POST: 2022-03-15T08:21:55+05:30

செய்திப்பரல்கள்

.தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை மாவட்டம் வாயிலாக ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம், 10.03.2022 முதல் 11.03.2022 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.

நிகழ்ச்சி பற்றி செய்தித்தாள்களில் வந்த செய்திப்பரல்கள் :

1.தினமலர் – பக்கம் எண் : 2

சென்னை கலெக்டர் அலுவலகத்துக்கு விருது

சென்னை, ஆட்சிமொழி திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சென்னை கலெக்டர் அலுவலகத்திற்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.தமிழ் வளர்ச்சி துறை, சென்னை மாவட்ட வாயிலாக ஆட்சிமொழி பயிலரங்கம், மாநில கல்லுாரியில், நேற்று முன்தினம் துவங்கி, நேற்று நிறைவடைந்தது.

இக்கருத்தரங்கில், 2018ல் ஆட்சிமொழித் திட்ட செயலாகத்தில் சிறந்து விளக்கிய, சென்னை கலெக்டர் அலுவலகம், தமிழக பொது நுாலகத் துறை மற்றும் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கேற்று இவ்விருதுகளை தமிழக அரசின் மொழிபெயர்ப்பு துறை இயக்குனர் அருள் வழங்கினார்.

2.தினமணி – பக்கம் எண் : 4

சென்னை , மார்ச்: தமிழகத்தில் ஆட்சிமொழித் திட்டம் புத்தெழுச்சி பெற்று வருவதாக மொழி பெயர்ப்புத் துறை இயக்குநர் ந.அருள் கூறினார்.

தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை மாவட்டம் சார்பில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவை சென்னை மாநிலக் கல்லூரியில் மார்ச் 10, 11 ஆகிய நாள்களில் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிறைவு விழாவில் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந . அருள் கலந்து கொண்டு 2018 – ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தமிழகப் பொது நூலகத் துறை, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சென்னை எழும்பூர் மாநிலப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றுக்கு கேடயம்
மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

கருத்தரங்கு நிறைவு விழாவில் ந.அருள் பேசியது: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னின்று வழிகாட்டுவதால் தமிழகத்தில் ஆட்சிமொழித் திட்டம் புத்தெழுச்சி பெற்று வருகிறது. இணையத்தில் உலாவரும் பல ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகத் தமிழில் கலைச்சொற்கள் இன்றைய தேவைக்கேற்ப தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக வெளியிடப்பட்டு வருகின்றன. ‘ சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம் ‘ என்ற பழமொழிக்கேற்ப, ஆட்சித் தமிழும் அன்றாட வழக்கமாக மாற வேண்டும்.

அகராதியிலுள்ள ஆட்சி மொழிச் சொற்கள் அனைத்தும் அன்றாட பயன்பாட்டுக்கு வர வேண்டும். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்ப புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்படுவது இன்றைய தேவையாகும்.
தமிழக அரசின் விழுமிய கொள்கையான, ‘ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ‘ என்னும் இலக்கை முழுமையாக எய்துவதற்கு உணர்வு பூர்வமாகவும், சட்டப்படியும் ஒவ்வொரு அரசு அலுவலரும், பணியாளரும் பணியாற்றிட வேண்டும்.

தத்தம் அன்றாட அலுவல் பணிகளிலே, எழுதுகின்ற கோப்புகள், அனுப்புகின்ற கடிதங்கள்,
இடுகின்ற ஒப்பங்களனைத்தும் தமிழில் தான் அமைதல் வேண்டும் என்றார் அவர்.

கருத்தரங்கின் நிறைவு விழாவில், மாநிலக் கல்லூரியின் முதல்வர் இரா. ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

3.தினசெய்தி – பக்கம் எண் :2

சென்னையில் ஆட்சி மொழிப்பயிலரங்கம்

சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்றது

சென்னை , மார்ச்.12சென்னையில் ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் சென்னை மாநிலக்கல்லூரியில் நடைபெற்றது.

கருத்தரங்கம் தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை மாவட்டம் வாயிலாக ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம், 10.03.2022 முதல் 11.03.2022 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்றது.
11.03.2022 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெற்ற நிறைவு விழாவில், 2018-ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தமிழகப் பொது நூலகத்துறைக்கும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும், சென்னை எழும்பூர் மாநிலப் பெண்கள் மேனிலைப் பள்ளிக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்த தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் முனைவர் ந.அருள், தன்னுடைய சிறப்புரையில், ஆட்சி மொழியை நடைமுறைப்படுத்துவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதல மைச்சர் முன்னின்று வழிகாட்டுகிறார் என்றும், இன்றில்லை என்றால் என்று ? இப்போது இல்லையென்றால் எப்போது ?

