மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-204
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-40)
===========================================
19.12.84: மாற்று சிறுநீரகம் பொருத்தப்படுகிறது- புரட்சித் தலைவருக்கு, பெரியவர் சக்ரபாணி மகள் லீலாவதி சிறுநீரகம் கொடுத்து உதவுகிறார். 3 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து முடிகிறது!
24.12.84: பொதுத் தேர்தலின் அனைத்திந்திய அண்ணா தி.மு.க வெற்றி!
மூன்றாவது முறையாகப் புரட்சித் தலைவர் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2.2.85: புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சென்னை வருகை பரங்கிமலை இராணுவ மைதானத்தில் தமிழகமே வரவேற்கிறது அதிகாலையில் தலைவரைக் காண முதல் நாளிலிருந்தே மக்கள் கூட்டம் அலைமோதியது முதல்வராகப் பதவியேற்பு!
25 ஆயிரம் பேருக்கு வேலை. ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி. சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி
13.7.1986: எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் மாநாடு. மதுரையில் கூடியது. புரட்சிச் செல்விக்கு எம்.ஜி.ஆர் மீண்டும் முக்கியத்துவம். கொள்கை பரப்புச் செயலாளராக ஊர்வலத்தைத் துவக்கி வைத்தார்.
புரட்சித் தலைவர் மனம் திறந்து பாராட்டு! இரண்டாவது நாள் ஆறு அடி நீளமுள்ள தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோல் முதல்வர் எம்.ஜி.ஆரிடம். புரட்சிச் செல்வி வழங்கினார்.
செப்-1986: அமெரிக்காவுக்குப் புரட்சித் தலைவர் பயணம், மருத்துவப் பரிசோதனை முடிந்து திரும்பினார்.
அக்டோபர்-1986: புரட்சித் தலைவரே கழகப் பொதுச் செயலாளரானார் ஆட்சியின் சாதனைகள்
ஜூலை 1987: கடற்கரைக் கூட்டம். புரட்சித் தலைவருக்குப் பிரதமர் ராஜீவ் காந்தி புகழ்மாலை!

Add a Comment