POST: 2018-02-15T11:07:37+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-168
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

ஆண்:
———-
நாடு பூராவும் இதைத்தான் புள்ளே அதிசயமா பேசிக்குது! எம்.ஜி.ஆர் நடந்தால் ஊர்வலம்; நின்றால்….. பெருங்கூட்டம்; பேசினால்….. மாநாடு! அவர் வர்றாருன்னாலே சனங்க கூட்டம் அலைமோதும். அதனாலேதான் அவருக்கு மக்கள் திலகம்னு பேரு. புரட்சித் தலைவர் முகத்தைப் பார்க்கணுமுன்னா தமிழ்நாடு என்ன, இந்தியாவே இங்கே இருக்குமே!

பெண்:
———-

ஏனுங்க…….. இவ்வளவு பேரு மனசிலே இடம் புடிக்கிறதுன்னா… அது சாதாரணமா? அவரைப் பெத்தவுங்க பெரும் புண்ணியம் செஞ்சிருக்கனும்….

ஆண்:
———-

ஹூ…ம்… அவுங்க மட்டுமா? நாமும் தான், இல்லேன்னா அவரு முதலமைச்சரா வருவாரா?

ஒரு சிறுமி:
——————

அப்பா…..! முதலமைச்சர் எம்.ஜி.ஆரோட அப்பா… அம்மா…. யாருப்பா?

ஒரு சிறுவன்:
———————-

சொல்லுங்கப்பா…! அவரைப்பத்தி முழுக்கத் தெரிஞ்சிக்கணும்னு ஆசையா இருக்குப்பா….

ஆண்:
———-

(சிரித்தபடி பாடுகிறார்)
சின்னப்பயலே சின்னப்பயலே
சேதி கேளடா…… நான்
சொல்லப்போகும் வார்த்தையை நன்றாய்
எண்ணிப்பாரடா………
நீ எண்ணிப்பாரடா!
ஆளும் வளரணும்
அறிவும் வளரனும்
அது தான்டா வளர்ச்சி….

சிறுவன்:
———-

உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு – அதுவே (பாடுகிறான்) நீ தரும் மகிழ்ச்சி
பெண்:
———-

இப்பிடி புத்தி சொல்லிப்பாட இப்ப யாரு இருக்காங்க…… அவரு மாதிரி! முதல்வர் எம்.ஜி.ஆரு பொறந்தது, வளர்ந்தது, வாழ்ந்தது மத்தவுங்களை வாழவைச்சது…….. பூரா விவரத்தையும் புரியும் படியா சொல்லுங்க……………….

சிறுமி:
———-

சொல்லுங்கப்பான்னா………..

ஆண்:
———-

சர்க்கரைப் பொங்கலைச் சாப்பிட்டாதான் இனிக்கும். அவரைப்பத்தி நினைச்சாலும், சொன்னாலும் நெஞ்சமெல்லாம் இனிக்கும். அயோத்தியிலே பிறந்த ராமன் சரிதத்தை அழியாத காவியமா படைச்சான் கம்பன். நம்ப ராமச்சந்திரன் தானே சரித்திரமும், காவியமுமாகத் திகழ்கின்றார். நம்ப எம்.ஜி.ஆர் பிறந்த ஊரு இலங்கையிலே உள்ள கண்டி. அவுங்க அப்பா பேரு மருதூர் கோபாலன். இதைத்தான் ‘எம்.ஜி’ என்று இனிஷியலாகச் சொல்கிறோம். அவுங்க அம்மா பேரு சத்தியப் பாமா.

பெண்:
———-

மருதூர் கோபாலன்னு சொல்றீங்க…! அப்புறம் கண்டியிலே எம்.ஜி.ஆர். பிறந்ததா சொல்றீங்களே…!

ஆண்:
———-

அவசரப்படுறியே…! மருதூர் கோபாலன் அது தான்.. எம்.ஜி.ஆரு அப்பா இங்கே திருச்சூர், அரூர், எர்ணகுளத்தில் மேஜிஸ்ட்ரேட்டா இருந்திருக்காரு. நீதிக்கும், நேர்மைக்கும் புறம்பா நடக்கும்படி வற்புறுத்தியிருக்காங்க…..!
அப்படிப்பட்ட வேலையும் வேண்டாம், இந்த ஊர்களும் வேண்டாம்னு உதறித்தள்ளிவிட்டு இலங்கைக்குப் போனாரு, அவுங்க அப்பா!

பெண்:
———-

வாத்தியாரு நடிச்ச படத்துக்கு ‘நீதிக்குத் தலைவணங்கு’ன்னு பேரு கூட இருக்கே! அவுங்க அப்பான்னா……. எப்படி இருப்பாரு? நீதியும் நேர்மையும் அப்பா…. சத்யம் தான் தாய்!

ஆண்:
———-

அங்கே கண்டியிலே கல்லூரி முதல்வராக மருதூர் கோபாலன் இருந்திருக்காரு. அவர் பேராலே அங்கே ஒரு தெரு கூட இருக்குதாம். எம்.ஜி.ஆர் கூடப் பொறந்தவுங்க நாலுபேர். மூத்த அக்காள் பெயர் காமாட்சி. அடுத்துப்பிறந்தவர் பாலகிருஷ்ணன். மூன்றாவதாகப் பிறந்தவர் சுமித்ரா. நான்காவதாகச் சக்ரபாணியும், ஐந்தாவதாக எம்.ஜி.ஆரும் பிறந்தனர். பாலகிருஷ்ணனும், சுமித்ராவும் இலங்கையிலே கோபாலனும், சத்யபாமாவும் இருக்கும் போதே இறந்துவிட்டனர்.

பெண்:
———-

அட..டா… பரிதாபமே…!

ஆண்:
———-

எம்.ஜி.ஆருக்கு அப்போது இரண்டு வயசு. அவுங்க அப்பா கோபாலன் எதிர்பாராவிதமாக உடல்நலமின்றிக் காலமானார். ஹூம்…. அவரு.. தன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொத்து சுகம் எதையும் விட்டுச் செல்லவில்லை. நல்லவர் குடும்பம் என்ற மரியாதையும், மதிப்பும் மட்டுமிருந்தது. சத்யபாமா உறுதிமிக்கவர். குழந்தைகளை அழைத்துக் கொண்டு குமுறும் இதயத்துடன்… கணவனுடன் இலங்கை சென்றவர், தனியாகத் திரும்பினார். நெருங்கிய உறவினர் எவராவது உதவி செய்வார்கள் என்று எதிர்பார்த்தார். எல்லோரும் விலகிச் சென்றனர். குழந்தைகளைக் காப்பாற்ற ஒரு பிராமணக் குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தார். பலரைத் தனக்குப் பணிபுரிய வைத்திருந்தவர், பிள்ளைகளுக்காக உழைப்பது என்ற முடிவிற்கு வந்தார். அங்கே……. தனது கைக்குழந்தையான எம்.ஜி.ஆரையும் எடுத்துச் சென்றார். அப்போது…………

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *