POST: 2017-11-14T15:05:08+05:30

================================================
நேரு பெருமகனாரின் பொன்மொழிகளை நினைந்து
போற்றுவோம் (14.11.2017)
================================================

செயலுக்கு முன்பேயே விளைவுகள் பற்றி எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகு தூரம்

கலை என்பது ஒரு காலத்து மக்களின் வாழ்க்கை நிலைகளையும், நாகரீகத்தையும் காட்டக்கூடிய நம்பகமான கண்ணாடி

வருங்காலம் என்பது வரலாறாக எழுதப்படுவதற்கு முன் வாழ்ந்து தீரப்பட வேண்டிய காலமாகும்

ஒருவரைத் தனிமைப்படுத்தி விடுவது என்பது அவருக்கும், நாட்டுக்கும் அபாயகரமானது

என்ன சொல்லுகிறாய் என்பது முக்கியமல்ல
என்ன செய்கிறாய் என்பதுதான் முக்கியம்

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கிற மனிதனே
உலகில் மகிழ்ச்சியாக வாழ்கிற மனிதன்

பட்டினியில் வாடும் மனிதருக்கும்
வறுமையில் மூழ்கிய நாட்டுக்கும் சுதந்திரம் என்பது
பொருளற்ற சொல்

உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துக்கொள்ளாத எந்த ஆன்மாவும் கடவுளுக்கு நெருக்கமாக இருக்க முடியாது

காலம் ஏற்றதாகவும், சூழ்நிலை துணை செய்வதாயும் இல்லாவிட்டால் தான் மேற்கொண்ட பெரிய சாதனையில் வெற்றி பெற முடியாது

குழந்தைகளை வளர்க்கும் முறையைப் பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் உருவாகிறது.

நாம் இணைந்து வாழாவிட்டால் அடுத்து நாம் அழிவது உறுதி

வன்முறை மோசமானதுதான். ஆனால், அடிமைத்தனம் வன்முறையைக் காட்டிலும் மிகவும் மோசமானது

ஒரு விஷயத்தை நிரந்தரமாக நியாயப்படுத்த முடியாது. அது காலத்துக் காலம் நாட்டுக்கு நாடு வேறுபடும்.

சுதந்திரமும் சமாதானமும் ஒன்றையொன்று பிரிக்க முடியாது. எங்கே சுதந்திரம் தட்டிப் பறிக்கப்படுகிறதோ அங்கே சமாதானத்துக்கு ஆபத்து ஏற்படுகிறது

தன்னலம் இல்லாமலும் அனைவரின் நலனுக்காகவும் பிறருடன் கூடி உழைக்கும் மனிதனே நாகரிகத்தின் சின்னமாவான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *