உடையானும் ஒரு பிறவி கருதியதே !
என் மனம் கவர்ந்த பேராசிரியராகவும் – நூலாசிரியராகவும் புகழோடு விளங்கும் மணிவாசகர் பதிப்பகத்தை நிறுவிய பெருந்தகை பதிப்புச்செம்மல் திரு மெய்யப்பன் அவர்கள் என் நெஞ்சம் கவர்ந்தவர் .
” தந்தை ஒப்பர் மக்கள் ” என்னும் மூதுரைக்கிணங்க அடக்கத்தாலும் – ஆர்வத்தாலும் – இன்சொல்லாலும் நிறுவனத்தின் உரிமையாளராக விளங்கும் முனைவர் மெ சோமசுந்தரம் அவர்கள் அறுபது ஆண்டு மணிவிழா காண்பது எனக்குப் பெருமகிழ்ச்சியாக இருக்கிறது .
மணியாரமாகத் திகழும் மணிவாசகர் பதிப்பகத்தின் வெளியீடு என்று சொன்னாலேயே மதிப்பு வாய்ந்த நூல் என்று தமிழுலகம் இரு கைகளில் ஏந்திப் போற்றும் . .
தங்களைப் போலவே மேலாளரையும் உடன் பிறவாத இளவலாகக் கருதி நம்பிக்கைக்குரிய நம்பி என்ற பரிவோடு திரு குருமூர்த்தி விளங்கும் இடத்தை பெருமக்கள் கற்றுக்கொள்ளும் பண்பாட்டைத்
திரு குருமூர்த்தி தான் மெய்ப்பித்து வருகிறார் .
பேராசிரியர் மெய்யப்பன் அவர்களை தன்னுடைய மெய் அப்பனாகவே கருதி வாழ்ந்து வருபவர்
தமிழ்நாட்டின் பெருமைமிகு புகழ்வாய்ந்த பொன்மணிகளைக் கொண்டு மணிவிழாவை நல்விழாவாக நடத்துகின்ற இவ்விழாவைப் பாராட்டுவதோடு – பெரும்புகழ் வாய்ந்த மணிவாசகர் பதிப்பகத்தின் உரிமையாளர் தமிழ்ச்சுடர் சோமசுந்தரம் அவர்களையும் அவரின் குறிப்புணர்ந்து செயற்படும் மேலாளர் இராம குருமூர்த்தி அவர்களையும் ஒருசேர என் மனதாரப் பாராட்டுகிறேன். .
வாழ்க தமிழ் !
வளர்க மணிவாசகர் பதிப்பகத்தின் தமிழ்த் தொண்டு !
என்றும் வெல்க மணிவாசகர் பதிப்பகம் !
அன்போடு
ஒளவை நடராசன்
25 12 2021

Add a Comment