===============================================
பாரதியார் 138ஆம் பிறந்தநாள் பெருவிழாவில் பாரதி இலக்கியக் கழகத்தில் வந்த அனைவருக்கும் விருந்து நூலாக வழங்கிய “பாரதி 366”
===============================================
கவிப்பேரரசின் கரும்பு வரிகள்
=============================
அறிவுப் பரம்பரையின் அருள்
***************
மனித இனத் தொடர்ச்சியில் மரபணுக்களின் வினைப்பாட்டுக்கு எடுத்துக்காட்டு மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் .தமிழின் நெடும்பரம்பரையின் நீட்சி அவர்.
உரைவேந்தர் என்று தமிழுலகம் உச்சிமேற்கொண்டு உவந்து கொண்டாடும் அறிஞர் பெருமகன் ஒளவை துரைசாமி அவர்களாவார் , முனைவர் ஒளவை அருள் அவர்களின் பாட்டுத் திறனறிந்த பாட்டனார் ஆவார்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தராகத் திகழ்ந்த தமிழாய்ந்த மேடைகளில் இணையில்லா வேந்தராகத் திகழ்கிற அறிஞர் திருமகன் முனைவர் ஒளவை நடராசன் அவர்கள் அருள் அவர்களின் தந்தையார் ஆவார்.
பாட்டனாரின் மரபறிவும், தந்தையாரின் புத்தறிவும் கூடிப் பெற்ற திறமும் உரமும் வாய்க்கப்பெற்ற முனைவர் ந.அருள் அவர்கள் வினாவிடை வடிவில் எழுதியிருக்கும் இந்த பாரதியார் பனுவல் ஆய்வுலகத்தின் அணிகலனாகவும், அறிவுலகத்தின் படைக்கலனாகவும் திகழத்தக்கது.
விரிந்த எண்ணம் – பரந்த பார்வை – செறிந்த மொழி – சிறந்த வடிவம் என்பனவற்றால் உங்கள் வினா விடைத்தொகுப்பு உயர்ந்து விளங்குகிறது.
ஆட்சித்துறையில் தமிழ் வளர்க்கும் அருமைக்குரிய அருள் இன்று, தமிழ் உலகத்தின் அறிவடையாளங்களுள் ஒருவராக அறியப்படுகிறவர்.
இந்த நூல் அவரது மாட்சிக்குச் சாட்சி.
விளம்பரமே தேவையில்லை. இது ஏற்கெனவே தேன்கூடு;நான்வேறு ! சர்க்கரை தெளிக்கவேண்டுமா என்ன ?
வளர்பிறை மகனாகிய உங்கள் அறிவாற்றலைப் பாராட்டுகிறேன் .
தமிழ் நீளும்; நாளை உலகை ஆளும்
என்ற நம்பிக்கை பெறுகிறேன்.
வளர்பிறை வாழ்த்துக்கள்.
—– வைரமுத்து
சென்னை
26.01.2020
மலையாள மொழியாக்கம்
…………………………………..
திருமதி அஜிதா பர்ணபாஸ்
உதவிப் பிரிவு அலுவலர்,
மொழிபெயர்ப்புத்துறை
കവി ചക്രവര്ത്തിയുടെ തേന്വരികള്
അറിവു പരമ്പരയിലെ അരുള്
മനുഷ്യന്റെ ഈ ശൃംഗലയില് ജീനുകളുടെ പ്രതികരണത്തിന്റെ ഒരു ഉദാഹരണമാണ് തമിഴ്നാട് സര്ക്കാരിന്റെ വിവര്ത്തന വിഭാഗത്തിലെ നിര്വാഹകനും ഗവേഷണബിരുധദാരിയുമായ ന.അരുള്. ഇദ്ദേഹം തമിഴിലെ ഒരു വലിയ പാരമ്പര്യത്തിന്റെ പിന്ഗാമിയാണ്.
പ്രശസ്ത പ്രാസംഗികന്എന്ന് തമിഴ്നാട്കൊട്ടിഘോഷിക്കുന്ന വിദ്ധ്വാന്അവ്വൈ.ദുരൈസാമി ന.അരുള്അവര്കളുടെ മുത്തച്ഛനാണ്. തമിഴ് സര്വ്വകലാശാലയിലെ മുന് സര്വ്വകലാശാലാധിപതിയും,തമിഴ് നിറഞ്ഞ സദസുകളില്ആരോടും ഒപ്പിടുവാന് സാദ്ധ്യമല്ലാത്ത വിദ്ധ്വാന് അവ്വൈ. നടരാജന് ഇദ്ദേഹത്തിന്റെ പിതാവാണ്.
മുത്തച്ഛന്റെ ജീനും അച്ഛന്റെ വൈദഗ്ദ്ധ്യവും കൂടിച്ചേര്ന്ന ന.അരുള്അവര്കള് ചോദ്യോത്തര രീതിയില് എഴുതിയിട്ടുള്ള മഹാകവി ഭാരതിയാരിന്റെ ഈ കവിതകള് ഗവേഷണലോകത്തിനു ഒരു ആഭരണമായും അറിവു ലോകത്തിനു ആയുധമായും ശോഭിക്കും എന്നതില്സംശയമില്ല.
പരന്നചിന്ത, ദീര്ഘവീക്ഷണം സ്പഷ്ടമായ ഭാഷ, മികച്ച രൂപഭംഗി എന്നിവയാല്താങ്കളുടെ ഈ പുസ്തകം ഉയര്ന്നു നില്ക്കുന്നു.
ഭരണവിഭാഗത്തില് തമിഴ്ഭാഷയെ പരിഭോഷിപ്പിച്ചു വരുന്ന ന.അരുള്ഇന്നു തമിഴ് സാഹിത്യത്തിലെ ഒരു അടയാളമായി വിളങ്ങുന്നു.
അദ്ദേഹത്തിന്റെ മഹത്വത്തിനു സാക്ഷ്യമായ ഈ പുസ്തകത്തിനു പരസ്യം ആവശ്യമില്ല. ഈ തേന്കൂട്ടില് ഞാന് മധുരം തെളിക്കേണ്ട ആവശ്യമുണ്ടോ?
ദിനംപ്രതി വളര്ന്നു വരുന്ന നിങ്ങളുടെ ഈ കഴിവിനു എന്റെ ആശംസകള്.
തമിഴ് വളരും; നാളെ ലോകത്തെ ഭരിക്കും….എന്ന വിശ്വാസം കൊള്ളുന്നു.
വളര്പിറൈ ആശംസകള്……..
വൈരമുത്തു
ചെന്നൈ
26.01.2020.

Add a Comment