POST: 2020-06-20T10:23:47+05:30

” சிவகங்கை வள்ளுவர் இலக்கியப் பேரவையின் சார்பில்
மூன்றாம் ஆண்டுக் குறள் விழாவில் – உரைவேந்தர். ஒளவை சு.துரைசாமி
அவர்கட்குக் கவிஞர் மீரா பாடியளித்த மணிவிழாப் பாராட்டிதழ் ” .1963

*ஆண் ஒளவை

வையைநதிக் கரையினிலே வளமுண் டாக்கி
வருகின்ற வாரிதியே ! கண்ணில் தீட்டும்
மையைவிடக் கறுப்பான மனவி ருட்டை
மாய்க்கின்ற கதிரவனே ! பசுவின் தூய
நெய்யைவிட மணமுள்ள குறட்க ருத்தை
நெடுஞ்செழியன் நிலமிருந்து வழங்கி இந்த
வையகத்தை வாழ்விக்கும் மழையே ! என்றும்
வளர்கின்ற துரைசாமி மலையே ! வாழ்க !

தரைவேந்தர் வேலாட்சி குறைந்த போதும்
தமிழ்வேந்தர் கோலாட்சி மறைந்த போதும்
உரைவேந்தர் நூலாட்சி உயரக் கண்டோம் ;
உண்மையிலே உளங்குளிர்ந்தோம் ! தன்நாட்டில்தான்
வரிவேந்தர் புகழ்செல்லும்; சங்கப் பாட்டு
வரிவேந்தர் தங்கள் புகழ் முத்துத் தூங்கும்
விரிகடலுக் கப்பாலும் செல்லும்; தெற்கில்
வீசும்சந் தனக்காற்றும் வாழ்த்துச் சொல்லும் !

உங்கள்நற் பிறப்பறிந்த பின்னர் தானோ
உ. வே. சா இளைப்பாறச் சென்றார் ? ஐயா !
உங்கள் சிந் தனைவளத்தை நம்பித் தானோ
ஒளிநெஞ்சர் திரு. வி.க உறங்கச் சென்றார் ?
உங்கள் நா வன்மையினை நம்பித் தானோ
உயர் ச. சோ, பாரதியார் அமைதி கண்டார் ?
உங்கள் முத் தமிழ்ப்புலமை நம்பித் தானோ
உரைகாரர் அனைவருமே ஓய்வெடுத்தார் ?

பயனுள்ள வரலாற்றைத் தருவதாலே
பரணர்தான்; பரணர்தான் தாங்கள் ! வாக்கு
நயங்காட்டிச் செவிக்குத்தேன் தருவ தாலே
நக்கீரர் தான் தாங்கள் ! இந்த நாளில்
கயல்மன்னர் தொழுதமொழி காப்ப தால் – தொல்
காப்பியன்தான் ! காப்பியன்தான் தாங்கள் ! எங்கும்
தயங்காமல் சென்று தமிழ் வளர்ப்ப தாலே
தாங்கள் அவ்-ஒளவைதான் ! ஒளவை யேதான் !

அதியன்இன்(று) இங்கில்லை : இருந்தி ருந்தால்
அட்டாவோ ஈதென்ன விந்தை ! இங்கே
புதியதொரு ஆண்ஒளவை எனவி யப்பான்
பூரிப்பான்; மகிழ்ச்சியிலே மிதப்பான் ; மற்றோர்
அதிமதுரக் கருநெல்லிக் கனிகொ ணர்ந்தே
அளித்துங்கள் மேனியினைக் காத லிக்கும்
முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது கன்னி
மொழிவளர்க்கப் பல்லாண்டு வாழ்க என்பான்

=========================================
English version by Professor S.A.Sankara Narayanan,
Best Translator Awardee Govt of Tamilnadu

1
O, Ocean of God’s Plenty on banks of Vaikai’s!
O, Radiant Sun quelling murk darker than kohl-eyes!
O, Rain of kural from Nedunchezhian’s purlieu
balmier than Ghee! Hill-high Doraiswamy, Long Live you!

2
When spear-rulers were myths and Sceptres Time beguiled
saw we you Sir Exegete surge. True, ‘Fortune Smiled’!
Kings’ get local tributes.O, Cankam Exegete!
Thy tribute sailed pearl-seas vast. Sandal breeze does greet!

3
Scoping thy star didn’t U Ve Sa repose in peace?
Sure of you didn’t Tiru Vi Ka close eyes at ease?
For thy words didn’t Sa So Bharathi leave in peace best?
For thy triple Tamil, didn’t scholars sit in trust?

4
ParaNar of Cankam are you, Neo-ParaNa!
Judging honey of era are you, Nakkeera!
Fish-Flag Kings’ Tamil’s TolkAppiya, Epic grandeur!
Where’er you went Sapphic Avvai spoke.That Avvai sure!

5
Here isn’t Atiyan.Who may you be, won’t he wonder?
Delve in three cheers, for you fetch once more, a tender
berry sweet in love, halt age, give it merrily
and hail:’Live Long Sire in Virgin Tamil’ won’t he?

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *