POST: 2020-10-06T11:03:18+05:30

தினமணி நாளிதழில் 30.9.2020 அன்று வெளியான மொழிபெயர்ப்பு நாள் குறித்து
வெளியான கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்து ….

அருமை

” மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் ” துணைக் கட்டுரை படித்தேன்.
ஒரு மொழியிலுள்ள மூலநூலின் கருத்தையும் ,உணர்வையும் – மிகைப்படுத்தாமலும் , குறைத்து விடாமலும் மற்றொரு மொழிக்குக் கடத்துவதே நல்ல மொழிபெயர்ப்பு .
ரஷ்ய எழுத்தாளர்கள் பலரையும் நாம் மொழிபெயர்ப்பின் மூலமே அறிந்தோம் .
மராத்திய மொழி எழுத்தாளரான காண்டேகருக்கு அவருடைய தாய்மொழியைவிட பிற மொழிகளிலேயே குறிப்பாக தமிழில் அதிக வாசகர்கள் இருந்தார்கள் என்பது மொழிபெயர்ப்பின் அருமையை உணர்த்துகிறது .

– மா .அரங்கராசன்
கும்பகோணம் .

இன்றியமையாதது

” மொழிபெயர்ப்பு முழு வெற்றி பெறட்டும் ! ” துணைக்கட்டுரை படித்தேன்.இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதன்முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது என்ற செய்தி வியப்பும் மகிழ்வும் அளித்தது .சுத்தானந்த பாரதியார் மொழிபெயர்ப்பு செய்த ” ஏழை படும் பாடு ” புதினம் அக்காலத்தில் எல்லாக் கல்லூரிகளிலும் நாடகமாக நடிக்கப்பட்டு பெரும் புகழ் பெற்றது .எந்தவொரு மொழிபெயர்ப்பாளரும் இருமொழிப்புலமை பெற்றிருத்தல்
இன்றியமையாதது .ஒரு நூல் எவ்வளவு தான் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டாலும் அது மூலத்தைவிட சிறந்ததாக இருக்கவே முடியாது .

கா .சதானந்தன் ,தென்காசி .

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *