மணிமாறன் மறைந்தார்
==========================
நண்பர் மணிமாறன் மறைந்த செய்தி பெரிய துயரம் தருகிறது. அமுதம்போல் பேசி நாட்டு மக்களுக்கு நல்லுணர்வு ஊட்டி வந்த பேராசிரியர் இளம்பிறை மணிமாறன் அவல வெள்ளத்தில் ஆழ்ந்துபடுகின்ற பெரிய இழப்புக்கு என்ன ஆறுதல் கூற முடியும் ?
மனம் கோணாத இணையர்களாகப் பல்லாண்டுகளாக நெருங்கி வாழ்ந்த ஒப்பற்ற துணைவர்களாக வாழ்ந்தார்கள்.
மணிமாறன் பல நிலைகளில், பல கலைகளில் வல்லவர்.
அச்சுக்கலை தெரிந்தவர்.
கணக்கியல், ஆரூடம் அறிந்தவர்.
சித்த மருந்துகளையும் தெரிந்து என்னுடைய நீரிழிவுக் கலக்கத்துக்கு பலமுறை மருந்து கூறியவர்.
பழகுதற்கு இனிய பண்பாளர்.
பேராசிரியர் இளம்பிறையின் பெரும் புகழுக்கு நிழலாகவே இருந்து அவர் மறைந்துவிட்டார்.
வாழ்வு என்பது ஒரு நாள் இணையாக இருந்தவர்களையும் தனியாகப் பிரித்து விழுங்கி விடும் என்ற கூற்றுக்கு யாரும் விதிவிலக்காகவில்லை.
அருமைத் தங்கை அறிவுத் திலகம் இளம்பிறைக்கு தாம் பெற்ற சிந்தனையே பெரும் துணையாக இருந்து ஆறுதல் அளிக்க வேண்டுகிறேன்.
—- ஔவை நடராசன்

Add a Comment