“
28.12.1975…முரசொலி இதழிலிருந்து
தகுதியும் திறமையும்
வாய்ப்பாலும் வசதியாலும் வருவதே!
பிற்பட்டோர் நலனுக்கு உழைப்பது கழக ஆட்சியே!
மரபு பிறழா ஆட்சி தி.மு.கழக ஆட்சி”
கழக மாநில மாநாட்டில்
உரைவேந்தர் ஔவை துரைசாமி அவர்கள் ஆற்றிய உரை
27.12.75 அன்று நடைபெற்ற தி.மு.கழக மாநில மாநாட்டில் புரட்சிக்கவி பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்து ஔவை துரைசாமி பேசியதாவது:-
“தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் நிறைந்துள்ள இம்மாநாட்டில் கொள்கைக் குன்றாக இருந்த அய்யாமுத்து திறந்து வைத்து ஆற்ற வேண்டிய பணியை நான் ஏற்றுள்ளேன்.
கோவை அய்யாமுத்து அவர்களின் அரிய பணிவும் துணிவும் எப்போதும் நம் நினைவில் நிற்கின்றன.
அவர் போன்ற அஞ்சாமை கொண்டவர்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
புரட்சிக் கவிஞரோடு நெருங்கிப் பழகிய எனக்கு, இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
அவரது உயர்ந்த எண்ணங்களை நினைந்து மகிழ்கிறேன்.
“வெள்ளம்போல் தமிழர் கூட்டம்,
வீரம்கொள் கூட்டம்”
என்றார் பாரதிதாசன்.
அப்படிப்பட்ட கூட்டத்தை நான் இங்கே காண்கிறேன்.
கலைஞர் தலைமையில் இயங்கி வரும் இந்த அரசையும், ஆட்சியையும் பாராட்டாத பிற மாநிலத்தவரே கிடையாது.
“மரபு பிறழா ஆட்சி” என்று தொல்காப்பியர் கூறினார்.
அத்தகைய ஆட்சிதான் கழக ஆட்சி.
இனப்பற்றும், தமிழ்ப்பற்றும் தோன்ற உழைத்தவர்கள் தந்தை பெரியாரும்,அண்ணா அவர்களும், அவர்களது வழியில் கலைஞர் ஆட்சி நடைபெறுகிறது.
“தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்”
என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
அவ்வுணர்ச்சியைத் தமிழர்கள் காத்தல் வேண்டும்.
“தமிழாய்ந்த தமிழன் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்”
என்று பாரதிதாசன் பாடினார்.
அப்படிப்பட்ட தமிழாய்ந்த தமிழ் மகன்தான் முதல்வர் கலைஞர் அவர்கள்.”
—–+++++++++++++++++++++++++++
தகுதியும் திறமையும் வாய்ப்பாலும் வசதியாலும் வருவதே வருவதே!
பிற்பட்டோர் நலனுக்கு உழைப்பது கழக ஆட்சியே!
மரபு பிறழா ஆட்சி
தி.மு.கழக ஆட்சி
கழக மாநில மாநாட்டில் ஔவை துரைசாமி உரை
தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்து வரும் கழக ஆட்சி மரபு பிறழாமல் நடைபெற்று வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையாரும், உரைவேந்தர் ஔவை துரைசாமியும் கழக மாநில மாநட்டில் முறையே தந்தை பெரியார் படத்தையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தையும் திறந்து வைத்துப் பேசும்போது குறிப்பிட்டனர்.
மாநில மாநாட்டில் 27.12.75 அன்று பிற்பகல் நிகழ்ச்சிகள் 2 மணிக்குத் தொடங்கின.
எழுச்சிமிகு 72 என்ற கலை நிகழ்ச்சிக்குப் பிறகு பல குரலரசு முருக பாண்டியனின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
பின்பு திருவுருவப் படத் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வெள்ளுடைவேந்தர் தியாகராயர் படத்தை பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரையார் திறந்து வைத்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படத்தை ஔவை துரைசாமியும்,
டாக்டர் அம்பேத்கர் படத்தை திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையாரும் திறந்து வைத்தனர்.
தியாகராயர் படம்
வெள்ளுடைவேந்தர் தியாகராயர் படத்தைத் திறந்து வைத்து பன்மொழிப் புலவர் கா. அப்பாத்துரையார் பேசியதாவது:-
அரசியல் பணி, மக்கள் பணி என்று இருவகைப் பணிகள் உண்டு.
மக்களுக்கு நன்மை செய்யும் மகத்தான பணியைச் செய்து வருவது தி.மு. கழகம்.
திராவிடர் இயக்கத்தில் முக்கியமானவர் தியாகராயர்.
அவர் காங்கிரசுக் கட்சி பிறக்குமுன்பே பிறந்து மக்களுக்குப் பாடுபட்டார்.
மக்களின் நல்வாழ்வே முக்கியம் என்று கருதியவர் அவர்.
இந்தியாவில் முதன்முதல் தோன்றிய அரசியல் கட்சி ஜஸ்டிஸ் கட்சியாகும்.
அதிலிருந்து உதித்த திராவிடர் கழகமும், தி.மு.கழகமும், சமுதாய மேம்பாட்டுக்கு மகத்தான பணிகளைச் செய்து வருகின்றன.
பாவேந்தர் பாரதிதாசன் படத்தைத் திறந்து வைத்து ஔவை துரைசாமி பேசியதாவது:-
“தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் நிறைந்துள்ள இம்மாநாட்டில் கொள்கைக் குன்றாக இருந்த அய்யாமுத்து திறந்து வைத்து ஆற்ற வேண்டிய பணியை நான் ஏற்றுள்ளேன்.
அய்யாமுத்து அவர்களின் அரிய பணிவும் துணிவும் எப்போதும் நம் நினைவில் நிற்கின்றன.
அவர் போன்ற அஞ்சாமை கொண்டவர்தான் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.
புரட்சிக் கவிஞரோடு நெருங்கிப் பழகிய எனக்கு, இந்நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது மகிழ்ச்சியைத் தருகிறது.
அவரது உயர்ந்த எண்ணங்களை நினைந்து மகிழ்கிறேன்.
“வெள்ளம்போல் தமிழர் கூட்டம், வீரம்கொள் கூட்டம்” என்றார் பாரதிதாசன்.
அப்படிப்பட்ட கூட்டத்தை நான் இங்கே காண்கிறேன்.
கலைஞர் தலைமையில் இயங்கிவரும் இந்த அரசையும் ஆட்சியையும் பாராட்டாத பிற மாநிலத்தவரே கிடையாது.
“மரபு பிறழா ஆட்சி” என்று தொல்காப்பியர் கூறினார்.
அத்தகைய ஆட்சிதான் கழக ஆட்சி.
இனப்பற்றும், தமிழ்ப்பற்றும் தோன்ற உழைத்தவர்கள் தந்தை பெரியாரும் அண்ணா அவர்களும், அவர்களது வழியில் கலைஞர் ஆட்சி நடைபெறுகிறது.
“தமிழை இகழ்ந்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்” என்று பாவேந்தர் பாரதிதாசன் பாடினார்.
அவ்வுணர்ச்சியைத் தமிழர்கள் காத்தல் வேண்டும்.
“தமிழாய்ந்த தமிழன்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சாய் வருதல் வேண்டும்” என்று பாரதிதாசன் பாடினார்.
அப்படிப்பட்ட தமிழாய்ந்த தமிழ் மகன்தான் முதல்வர் கலைஞர் அவர்கள்.”

Add a Comment