POST: 2022-03-03T09:01:47+05:30

தாய்மொழியின் தனிப்பெருமை !

தினமணி நாளிதழில் 21.2.2022 அன்று வெளியான
மொழிபெயர்ப்பு நாள் குறித்து வெளியான சிறப்புக் கட்டுரைக்கு
( மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! )
28 2 2022 அன்று வரப்பெற்ற வாழ்த்து ….

பக்கம் எண் : 5

பயனில்லை !

ஒருவர் எத்தனை மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் அவருடைய சிந்தனை தாய்மொழியிலேயே முதலில் தோன்றும் ( ‘ மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! முனைவர் ஒளவை அருள் 21-2-2022 ), பல நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி கற்பிக்கப்படுகிறது.

தாய்மொழியை அறிந்து கொள்ளாதவர்கள் பிற மொழி களை அறிந்து கொள்வதால் பயனில்லை.

மக்கள் பயன்பாட்டில் இல்லாத மொழி வழக்கொழிந்து போகும்.

ஒவ்வொருவரும் தத்தம் தாய்மொழியை நன்கு கற்றபின் பிற மொழிகளைக் கற்க வேண்டும்.

தி ரெ ராசேந்திரன்
திருநாகேஸ்வரம் .

சிந்தனையின் திறவுகோல் !

மொழி என்பது கருத்துப் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல, மக்களின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் தாங்கி நிற்கும் சாதனமுமாகும்

( ‘ மாந்தர் பெற்ற மகத்தான வரம் ! ‘ முனைவர் ஔவை அருள் 21-2-2022 ).

ஒருவரின் சிந்தனையை மொழிதான் தீர்மானிக்கும்.

சிந்தனையின் திறவு கோல் தாய் மொழி, மொழி அழிந்தால் பண்பாட்டு அடையாளம் அழியும்.

பண்பாட்டு அடையாளம் இல்லாதவர்கள் வரலாறு அற்றவர்கள் ஆகிவிடுவர்.

அனைத்து நாடுகளிலும் தாய் மொழியில் கல்வி கற்க உரிமை உண்டு.

ஆனால், நமது நாட்டில் தாய் மொழிக் கல்விக்காகப் போராட வேண்டிய நிலை உள்ளது.

குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் தாய் மொழிக்கல்வியே உதவும்.

பயிற்று மொழி, ஆட்சி மொழி, நீதிமன்ற மொழி, வழிபாட்டு மொழி என நம் வாழ்வின் அனைத்து நிலையிலும் தாய்மொழியைப் பயன்பாட்டு மொழியாக்குவோம்.

எஸ் .ஸ்ரீகுமார்
கல்பாக்கம் .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *