POST: 2019-04-01T13:46:34+05:30

பாரிசுக்குப் போகலாம் !
==========================

வையகம் புகழும் வான்புகழ் கொண்ட பிரான்சு நாட்டின், கலைகளின் தலைநகரமாகிய பாரிசு மாநகரில், அரசுசெயலாளர், தமிழ் வளர்ச்சி – உலகத் தமிழாராய்ச்சி இயக்குநர் – நான் ஆகிய மூவரும் கடந்த நான்கு நாள்களாகப் பேராசிரியர் சச்சிதானந்தத்தின் பேரன்பில் திளைத்தபடிப்
பதினெண்கீழ்கணக்கு நூல்களின் மொழியாக்க நிறைநிலை ஆய்வு நிகழ்ச்சியில் பங்கு கொண்டோம்.

சொல்லுக்குச் சொல் பொருள் காணும்
உயராய்வில் பிரெஞ்சு மொழிக்கு சிறப்பான இடமுண்டு.

அரசியல் நுணுக்கத் திறத்தை வரைந்து காட்டுவதற்கு பிரெஞ்சு
மொழியைத் தான் பயன்கொள்ள
வேண்டும் என்பார்கள்.

நோபல் பரிசு அறிஞர்கள் வீதிக்கு ஒருவர் என்று சொன்னால் மிகையாகப்
படலாம். ஆனால்
அதுவெறும் புகழ்ச்சியில்லை.

அறிவியலையும் கலைகளையும் இரண்டு
கண்ணாக வளர்க்கும் திறம் பிரான்சு நாட்டின்பெருமிதமாகும்.

தமிழர்கள் மகிழ்ச்சியாகக் குடிபெயர்ந்து
வாழ்வதுடன் தம் பங்காக இலக்கியப் பணிகளையும் ஆற்றிவருகின்றனர்.

குறைந்தது ஒரு திங்களுக்கு இருபது
தமிழ் இதழ்களும் ஆண்டுக்கு இருநூறு மொழிபெயர்ப்பு ஆக்கங்களும்
உருவாகின்றன.

பாரிசு என்பதன் ஈற்றெழுத்தை அவர்கள்
ஒலிப்பதில்லை. பரி மாநகரம் போய் வந்தேன் என்றுதான் சொல்வார்கள். எங்கும் விடுதலை, எவரிடத்தும் தோழமை,
எந்நிலையிலும் உடன்பிறப்பு
உணர்ச்சி இந்த மூன்று மலர்களின் மணம் வாழ்வில் வற்றாத மணம் கமழ வைக்கின்றன.

அங்கு எடுத்த ஒளிப்படங்கள் உங்கள்
கண்களுக்கு முன் வைக்கப்படுகின்றன

—– அருள்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *