மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-137
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
வார்த்தை சித்தராக விளங்கிய வலம்புரிஜான் அவர்கள் மனம் உருகி புரட்சித்தலைவருக்கு ஒரு புகழாரம் சூட்டினார்கள். எழுதி முடித்ததும் என்னிடத்தில் காட்டிய பகுதி அதை அப்படியே மீளவும் வெளியிடுவது வலம்புரிக்கும் புரட்சித்தலைவருக்கும் உகந்த பாராட்டுரையாகும்.
———————————————————————————–
இதே தமிழகத்தில் நமது கண்களுக்கும் முன்பாக வாழ்கிற போதே ஒருவர் வரலாராகிறார்! அவர்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்!
அவர் நடிக்க ஆரம்பித்தபோது, நான் நடக்கவே ஆரம்பிக்கவில்லை. ஏன் பிறக்கவே இல்லை.
இப்போது இவைகளைப் பற்றி நான் எழுதுவது என்பது பல்லி முட்டை பறந்து போகிற வானம்பாடி பற்றி பாட்டுப் பாடுவதைப் போலிருக்கிறது.
பாரவோன் மன்னர்களை, பாபிலோனிய நாகரிகத்தைப் பற்றி இப்போது எழுதுகிறவர்கள் அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அல்ல.
படைப்பாளி என்பவன், தான் பிறந்திராத காலத்தில் நடந்தவைகள் மீதும் கருத்துச் சொல்லுகிற உரிமை படைத்தவன். அதுவே இந்த எழுத்துக்கு அடிப்படை,
புரட்சித் தலைவர் ஒரு சகாப்தம். சினிமாவில் சகாப்தமாக இருந்தவர்; இப்போது அரசியலில் சரித்திரமாகிக் கொண்டிருக்கிறார்.

Add a Comment