மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-213
—————-
என் மகனைப் போல உள்ள வழக்கறிஞர் கண்ணன் தன்னுடைய அறிவாற்றலால் மேலோங்கி அமெரிக்க நாட்டிற்கு இருபதாண்டுகளுக்கு முன்பே சென்று மாபெரும் பல்கலைக்கழகங்களில் பயின்று முன்னாள் மத்திய அமைச்சர் திரு.சசி தரூர் அவர்கள் மூலம் ஐ.நா. அவையில் பணியாற்றுகின்ற பெருமிதம் வாய்ந்தவர்.
அவர், தமிழைத் தேன் போல பேசுவதிலும் ஆங்கிலத்தை பழம்போல் எழுதுவதிலும் வல்லவர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு, Remembering Anna என்ற தலைப்பில் ஓர் அழகான ஆங்கிலப் புத்தகத்தை வெளியிட்டார்.
அண்மையில் MGR, A LIFE என்ற நூலை பென்குவின் பதிப்பகத்தின் மூலம் புதிதாக பொலிவாக்கம் செய்யப்பட்டுள்ள கலைவாணர் அரங்கத்தில் ஒரு திருவிழா போல நடத்தி வெற்றி பெற்றார். ஏறக்குறைய 500 பக்கங்கள் உள்ள நூல் அது. அதில் தன்னுடைய முன்னுரையில் என்னைப் பற்றி எழுதும்போது
Tamil Savant, Civil Servant and Public Speaker Dr.Avvai Natarajan took me under his wing and mentored me in public speaking with fatherly affection என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த நூலில், எம்.ஜி.ஆர். விரும்பி நடித்த படங்களின் பாடல்களை மிக அருமையாக ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். அதனை நான் படித்து மகிழ்ந்தேன். அந்த பாடல்களை உங்களிடம் பகிர்ந்தளிக்கிறேன்.
ஒளிவிளக்கு படத்தில் இடம்பெற்ற பாடல்…..
========================================
இறைவா உன் மாளிகையில்
எத்தனையோ மணி விளக்கு
தலைவா உன் காலடியில்
என் நம்பிக்கையின் ஒளி விளக்கு
நம்பிக்கையின் ஒளி விளக்கு
ஆண்டவனே உன் பாதங்களை
நான்கண்ணீரில் நீராட்டினேன்
இந்த ஓருயிரை நீ வாழ வைக்க
இன்று உன்னிடம் கையேந்தினேன்..முருகையா…
(ஆண்டவனே)
பன்னிரண்டு கண்களிலே ஒன்றிரண்டு மலர்ந்தாலும்
என்னிரண்டு கண்களிலும் இன்ப ஒளி உண்டாகும்
உள்ளமது உள்ளவரை அள்ளித் தரும் நல்லவரை
விண்ணுலகம் வாவென்றால் மண்ணுலகம் என்னாகும்
(ஆண்டவனே)
மேகங்கள் கண் கலங்கும் மின்னல் வந்து துடி துடிக்கும்
வானகமே உருகாதோ வள்ளல் முகம் பாராமல்
உன்னுடனே வருகின்றேன் என் உயிரைத் தருகின்றேன்
மன்னன் உயிர் போகாமல்
இறைவா நீ ஆணையிடு
இறைவா நீ ஆணையிடு…..ஆணையிடு
இறைவா….இறைவா….இறைவா….
There are many lamps in your palace, oh God,
But the jeweled one at your feet
Is the light of my belief.
Oh Lord,
I washed your feet with tears.
To make his life last,
Today I beg you
Murugaiyaa.
Of your twelve eyes,
If one or two show grace,
There would be happiness in my eyes,
The person who reigns in your hearts,
The good one who gives bountifully,
If the heavens beckon him,
What would happen to this earth?
The clouds would shed tears,
And lightning writhe in pain,
Won’t the sky melt, if the patron’s face is not seen?
I am going with you to trade my life for his,
You should now command,
That our king’s life be spared.”

Add a Comment