இந்த நாள் இனிய நாள் !
======================
இந்த நாள் இனிய நாள்.
எனக்குச் சிறந்த நாள்.
என் வாழ்க்கை தலைவியார் தாராவின் பிறந்தநாள்.
நாங்கள் திருமண மக்களாகி அறுபது ஆண்டுகள் நிறைவுற்றன.
என் தலைவியார் வேடிக்கையாகச் சொல்வார்கள்,
‘எனக்கு நான்கு பிள்ளைகள்.
மூன்று பிள்ளைகளையும் முயன்றவரை வாழ்வில் உயர்த்தியிருக்கிறேன்.
நான்காம் பிள்ளைதான் இன்றும் என்னால் முழுவதுமாகத் திருத்த முடியவில்லை.
என்னைத்தான் மாற்றியிருக்கிறார் .
என் நெஞ்சுக்கு நிறைவு தரும் இந்நன்னாள்,
ஆண்டுதோறும்,
பொன்னாளாக மலரட்டும்.
வந்தாரா நடராசர் என வழிபார்த்துக் காத்திருந்தால்,
என் தாராவுடன் வந்தேன் என்று வந்தவரே !
தலைமைக்கு உவந்தவரே
தமிழ்போல வாழ்பவரே !!
என்ற அப்துல் இரகுமானின் வாழ்த்து வரிகளை
நான் எப்போதும் எண்ணி மகிழ்கிறேன்.
—– முனைவர் ஔவை நடராசன்

Add a Comment