என்னிதன் பண்பே !
மாக்கோதை சிந்திய கண்ணீர்
யாங்குப் பெரிது ஆயினும்,
நோய்அளவு எனைத்தே,
உயிர்செகுக் கல்லா மதுகைத்து அண்மையின்
கள்ளி போகிய களரியம் பறந்தலை ‘
வெள்ளிடைப் பொத்திய விளைவிறகு
ஈமத்து, ஒள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி ,
ஞாங்கர் மாய்ந்தனள், மடந்தை ,
இன்னும் வாழ்வல்
என் இதன் பண்பே !
– புறம் 245.
இன்றைய நாள் ( 10 – 12 – 2021 ) அறுபதாம் ஆண்டைய எங்கள்
திருமண நாளை நினைவூட்டுகிறது .
நெஞ்சில் அழல் மூட்டுகிறது .
ஆறுதல் எப்படிப் பெறுவது !
இல்ல விளக்கு பேரொளியில் கலந்துவிட்டாலும் தாராவின்
ஞான ஒளி தொடர்ந்து எங்களை வழி நடத்த வேண்டும் !
– ஒளவை நடராசன்

Add a Comment