இமயவரம்பன் தம்பி நல்யானைச் செல்கெழுகுட்டுவனைப் பாடிய பாலைக்கௌதமனார் அவர் மனைவியுடன் சுவர்க்கம் புக வேண்டிப் பத்துப் பெரு வேள்விகளையும்;
4-ஆம் பத்தில் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார் நாற்பது நூறாயிரம் பொன்னும் அவன் ஆளுவதில் பாகத்தையும்;
5-ஆம் பத்தில் கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைப் பாடிய பரணர் உம்பற்காட்டு வருவாயையும் அவன் மகன் குட்டுவன் சேரலையும்;
6-ஆம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் பாடிய காக்கைபாடினியார் நச்செள்ளையார் அணிகலனுக்காக ஒன்பது துலாம் பொன்னும் நூறாயிரம் பொற்காசுகளையும்;
7-ஆம் பத்தில் செல்வக்கடுங்கோ வாழியாதனைப் பாடிய கபிலர் சிறுபுறமாக நூறாயிரம் பொற்காசும் நன்றா என்னும் குன்றின் மேல் ஏறி நின்று அவன் கண்ணில் கண்ட நாடுகளையும்;
8-ஆம் பத்தில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய அரிசில்கிழார் ஒன்பது நூறாயிரம் பொற்காசும் அரசு கட்டிலையும்;
9-ஆம் பத்தில் குடக்கோ இளஞ்சேரல் இரும்பொறையைப் பாடிய பெருங்குன்றூர்கிழார் முப்பத்தீராயிரம் பொற்காசும் அவர் அறியாமல் ஊரும் மனையும் வளமும் பரிசில்களாகப் பெற்றனர்.
வளரும்…
– முனைவர் ஔவை அருள்,
தொடர்புக்கு “dr.n.arul@gmail.com

Add a Comment