நம்மால் முடியவில்லை என்றால் எவரால் முடியும்’ என்ற முழக்கத்துக்கு விடை காண வேண்டிய நேரம் இது என்பதைத் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவிற்கொள்ள வேண்டும் என்றார்.
‘ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ‘ மேலும், சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கேற்ப, ஆட்சித் தமிழும் அன்றாட வழக்கமாக மாற வேண்டும் என்றும் அகராதியிலுள்ள ஆட்சி மொழிச் சொற்கள் அனைத்தும் அன்றாட பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இணையத்தில் அங்கிங்கெனாதபடி உலாவரும் பல ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகத் தமிழில் கலைச்சொற்கள் ( Fibre optics – மின்னிழைக் கண்ணாடி, Cliche கிளிப் பிள்ளைச்சொல், Biodiversity Park – பல்லுயிர்ப் பெருக்கப் பூங்கா ) இன்றைய தேவைக்கேற்ப நம்முடைய தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதென்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்பப் புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்படுவது இன்றைய தேவையென்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் விழுமிய கொள்கையான, ‘ எங்கும் தமிழ், எதிலும் தமிழ் ‘ என்னும் இலக்கை முழுமையாக எய்துவதற்கு உணர்வுப் பூர்வமாகவும், சட்டப்படியும் ஒவ்வொரு அரசு அலுவலரும், பணியாளரும் பணி யாற்றிட வேண்டும் என்றும், தத்தம் அன்றாட அலுவல் பணிகளிலே, எழுதுகின்ற கோப்புகள் முழுமையாகத் தமிழிலும், அனுப்புகின்ற கடிதங்கள் அனைத்தும் தமிழிலும், இடுகின்ற ஒப்பங்களனைத்தும் தமிழில் தான் அமைதல் வேண்டும் என்று தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டதை நினைவுபடுத்தினார்.

இரண்டு நாள் ஆட்சிமொழிக் கருத்தரங்கின் நிறைவு விழாவில், மாநிலக்கல்லூரியின் முதல்வர் இரா.இராமன், தமிழ்நாடு அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதாளர் ஆக்கம்’ மதிவாணன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

4.மக்கள்குரல் – பக்கம் எண் : 7

தமிழ் வளர்ச்சித் துறை ஆட்சிமொழி பயிலரங்கத்தில் பொது நூலகத் துறைக்கு கேடயம்: இயக்குநர் அருள் வழங்கினார்

சென்னை, மார்ச் 12

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கத்தில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய பொது நூலகத் துறைக்கு பாராட்டு கேடயத்தை இயக்குநர் அருள் வழங்கினார்.

தமிழ் வளர்ச்சித் துறை, சென்னை மாவட்டம் வாயிலாக ஆட்சிமொழிப் பயிலரங்கம், கருத்தரங்கம் சென்னை மாநிலக் கல்லூரியில் 2 நாட்கள் நடைபெற்றது. நிறைவு விழாவில், 2018-ஆம் ஆண்டில் ஆட்சிமொழித் திட்டச் செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய தமிழகப் பொது நூலகத் துறைக்கும், சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கும், சென்னை எழும்பூர் மாநிலப் பெண்கள் மேனிலைப் பள்ளிக்கும் கேடயம் மற்றும் சான்றிதழ்களை தமிழ்நாடு அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர் ந. அருள் வழங்கி பேசியதாவது:

ஆட்சி மொழியை நடைமுறை படுத்துவதற்கு முதலமைச்சர் முன்னின்று வழிகாட்டுகிறார். என்றும், ‘இன்றில்லை என்றால் என்று? இப்போது இல்லையென்றால் எப்போது? நம்மால் முடியவில்லை என்றால் எவரால் முடியும்’ என்ற முழக்கத்துக்கு விடை காண வேண்டிய நேரம் இது என்பதைத் தமிழ்நாடு அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நினைவிற்கொள்ள வேண்டும்.

‘சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழிக்கேற்ப, ஆட்சித் தமிழும் அன்றாட வழக்கமாக மாற வேண்டும் என்றும் அகராதியிலுள்ள ஆட்சி மொழிச் சொற்கள் அனைத்தும் அன்றாட பயன்பாட்டுக்கு வர வேண்டும். இணையத்தில் அங்கிங்கெனாதபடி உலாவரும் பல ஆங்கிலச் சொற்களுக்கு நிகராகத் தமிழில் கலைச்சொற்கள் இன்றைய தேவைக்கேற்ப நம்முடைய தமிழ் வளர்ச்சித் துறை வாயிலாக வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்பப் புதிய கலைச் சொற்கள் உருவாக்கப்படுவது இன்றைய தேவையென்று வலியுறுத்தினார்.

தமிழ்நாடு அரசின் விழுமிய கொள்கையான, ‘எங்கும் தமிழ், எதிலும் தமிழ்’ என்னும் இலக்கை முழுமையாக எய்துவதற்கு உணர்வுப் பூர்வமாகவும், சட்டப்படியும் ஒவ்வொரு அரசு அலுவலரும், பணியாளரும் பணியாற்றிட வேண்டும். அன்றாட அலுவல் பணிகளிலே, எழுதுகின்ற கோப்புகள் முழுமையாகத் தமிழிலும், அனுப்புகின்ற கடிதங்கள் அனைத்தும் தமிழிலும், இடுகின்ற ஒப்பங்களனைத்தும் தமிழில் தான் அமைதல் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், மாநிலக் கல்லூரியின் முதல்வர் இரா. இராமன், தமிழக அரசின் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதாளர் ‘ஆக்கம்’ மதிவாணன் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *