POST: 2018-04-09T07:23:22+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-195
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

ரங்கசாமி அய்யங்கார் குடும்பம். நெல்லூர் புறப்படுதல்! பெங்களூர் வந்து ஒரு வீட்டில் வசிப்பது! மனைவி கமலம்மாளிடம் ரங்கசாமி அய்யங்கார் உரையாடல். சீனிவாசன், வேதா (சத்யா), அம்புஜம் (வித்யாவதி), பத்மா ஆகியோர் கொண்ட குடும்பம். விமானத் தொழிற்சாலை Accountant ஆக வேலை பார்ப்பதைச் சித்தரிப்பது.

மைசூர் அரண்மனையில் அரசக் குடும்பத்துக்கு டாக்டரான ரங்காச்சார் பெரும் செல்வந்தர். அவர் மகன் ஜெயராமுக்குச் சந்தியா(வேதா) 11 வயதில் திருமணம். ஜெயராம், தந்தை மறைவுக்குப் பின் வரவு இல்லாமல் பெரும் செலவு செய்து, கடனாளியாதல்.

சந்தியா பெங்களூருக்குத் தந்தை வீட்டுக்கு வருதல். ஜெயலலிதா பிறப்பு! இரண்டு வயதில் ஒருகாரில் தந்தையின் உயிரற்ற உடல் துணியில் சுற்றி வைக்கப்பட்டிருப்பதை மங்கிய விளக்கொளியில் குழந்தை ஜெயலலிதா பார்க்கிறார். தந்தை குடும்பத்துக்குப் பாரமாக இல்லாமல் பெங்களூரில் சந்தியா வேலைக்குப் போகிறார். ஜெயலலிதா கான்வெண்ட்டில் படிக்கிறார்.

‘கற்கோட்டை’ படத்தில் கதாநாயகியாக நடிக்கக் கெம்பராஜ் அழைப்பு. தந்தை ஆசாரமிக்கவர் என்ற பயத்தில் சந்தியா மறுப்பு. விமானப் பணிப்பெண்ணாக இருந்த சந்தியா தங்கை வித்யாவதி, ‘என்வீடு’ படத்தில் வி.நாகையாவுடன் நடிக்கிறார். தன் சகோதரியையும் சென்னைக்கு அழைக்கிறார். சந்தியா சென்னை வருகை.

‘கற்கோட்டை’ கன்னடப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறார். சென்னையில் மகன் ஜெயகுமார், மகள் ஜெயலலிதாவைப் படிக்க வைக்கிறார். சர்ச்பார்க் கான்வெண்ட்டில் படிப்பு.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *