POST: 2020-01-23T10:11:53+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப் பெற்ற வாழ்த்துகள்
=============================================
(வாழ்த்து – 235)

வணக்கம்.

இன்றைய தமிழ் இந்து நாளிதழில் தங்களின் மிக அறியக் கட்டுரையைப் படித்தேன். தமிழைச் செய்மையாக்க, வளமையாக்க, நமது முன்னோடிகள், எத்துணை உழைத்திருக்கின்றனர் என்று அறியும்போது மனம் விம்முகிறது. பல அரிய தகவல்களை இன்று அறிந்தேன். தங்கள் பேனா முனையில் இருந்து பல அரிய கட்டுரைகள் வந்துக் கொண்டிருக்கின்றன. இந்தப் பணியில் என்னையும் இணைத்துக்கொண்டால் பங்களிப்பு செய்வேன். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இலக்கியங்களில் ஏராளமான சொற்களைக் கடந்து வந்திருக்கிறேன். அகராதியியல் ஆழ்ந்த விருப்பு கொண்டிருக்கிறேன். அது தொடர்பாக சில நூல்களையும் பயின்றிருக்கிறே.ன அருள்கூர்ந்து இணைத்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
மெய்ஞானி பிரபாகர பாபு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *