POST: 2020-04-16T10:07:30+05:30

நம்மோடு இருந்த நாயரின் பிரிவு
==============================

தமிழக அரசின் ஜீ யு போப் விருது பெற்றவரும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் முழுமையாக மலையாளத்தில் மொழி பெயர்த்த 82 வயது பெரியவர் சந்திரசேகர் நாயர் 11.4.2020 சனிக்கிழமை இரவு திருவனந்தபுரத்தில் காலமானார்.

பழுத்த புலமையார்,பழகுற்கு இனிமையானவர்
உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் அவருடன் உரையாடி இருக்கின்றேன்.

என் தாத்தாவின் அருட்பா உரைகளை படித்து உணர்ந்து மலையாளத்தில் மொழி யாக்கம் செய்ய பெரிதும் உதவியது என்றார்.

நீங்கள் கேரளம் வரும்போது என் இல்லத்தில் தங்க வேண்டும் என்றார். அவருடைய திருமகள் சைலாஜாவுக்கும் மொழி பெயர்ப்பு ஆர்வம் அமைந்ததை பற்றி பெரிதும் கூறினார்.

அவரை எனக்கு அறிமுகம் செய்த ஆசிரியர் குறிஞ்சி வேலன் இத்துயரத்தில் ஆழ்ந்திருப்பது
குறிக்கத்தக்கது.

— முனைவர் ந.அருள்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *