============================================
மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
(பகுதி – 257)
============================================
முனைவர் ஔவை நடராசன்
—————————————————
தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நான் பணியாற்றியபோது, தமிழ் வளர்ச்சித்துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தமிழ்ப்பல்கலைக் கழகம் குறித்து இடம்பெற்ற குறிப்பு…..
(தமிழ்ப்பல்கலைக் கழகம், தஞ்சாவூர் பகுதி – 4)
***************************************************************
(ஏப்ரல் 27, 1995)
தொல்பொருள் ஆய்வுத்துறை
===============================
தொல்பொருள் ஆய்வுத்துறை, தமிழகத்தில் பண்டைய வரலாற்றுச் சின்னங்களைக் காத்தோம்பும் நோக்கத்தில் 1961 இல் உருவாக்கப்பெற்றது. தமிழகத்தில் 78 வரலாற்று நினைவிடங்கள் தொல்பொருள் ஆய்வுத்துறையால் தெரிவு செய்யப் பெற்றுக் காக்கப் பெறுகின்றன. மதுரை திருமலை நாயக்கர் அரண்மனை, தஞ்சாவூர் அரண்மனை தரங்கம்பாடி கோட்டை, இராமநாதபுரம் இராமலிங்க விலாசம், சரபேந்திர ராஜப்பட்டினம், மனோரமா முதலிய இவற்றுள் முதன்மையானவை.
காப்புப் பிரிவு
===============
2. 1995-ம ஆண்டு சனவரித் திங்களில் தஞ்சாவூரில் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் மாநாட்டினையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சரித்திரப் புகழ் மிக்கதும், தொல்லியல் சிறப்பு வாய்ந்ததுமான நான்கு கட்டடங்களான ஆயுத கோபுரம், மணிக்கோபுரம், சார்ஜா மாடி, மராட்டா தர்பார் மண்டபம் ஆகியவை பழுது பார்க்கும் பணிக்கென ரூ.156 இலட்சம் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

Add a Comment