POST: 2019-05-04T07:48:37+05:30

நாளிதழில் இடம்பெற்ற கட்டுரைக்கு வரப்பெற்ற வாழ்த்துகள்!
============================================
(வாழ்த்து – 123)

வணக்கம் ஐயா.

தமிழ் இந்து நாளிதழில் தங்கள் கட்டுரை படித்தேன். சிலம்பொலி ஐயா அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை. ஒரே செய்தி. அந்தப் பிரச்சாரகர் என்ற சொல்தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது. பிராச்சாரம் என்ற சொல்லை இன்று ஊடகங்களே பரப்புரை என்று பயன்படுத்தி வரும்போது, நாம் தமிழ்ச்சொல் பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

///// பேராசிரியர் முத்துவேலு.

***********************************************************************
பேராசிரியர் முத்துவேலு அவர்களுக்கு,

“செந்தமிழ்க்கு புகழ் தேடிய சிலம்பொலிச் செல்வம்” என்பது என் தலைப்பு
ஆனால், தமிழ் இந்து ஆசிரியர் குழு அந்த தலைப்பை இவ்வாறு மாற்றிவிட்டார்கள் என்று பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்களுக்கு தெரிவித்திருந்தேன். அதற்கு அவர் எழுதிய பதிலுரை…..

அருமை.
ஔவையின் பிள்ளை,
உரைவேந்தரின் பேரன்,
புலமையின் உறைவிடம்
எங்கள் அருள்
ஏற்றமெலாம் பெற்றுத்
தலைமைச்சீர் பெற
வாழ்த்துகிறேன்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *