POST: 2021-05-28T10:48:25+05:30

அரவிந்தம் உதிர்ந்தது

எவ்வளவு ஆறுதல் எழுதினாலும் நெஞ்சப் பதைப்பு நீங்காது.

வளர்த்ததெல்லாம் இப்படி வஞ்சகக் கூற்றுவனுக்கு இரையாக்குவதற்கா!

வாழ்வில் முதல் இயல் முடிவதற்குள்ளே அரவிந்தன் கதை முடிந்துவிட்டதா! (18 4 1987 – 24 5 2021)

அமுதசுரபி இதழாசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அறிவுத் திண்ணம் நாடறிந்தது.

அந்தத் திண்மையைத் தகர்ப்பதா!

எவரைச் சொல்லியும் குற்றமில்லை.

காலம் செய்த கோலம்!

கண்ணீர் தான் அரவிந்தனுக்குப் பின் சென்ற ஊர்வலம்
முனிவரோடு வனம்
போவதைத் தாங்க முடியாத தயரதன் தவிப்பு படித்தேனே தவிர இப்போது உணர்ந்தேன்.

பெயரிலும் அழகு,
பேச்சிலும் அழகு.
இந்த ஓவியம் இப்படிக் கலைவதா!

துயரத்தோடு…..

ஒளவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *