============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 258)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 5)
***************************************************************
(ஏப்ரல் 16, 1997)
தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்
=======================================
1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் சட்டம் எண் 9-ல் வரையறை செய்யப்பட்டதற்கு இணங்க உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் தமிழியல் உயர் ஆய்வு மையமாகச் செயற்பட்டு வருகிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் அன்றைய தேவைக்கேற்ப பல குறிக்கோள் களை முன்வைத்து இப்பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக் கழகம் கீழ்க்காணும் கொள்கைகள் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றது.
1. தமிழ் மொழி, இலக்கியம் ஆகிய பொருள்கள் பற்றிய உயர்
ஆய்வினைச் செயற்படுத்தல்.
2. இந்திய நாட்டிற்குள்ளும், உலகெங்கிலும் தேவைப்படுவோர்க்குத்
தமிழ் மொழியினைக் கற்பித்தல்.
3, கலை, பண்பாடு, இசை, அரங்க நாடகங்கள், ஓவியம், சிற்பம்,
கட்டடக்கலை, இலக்கியம், இலக்கணம், மொழியியல், வரலாறு, சமயம், தத்துவம், புவியியல், மண்ணியல், வானியல், கடல்வழி அறிவியல் மற்றும் கப்பலியல், சோதிடம், சித்த மருத்துவம், பொறியியல் மற்றும் கைவினைப் பொருளியல் போன்றவை பற்றிய ஆய்வுகளைத் தமிழ் மொழி மற்றும் இலக்கிய ஆதாரங்களை முன்வைத்து ஊக்குவித்தலும், நெறிப்படுத்தலும்.

Add a Comment