பெருமக்களே,
இன்றைய நாள் மிக மகிழ்ச்சியாக உள்ளது.
பாரதியின் பிறந்த நாளான இன்று பேருவகை கொண்டுள்ளேன். கடந்த 22 வாரங்களாக, தொடர்ந்து மகாகவி பாரதியாரின் குயில்பாட்டினை அற்புதமாக உலகிலுள்ள அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும் ஏன் ஆங்கில நண்பர்கள் பலரும் குயில்பாட்டினைக் கேட்டு இன்புற்று மகிழ்ந்தனர்.
குயில்பாட்டுடைய நிறைவுப் பகுதியில் இன்று நாம் உள்ளோம்.
என்னுடைய இனிய நண்பர் சென்னை கிறித்துவ மேனிலைப் பள்ளியில் நானும் கலைமாமணி முனைவர் சூரியப் பிரகாஷ் அவர்களும் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை இணைந்து படித்த தோழர்களாவோம்.
நண்பர்களே! மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் பயின்ற பழைய நண்பர்கள் மாமல்லையில் ஒன்றுகூடிச் சந்தித்த பொழுது, கலைமாமணி சூரியப் பிரகாஷ் என்னிடம் நெருங்கி வந்து, ‘பாரதியின் பாடல்களை நான் பாடுகிறேன்.
அப்பாடல்களுக்கு நீ உரை சொல்லுகிறாயா?’ என்று கேட்டபோது நான் பெருமிதமடைந்தேன்.
நண்பர்களே. ஆனாலும், சிறிது கலங்கினேன்.
காரணம், நண்பர் சூரியப் பிரகாசுடைய இணையற்ற குரலுக்கும், ஒப்பற்ற பாடும் திறமைக்கு நிகரில் நான் என்ன விளக்கம் சொல்லிக் காட்டப் போகிறேன் என்று நினைத்துச் சில நாட்கள் அவரிடம் பேசாமல் ஒதுங்கினேன்.
ஆனால் நண்பர்களே, நடந்தது வேறு. மகாகவி பாரதியின் குயில் பாட்டை ஓராண்டுக்கு முன்பு அவர் பாடத் தொடங்கிய போது என்னை உரைவிளக்கம் தருக என்று கேட்ட பொழுது மறுப்பேதும் சொல்லாமல் தொடங்கிய பயணம் இன்றோடு வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது என்று எண்ணும் பொழுது விம்மிதமடைகிறேன்.
கலைமாமணி சூரியப் பிரகாஷ் பாடிய பாடல்களை அவர் தங்கை துபாயிலிருந்து செப்பமாகச் செதுக்கிய இசைப் படத்தை யூடியூப் பார்வையாளர்கள் கண்டு பாராட்டினார்கள்.
நண்பர் சூரியப் பிரகாஷின் பெற்றோர்கள், துணைவியார், பிள்ளைகள் இணைந்து பாரதி பயணத்தில் சூரியப் பிரகாசுக்கு ஒளி விளக்காகத் திகழ்ந்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
மக்களிடம் எடுத்துச் செல்லும் இந்த அரிய முயற்சிக்கு நானும் என் பங்காக அங்கிங்கெனாதபடி, சூரியப் பிரகாஷ் பாடிய பாடல்களுக்கு ஏற்ப எனக்குத் தெரிந்தவரை, நான் படித்த சில பகுதிகளிலிருந்து, நான் விரும்பிய சில தொடர்களையெல்லாம் எடுத்துக் கொண்டு பாரதியின் குயில்பாட்டை இப்படியெல்லாம் நாம் விவரிக்கலாமா? என்று சொல்லிச் செய்த இந்த அருமையான முயற்சியை நீங்கள் அனைவரும் பாராட்டியதில் பெருமிதமடைகிறேன்.
பெருமக்களே இம்முயற்சிக்கு எனக்குப் பெருந்துணையாக இருந்த நான் போற்றும் என்னுடைய சிறிய தந்தை, என்னுடைய சித்தப்பா, மருத்துவ மாமணி டாக்டர் ஔவை மெய்கண்டான் அவர்களுக்குக் கடன் பட்டுள்ளேன்.
மதுரையில் வாழும் சித்தப்பாவிடம் குயில் பாட்டு பாடல்களில் எங்காவது ஐயங்கள் வரும்பொழுதெல்லாம், அப்பாவைக் கேட்பதைவிடச் சித்தப்பாவிடம் மிக நெருக்கமாக ‘பாரதி இப்படி எழுதியிருக்கிறாரே, எப்படிப் பொருள் சொல்வது? என்று கேட்ட போதெல்லாம், இதற்குப் பொருள் இதுதான், இப்படிச் சிந்தித்துப் பார் என்று பல புதிய பரிமாணங்களை எனக்கு மருத்துவமாமணி டாக்டர் ஔவை மெய்கண்டான் அவர்கள் தான், ஒளி விளக்காக இந்த முழு முயற்சிக்கும் எனக்கு உறுதுணையாகக் கடந்த 22 படலங்களுக்கும் என்னை அவர் செதுக்கி வந்ததை நான் இங்குக் குறிப்பிடுவதற்குப் பெருமிதமடைகிறேன்.
மிகப்பெரிய நரம்பியல் நிபுணராக இருந்தாலும், தமிழ் கற்ற ஒரு பேரறிஞருடைய நிகரற்ற சிந்தனைக்கு உரிமையாளராகச் சித்தப்பா ஊட்டிய இந்த முயற்சிக்கு அவருக்கு நான் நன்றி பாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சித்தப்பா கைப்பட எழுதித் தந்த கருத்துக் கோவைகளை எந்த நேரத்திலும் முகம் கோணாமல் உடனுக்குடன் தட்டச்சு செய்து தந்த மொழிபெயர்ப்புப் பிரிவின் உதவிப் பிரிவு அலுவலர்கள் திருமதி அனிதாவுக்கும், திருமதி சித்ராவுக்கும் நான் நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன்.
அவ்வண்ணமே, நான் பேசிய இந்த ஒளியிழையை இரு பகுதிகளாகப் பதிவு செய்த என்னுடைய செல்வ மகள் ஆதிரையையும், அவற்றை ஒரே காணொலிப் பதிவாக நுட்பமாகச் செதுக்கித் தந்த அமெரிக்கவாழ் ஆசிரியப் பெருந்தகை திருமதி தேமொழி அவர்களையும் நெஞ்சாரப் பாராட்டக் கடமை பட்டுள்ளேன்.
இத்தொடரைத் தொடங்கும்பொழுது அண்ணாநகர் இல்லத்திலுள்ள தோட்டத்தில் அமர்ந்து நான் பேசிய பொழுது, என் அருகில் என் அம்மா இருந்து வாழ்த்தியதை நினைந்து நினைந்து உருகுகிறேன்.
எல்லாரைக் காட்டிலும் இன்றைக்கு இந்த நிறைவுரைப் பகுதியை என் அம்மா கேட்டிருந்தால் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள்.
அவர்களுக்கு என்மீது உள்ள ஒரே குறை நான் பேசுகிற கூட்டங்களுக்கு அவர்களை அழைத்துச் செல்வதில்லை என்பது ஒன்றுதான்.
பாரதியாருடைய தலைசிறந்த படைப்புகளில் தத்துவ நோக்கத்திற்காக எழுதிய குயில்பாட்டு நிறைவடைகிறது.
இன்னும் பல பாடல்கள் உள்ளது.
தெய்வீக உணர்ச்சிக்கான கண்ணன் பாட்டையும்,
தேசிய எழுச்சிக்கான பாஞ்சாலி சபதத்தையும்
நண்பர் கலைமாமணி சூரியப் பிரகாஷ் பாட நேர்ந்தால் அவருக்கு உறுதுணையாக விளக்கம் சொல்லக் காத்திருக்கிறேன் என்று சொல்லி அமைகிறேன்.
அருளின் குரல் வரிகள் 22
நிறைவுப்பகுதி
குயில் பாட்டு பாடுவோம்
குயில் பூர்வஜென்மக் கதையின் தொடர்ச்சியும் கதையின் முடிவும்
பெருமக்களே,
தெளிவு நிறைந்த மாமுனிவர் குயிலின் கதையைத் தொடர்கின்றார்:-
தொண்டை நாட்டின் ஒரு சோலையின் அந்த அரசன் மகன், உன் பழைய பிறவி காதலன், உன் குரலில் மயங்கி உன் பாட்டில் மனதைப் பறிகொடுத்துக் காதல் கொண்டு நேசம் ஊறி உன்னைத் தொடர்ந்து வருவான்.
ஆனால் அந்தக் காலத்தில் மோசம் செய்த பாவிகள் மாடனும் குரங்கனுமாய் வந்து பல மாய வித்தைகள் மூலமாகப் பொய்த் தோற்றங்கள் பல காட்டில் உன் காதலனைச் சந்தேகமுறச் செய்துவிடுவர்.
நீ , நயவஞ்சகி என நினைத்து விடுவார்.
உன் மீது வெஞ்சினம் கொண்டு உன்னை விட்டுச் சென்று விடச் சிந்திப்பார்.
அதற்குப் பின்னால் நிகழப் போவது நீயே கண்டு கொள்வாய் என மாலை நேரப் பூசைக்குச் செல்வதாகக் கூறிக் காற்றில் மறைந்து விட்டார்.
அவர் சொன்ன கதை அனைத்தையும் அப்படியே உங்களிடம் சொல்லி மாமனிதரே, என் காதல் உள்ளத்தைப் புரிந்து கொள்வீர், இல்லையேல் என்னை நீங்களே கொன்றுவிடுங்கள் எனச் சொல்லிக் குயில் கவிஞரின் கையில் விழுந்தது.
அந்தக் குயிலைக் கொல்ல மனம் வருமா?
பாரதி சொல்கிறார்,
பெண் என்றால் பேயும் இரங்காதோ! பேய்கள் தான் மாயங்கள் செய்து நம்மை மயக்கி உண்மையை மறைத்து விடுகின்றன.
காதலியர் இடையே உடலும் ஐயமும் வந்தாலும் நெடு நேரம் நிற்காது பெண்கள் அன்பாகப் பேசி விட்டால், பின் மனித மனம் தெளிந்து விடாதா என நினைத்துக் கவிஞர் கையில் குயிலை மென்மையாக மூடி முகத்தை அருகில் கொண்டு வந்து முத்தமிடுகிறார்.
அக்கணமே அற்புதம் ஒன்று நடக்கிறது.
ஆசைக் கடலின் அமுதாய் அற்புதத்தின் தேசமாய்ப் பெண்மையின் தெய்வீகமாய் அழகிய பெண்ணாக அக்குயில் மாறி நின்றது.
கண்ணிமைக்காமல் பார்த்த கவிஞர் பேருவகை கொண்டு சிலையாய் நின்றார்.
பெண் நாணி, சற்றே தலைக் குனிய அவள் அழகை வர்ணிக்கிறார்.
அவள் விழி அழகைப் பாடக் கவிதை இல்லை.
முத்தை யொத்த பற்கள்கனியிதழ் கிடைக்கும் நிலவோ, பூமிக்கு வந்து நேராய் நிற்கும் மீன் கொடியோ, அவள் மேனி அழகை மற்றவர்கள் எடுத்துச் சொல்ல வார்த்தை இல்லையே எனக் கவிஞர் கூறுகிறார்.
ஆனாலும் வர்ணிக்காமல் இருக்க முடியவில்லை.
மேலும் சொல்கிறார் கவிஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் புரியும் கவிதையின் கருத்தினைச் சாறாகப் பிழிந்து பண் பூத்த என்பவற்றின் இன்ப வெளிப்பாட்டைக் கலந்து அமுதத்தில் கரைத்துக் காதலெனும் வெயில் சூட்டில் காய வைத்து உருவான கட்டியவள் என்பேன் என்கிறார்.
அப்படிப் பிரம்மனால் படைக்கப்பட்ட அழகு மங்கையாய் அந்தக்குயில் உருமாறியது.
அத்தகைய நங்கை கவிஞரின் பழம் பிறவிக் காதலி என்ற உரிமை உள்ளூரக் கட்டித்தழுவிக் கல்லூறும் உதட்டில் முத்தமிட்டார்.
சித்தம் மயங்கியது மோகம் பெருகியது, கண்மூடி மயங்கிய பெண் விழித்துப் பார்க்கையிலே மங்கையின் மலர்ச்சோலை எல்லாம் மறைந்து போயின.
சுற்றிப் பார்த்தார்.
எழுதுகோல், சுவடி பத்திரிக்கை, கட்டுகள், பம்பாய் என அவரின் பழைய வீடு தான் எங்கும் தெரிந்தது.
ஓஹோ, இவை அனைத்தும் மாலை மயக்கத்தில் வந்த கனவுக் கற்பனை எனப் புரிந்தது.
அனைத்துமே அவரின் எண்ணத்தில் எழுந்த கவியும் கற்பனையும் கனவாய் வந்ததெனத் தெரிந்தது.
நம்மை அவர் வினவுகிறார் யாராவது நான் பார்த்த கனவின் உட்பொருளை உரைக்க இயலுமா?
வேதாந்தமாய் உணர்ந்து எடுத்துரைக்க மாட்டீர்களா?
என வினவிக் குயில் பாட்டில் பாரதி கேள்வியால் முடிக்கின்றார்.
குயில் பாட்டு கூறுவது என்ன?
இந்தக் கேள்வியின் முடிவைப் பதிலளிப்பதற்குக் கொஞ்சம் நாம் முயற்சிப்போம்.
பாரதியார் குயில் பாட்டில் வரும் உருவகங்களை அறிவதற்கு முன்னால் இக்கதையின் மாந்தர்களாக அவர் காட்டும் பாத்திரங்கள்.
1)பகற்கனவு காணும் பாரதியார்
2) கன்னி கோயில்
3) வானரமாம் குரங்கு
4)காளை மாடு
5)குயிலின் பிறப்பைப் பற்றிக் கூறும் பொதியமலை முனிவர்
6)குயிலின் முற்பிறவியின் தந்தை வேடர் தலைவன் வீர முருகன்
7) மாமன் மகன் மாடன்
8)தேன்மலை வேடர் தலைவன் மொட்டை புலியன்
9)அவளின் மூத்தமகன் நெட்டைக் குரங்கன்
10)சேரமான் மைந்தன்
11) அவன் அடுத்த பிறவியில் தொண்டைநாட்டு ஆழிக் கரையின் அருகே ஒரு பட்டணத்தில் தோன்றி இருக்கும் மானிடன் கவிஞர் பாரதி தன்னை இவ்வாறு கூறுகிறார்
12)மாடன் குரங்கன் இருவருமே காடுமலை சுற்றி வருகின்றனர் அண்ணியாகப் பிறக்கிறார் மாடன் குரங்கன் என்ற பேய்கள் மாயையினால் கன்னியை மீண்டும் குயில் ஆக்கிவிட்டனர்
14)கவிஞர் குயிலே கையிலெடுக்கக் குயில் தெய்வீகப் பெண்ணாக உருமாறுதல்
பாரதி, சோலை, குயில், காதல், பிறவி, பேய்கள் செய்யும் மாயை, கவிஞரின் கைபட்டு மீண்டும் அழகிய பெண்ணாதல் என ஒரு காதல் கதையைத் தேனினும் இனிய தமிழ்க் கவிதையைப் புனைந்துள்ளார்.
அக்கவியில் எழுதியவை அனைத்தும் “மாலையழகின் மயக்கத்தால் உள்ளத்தே, தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சி என்றே கண்டு கொண்டேன் எனக் கூறுகிறார்.
குயில் பெண்ணாக மாறிய பின் காதல் பெருமயக்கத்தில் சித்தம் மயங்கிச் சிலபொழுது பக்கத்தில் இருந்த பெண் மற்றும் பூங்கா அனைத்தும் மறைந்து விட்டன.
அவர் அறையில் இருக்கும் பொருட்கள் தெரிய வீட்டில் தான் உள்ளோம் என உணர்ந்தார்.
காதல் மனதில் இன்னும் நீங்காததால் உள்ளத்தில் தோன்றியது வெறும் கற்பனைக் கனவு எனக் கூறாமல் “கற்பனையின் சூழ்ச்சி” எனச் சொல்கிறார்.
அவர் பெண்மைதான் தெய்வீகம் எடுத்துரைக்க ஆசைக் கடலில் அமுதம், அற்புதத்தின் தேசம், தமிழ்ச் சொல்லில் அகப்படாத கவிதை, தூயசுடர் முத்து, பாரின் மிசை நின்ற கொடி எனப் பெண்மையின் அழகை ஆராதிக்கின்றார்.
குயில் பாட்டில் அவள் பெண்மையைக் காதலையும் காதல் தாண்டிப் பிறவி தோறும் தொடர்ந்து வருவது, காதல் அழிவில்லாதது உருவம் மாறினாலும் உள்ளம் மாறாதது என்பதை எல்லாம் எடுத்துரைப்பதாகத் தோன்றுகிறது.
கதையில் பூர்வஜென்மக் கதையின் அமைப்பு நமக்கு வடமொழியில் எழுதிய காதம்பரியை நினைவூட்டுகிறது என ‘புதுநெறி காட்டிய பாரதி’ என்ற நூலில் ஆர் கே கண்ணன் அவர்கள் குறித்துள்ளார்.
காதலா காதலா என்ற சூழ்ச்சியே தன் கவிச்சொற்களால் படிப்பவரை மாய உலகிற்கு அழைத்துச் செல்கிறார்.
கண்விழித்துத் தான் கண்டதெல்லாம் பிரமைதானா எனக் கதறி வீழ்கின்றார்.
பழவினை கட்டினால் மீட்டு என் மேல் காதல் கொள்வான் என்ற எண்ணத்தில் மேல் இக்கால நவீனக் கதைகளில் காணப்படும் எதார்த்தமும் மிகை கற்பனையும் நம் பழங்காலப் புராண இதிகாசங்களைப் போன்று அமைவதை அறியலாம்.
கேப்ரியல் கார்ஸியா மார்க்வெல் (GABRIEL GARTIO MARVEL), மாரியோ வார்காஸ் போன்ற நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர்களெல்லாம் தங்கள் புனைகதைகளில் இத்தகைய கற்பனையைப் பயன்படுத்துவதைக் காண்கிறோம்.
தன் வசனக் கவிதைகளின் மூலம் தமிழ் இலக்கியத்திற்குப் புதிய பாதை காட்டிய நம் கவிஞர் குயில் பாட்டின் மூலம் சன்யாசத்திற்கும் வழிகாட்டி இருக்கிறார்கள்.
கனவுகளைக் கணிப்பதைப் பற்றி உலகப் புகழ் பெற்ற உளவியல் நிபுணர் சிக்மண்ட் ப்ராய்ட் தன் அரிய ஆய்வு நூலில் (Interpretation of Dreams) ‘கனவுகள் முழுமையாகவே மாயை எனக் கூற முடியாது.
கனவில் திருடர்கள் வருவது போன்ற பயம் ஏற்பட்டால் திருடர்களின் உருவங்கள் மாயைகள் ஆக இருக்கலாம்.
ஆனால் மனதில் ஏற்படும் பயம் உண்மையானது’ எனக் கூறுகிறார்.
எனவே தான் பாரதியாரின் குயில் பாட்டில் வரும் மாயத்தோற்றங்கள் பொய்யானாலும் அக்கவிதையின் உள்ளிருக்கும் காதல் சத்தியமானது எனத் தெரிகிறது.
பாரதியின் புதிய அத்வைதம் காக்கையும் குருவியும் நிலக்கடலையும் மலையையும் மானிடத்தோடு இணைக்கிறது.
உருவங்களைக் கொண்டு பாரதி பறவைகளை இறைமையையும் தன் இதயத்தின் சூழ்நிலையையும் மனநிலையையும் நினைக்கும் உருவகங்களாகக் கொண்டு குயிலோடு காதல் கொண்டு உரையாடுகிறார்.
மனித, பறவையின் காதல் வேட்கை பரம்பொருளின் காதல் வேட்கை முழு வடிவம் பெறுகிறது.
குயிலின் நாதமும் காதலும் இணைக்கப் பட்டுள்ளன என மீராவின் பாரதியும் தொகுப்பில் டாக்டர் கே செல்லப்பன் குறிப்பிடுகிறார்.
குயிலின் இசையை வாழ்வு சக்தியின் உருவமாகக் காதல் பிரம்மத்தின் காட்சியாகப் படைப்புகளாகக் காட்டுகிறார்.
மாயையும் உண்மையில் நிழல் போலப் பாரதி படைத்துள்ளார்.
இறவாத அழகும் இறவாத காதலும் கற்பனையோடு இணைக்கப்பட்டுப் பறவை மனம் மாறினாலும் பல கடந்து வந்தாலும் நீங்காமல் நிலைத்து நிற்பது போல் உருவகிக்கிறார்.
பாரதியாலும் கீட்சின் குயிலுக்குப் புகழுரையாலும், கனவுலகமும் நனவுலகமும் மாறிக் மாறி காட்டப்பட்டுள்ளன.
பாரதியின் குயில் பாட்டில் ஆன்மாவின் காதல் கவிஞன் உருவகமாக ஒளிர்கின்றது.
பொன்னை நினைத்துக் குரல் பொங்கிவரும் இன்பம் ஒன்றே எனப் பாரதி கூறுவது மேலைநாட்டு நைட்டிங்கேல் பாட்டு காதல் துன்பத்தைக் குறிக்கும் என்பதற்கு எதிர்மறையாக எழுதியுள்ளார்.
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று தான் நம் கவிஞர் இறைவனுக்கு நன்றி கூறுவார்.
கண்ணன் என் கவி என்ற சிட்டி எழுதிய நூலில் குயில்பாட்டு பற்றிக் கூறும்பொழுது ஆங்கிலத்தில் கோல்ரிட்ஜின் ‘குப்லாகான்’ எத்தகையதோ அத்தகையது குயில் பாட்டு என்கிறார்.
இசை வடிவமாகிய காதல் என்றும் அது வாழ்க்கையுடன் உடல் சம்பந்தமற்று இருக்கும் வரை நிலையாது என்றும், வாழ்வின் சேர்க்கை நேர்கையில், துன்பம் தொடங்கி விடுகிறது என்று கவி கூறுகிறாரோ என எழுதியுள்ளார்.
பாரதி தன் குயில் பாட்டை, காதல் பாட்டாகவே எழுதி, வேதப் பொருளைக் கவிதையின் உட்கருவாகக் கொண்டு ஒரு ‘கவிதை கடலை’ நம் முன் காட்டியுள்ளார்.
Hello Friends,
Kuyil Pattu Paduvom – Episode 22
(final episode) uploaded today on YouTube channel ‘Suryaprakash’.
This final episode has been recorded solo, set in ragas desh, misra sivaranjani, kokilam, hamsanandi, kapi, gopriya (dream scale), suruti and madhyamavathi (the ending with Bharathi’s Thamizh Vaazthu)
Check out this episode in the link
and the previous episodes in the playlist link
Now the sage rejoined in grace,
O kuyil hear in a woodland wild amidst the palmy thonda realm,beguiled by thy song,thy prince of old would woo thee straight.
Then will the ghost with many a phantom sight soon make him doubt thy fidelity.
Thy lover would think thee treacherous and wish in ire to quite forsake thee ever.
what happens then yourself could see.
Ablution hour is on.
which said the great sage vanished into the air.great sages words,no lie,O lover fair
,I know not how thou deemed my tale,high born..requite my love or else to death Mr spurn.so saying she dropped into my hands.How dare to kill her?
Even ghosts they say do ever pity the weaker sex.if ghosts do work ,ah,cruel phantasies,how could we mark,them true?
Would linger doubts in love for long?
lives there a man who melts not at the song of a maidens love?
O amorously I took the rarest bird in hand and with a look.
All passionate her kissed the kuyil was seen no more..
O passing strange for the tongue of man
.O strange sweet amrit of the sea of love
.O wonder and romance!O beauteous brow of divine maidenhood!
There stood all charm .
A maid of rare delight!she glanced at my form and hung her head in timidity!
O gods!How could I melodize her charm in words?
O what could I sing?
of her enchane eyes,or of bewitching glance?
would words suffice to sing her charms?
Ah could I ever forget the moon sheen of her tooth soft pearly set playing upon her red,red lips?
O vain adequate to describe how like a queen of precious maids,a lightning flash on earth all luscious featured and of delicate girth she stood,sweeter than red,red honey in troth!
To the learned I tell.
Great Brahma seems to have wrought her blissful form with the juice a squeezed from the fruit.
Of poesy mixed with the amrit sweet and essences of song and dance and dried in loves sun shine!
this lovely maid I spied and steeped in ecstasy,her close embraced and her lips of odorous wine I kissed and kissed and lost myself in a depthless daze of love awhile
.Lo!the charming maid and the grove beside me vanished !
I screaming fell then,when I opened my eyes,
I saw before me pen and cadjan leaf of old and dailies lot,old mat and all those in the row I wot!and then perceived that I was on my cot!
The grove,the kuyil,love and poesy I spun I knew to be the phantasy of a brain enamoured of the sunset sweet!
O learned Tamil Bards,
though it be meet to deem this but a fantasy,will you not tell me if the slightest scope there be to expound this tale as vedic truths that be?

Add a Comment