தாங்கொணாத் துயரம்! …
தங்கள் பாத கமலங்களில்
என் கண்ணீர் அஞ்சலியை
இதன் மூலம் தெரிவிக்கிறேன் .
திருமதி டாக்டர் .” தாரா ” நடராசனுக்கு அஞ்சலி
ஆறுதல் சொல்பவர் யார் ?
1.தாரா எனும்பேரைக் கொண்டவரே ! நல்லதொரு
தாரமாய் வந்தபின் வாழ்வதனில் – சீரான
தாயாக மூவர்க்கும் ,பின்நட ராசர்க்கும்
தாயாய் இருந்தீரே நன்கு .
2.குழந்தை மருத்துவம் பார்த்திட்டீர் , நன்கு
குழந்தை மனம்கொண்ட ” ஒளவை – அழகான
பேச்சால் அனைவர் போற்றிடவே , நற்பணி
மெச்சவும் செய்தீரே நன்கு .
3.ஒளவை நடராசன் தேகம் குன்றியகால்
ஒளவைக்கு ஏற்ற உணவிது – ஒவ்வா
உணவிது என்றே தினந்தோறும் தேர்ந்து
உணவிட்ட அன்னையே நீர் !
4.தாரமாய்த் தாயாய் இணைந்திட்டீர் வாழ்விலே
வாராது வந்த மணியாம்நீர் – தீராத
ஆறாத் துயர்தனில் வாழ்கின்ற ஒளவைக்கு
ஆறுதல் சொல்பவர் யார் ?
அன்பு மறவாத
கலியன் சம்பத்து.

Add a Comment